ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களை அழித்த சிசிடிவி காட்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ளார்.
ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இந்திய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.கே. உபாத்யாய் குறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் பேசியதாவது, சர்வதேச எல்லை பகுதியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களை குறி வைத்து இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற் கொண்டனர்.
இதில் கிட்டதட்ட 14 பாகிஸ்தான் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், இதில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்களின் எண்ணிக்கை குறித்து பதிலளிக்க அவர் மறுத்துள்ளார். அதே சமயம், அதிக அளவிலான பேர் உயிரிழந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
-http://news.lankasri.com
https://youtu.be/UdSSNaW-YJs