ஜெயலலிதா இறப்பில் மர்மம்: சுப்ரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி

subramaniyan_002பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது.

இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் தான் அவர் இறப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற தவறுகளை விசாரித்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த மர்மம் நீடித்தால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என கூறிய அவர், ஜெயலலிதாவின் சொத்துக்கு அவர் குடும்ப உறுப்பினர்கள் தான் வாரிசாக முடியும் என தெரிவித்துள்ளார்.

பாஜக கட்சி அதிமுகவை உடைக்க சதி செய்வதாக கூறுவதில் உண்மையில்லை என கூறிய சுப்ரமணிய சுவாமி, அதிமுக வை உடைக்கும் திறமை தன்னிடம் உள்ளதாகவும், ஆனால் அப்படி செய்ய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: