கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேரை அம் மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து செம்மரம் வெட்டுபவர்களை கண்காணிக்க காவல்துறை, வனத்துறையினர் சேர்ந்து சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேர் கைது செய்யப்பட்டனர். கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை, பத்வேல், பொதத்தூரில் 83 பேரை வனத்துறை கைது செய்தது. கைதான தமிழர்கள் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள். கைதானவர்களிடம் இருந்து 42 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இராவணன்
நாயுடு ராம தமிழர்களை அழிக்க புறப்பட்டான்.
….. இப்பொழுது அப்பாவிகளுக்காக அழுவதா? அல்லது அடப்பாவிகளை திட்டுவதா ?
தமிழ் நாட்டு அரசு என்ன புடிங்கி கொண்டொஇருக்கறது என்றே புரிய வில்லை — மானம் ஈனம் சொரணை அற்ற ஈனங்கள்