சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது.
விலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார் நடத்திய சோதனையில் இறைச்சிக்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த பல பூனைகள் மீட்டக்கப்பட்டுள்ளது.
தற்போது, மீட்க்கப்பட்டுள்ள பூனைகள் செங்குன்றம் பகுதியில் விலங்குள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், பூனை கறி பயன்படுத்தும் கடைகளை கண்டறிய பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-http://news.lankasri.com
https://youtu.be/RDSMLuzprz8