சென்னை: தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைப் பார்த்து உயிரிழக்கும் விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை பி.ஆர். பாண்டியன் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 33 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்தால் வறட்சி மாநிலமாகத்தான் அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. அதுகுறித்த சிக்கல்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து நீரின்றி கருகும் பயிர்களால் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகிவிட்டது.
எனவே, தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க அரசு குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும். தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதற்கான நெருக்கடியை மாநில அரசு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவைக் கேட்டோம். போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திராவிடகட்சிகளைதலையிலேதூக்கிவெச்சி
கிரகாட்டம்ஆடுங்கடா.
இந்தியா உருப்பட வேண்டும் என்று அங்கு யாருக்குமே அக்கறை கிடையாது– பக்கத்து சீனிவாசன் 1962 ல் உதைத்தது போல் இன்னொருமுறை உதைத்து நாட்டை ஆக்கிரமித்தால் தெரியும் –ஏனென்றால் இந்த முறை ஆக்கிரமித்த இடத்தை விட்டுக்கொடுக்கமாட்டான். சுத்த கம்மன்னாட்டிகள். திரைப்படங்களில் உதைத்தால் தானே புத்திவருகிறது-அது போல் தான். ஆனால் அங்கு அது நடக்காது- ஜனநாயகம் என்ற போர்வையில் அறிவோடும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு என்ன வரவேற்பு கிடைத்தது? அங்குள்ள தமிழர்களுக்கு சொரணை கிடையாது–அத்துடன் தங்களை தமிழர்கள் என்று கூறவே விருப்பம் கிடையாது. விஜய்-தொலைக்காட்சியில் வரும் நீயா நானா என்ற நிகழ்ச்சியை பார்த்தல் புரியும்– அத்துடன் மற்றதொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை பார்த்தால் தெரியும்– வல்லரசு ஆக வேண்டும் என்பதில் தவறு இல்லை ஆனால் அடிப்படை வசதியே இல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் அவதியுறும் நாடு இந்தியா. பேசவே எரிகிறது.
இந்தியா உருப்பட வேண்டும் என்று அங்கு யாருக்குமே அக்கறை கிடையாது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் தமிழ் நாடு உருப்படும் என்பது தமிழனின் அறிவிலித்தனம்.
Anonymous V wrote on 20 December, 2016, 10:44
கூத்தாடிகளுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவைபோல் தமிழ் பற்று பற்றி பேச சொல்லி கொடுக்கவா வேணும்.
இரண்டரை மணி நேரம் தமிழ் பற்று பேசும் கூத்தாடிகளை ௦ தமிழன்-தமிழ் உணர்வு உள்ளவன் ௦ என்று தாங்குவதை தமிழன் நிறுத்தினாலே போதும் பாதி முன்னேறி விடுவான்.
தமிழர்கள் என்றைக்கு கூத்தாடிகளை வைத்து ௦ தூக்கி தூக்கி ௦ படம் காண்பிப்பதை நிறுத்துகிறார்களோ அன்றுதான் தமிழர்களிடையே தமிழ் உணர்வு விழிப்புணர்ச்சிக்கு முதல் வெற்றி எனலாம்.
பேருதான்தமிழ்திரைப்படம்.தெலுங்கன்.கன்னடன்.மலையாளிகள்தமிழன் என்றமுகமூடியை
அணிந்த கூத்தாடிகளின்தமிழூணர்வுகேனை
யனைபுல்லரிக்கவைக்கும்.பால்அபிசேகம்
செய்வான் KLகத்தேதிரையரங்குமுன்.
நாம்தமிழர்ஆட்சிக்குவந்தால்.பச்சைதமிழன்
காமராஜர்ஆட்சிபோல்ஏன்இருக்காது.பிள்ளை
பறக்கும்முன்பெயர்வைப்பதுஅறிவிலித்தனம்.
ஐயா anonymous அவர்களே அப்படி என்றால் தெலுங்கன் மலையாளீ கன்னடன் எல்லாரும் தமிழ் நாட்டை ஆண்டு உருப்படி இல்லாமல் ஆக்கினால் சரி -ஆனால் தமிழனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது? தமிழனின்(!) அறிவார்ந்த சிந்திக்கும் திறன். ஐயா பாரதி உன் கனவு கனவுதான்.
en thaai thamizh கூத்தாடிகளை நம்பியதால்தான் தமிழ்நாடு இந்த நிலைமையில் இருக்குகிறது. கூத்தாடிகள் இரண்டரை மணி நேரம் சினிமாவைப்போல் தமிழ்/தமிழ் பற்று/தமிழ் உணர்வு என்று ஆண்டதைத்தான் பார்த்து விட்டோமே. அதனால்தான் கூத்தாடி/கூத்தாடி தொழில் சாராத ஒரு தமிழன் வர வேண்டும் என்கிறேன்.
அலை ஓசை நாம்தமிழர்ஆட்சிக்குவந்தால்.பச்சைதமிழன்
காமராஜர்ஆட்சிபோல்ஏன்இருக்காது.பிள்ளை
பறக்கும்முன்பெயர்வைப்பதுஅறிவிலித்தனம் என்கிறீர்.
தற்போதுள்ள முதலமைச்சர் பன்னீர் செல்வம் அல்லது முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று சொல்லப்படும் சசிகலா இவர்களும் பச்சை தமிழர்கள்தானே. ஏன் இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாது.
பச்சைதமிழன் காமராஜர் ஆரம்பித்து வைத்த “இலவசம்”தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு.
முதலமைச்சர்பன்னீர்செல்வம்-சசிகலா
இருவரும்ஊழல்என்றகோடியில்புரளும்
கோமான்கள்.பச்சையல்லகொச்சைதமிழர்கள்
இலவசம்அல்லமதிய உணவுதிட்டம்.பள்ளிக்
கூடம்இருக்கிற ஊர்களிலும்கூட எல்லாக்குழந்
தைகளும்படிக்கப்போவதுஇல்லை.ஏழை
பிள்ளைகள்வயிற்றுப்பாடுபெரும்பாடாஇரு
க்கிறது.ஒருவேளைகஞ்சிகிடைத்தால்போதும்
என்றுஆடு.மாடுமேய்க்கப்போய்தங்கள்
எதிர்காலத்தைபழாக்குகிறார்கள்.ஏழை
பிள்ளைகளைபள்ளிக்குவரச்செய்வதே மதிய
உணவுதிட்டம்.எண்ணும்எழுத்தும்கண்ணெனத்தகும்ஒளவைபாட்டி.கண்ணுடையர்என்பவர்
கற்றோர்முகத்திண்டு பண்ணுடையர்கல்லாத
வர்.திருக்குறள்.இலவசம்என்றுவியாக்கியாம்
செய்வதுமொட்டைதலைக்கும் முழங்காலுக்கு
ம்.முடிச்சுபோடுவதுபோல்இருக்கு.
ஐயா Anonymous அவர்களே– கூத்தாடிகளை நம்பியது யார் தவறு? என்னைப்பொறுத்தமட்டில் நல்ல தமிழன் ஆட்சியில் இருப்பதே வரவேற்க வேண்டியது. நான் எப்போது பிறக்கும் முன்பே பேர்வைப்பது அறிவிலித்தனம் என்று கூறினேன்? நான் கூறியது தமிழ் பெயர்களை இப்போது பார்ப்பதே அரிது– வடக்கத்தியன் பெயர்களே முக்கியமாக உபயோகத்தில் இருக்கிறது. தமிழுக்கு மரியாதை இல்லை. யார் மடத்தனம் செய்திருந்தாலும் தவறு தவறே.
Anonymous – கூத்தாடி/கூத்தாடி தொழில் சாராத ஒரு தமிழன் வர வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறேன் ஆனால் பச்சைதமிழன் காமராஜர் ஆரம்பித்து வைத்த “இலவசம்”தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்பதை ஏற்க முடியவில்லை. காமராஜர் ஆரம்பித்து வைத்த இலவசத்தை கூத்தாடிகள் இலவச+கூத்தாடி தமிழ்நாட்டை இந்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
பச்சைதமிழன் காமராஜர் ஆரம்பித்து வைத்த இலவசத்தை ஊழல் என்று கொச்சை படுத்துகிறீர்களே அலை ஓசை.
அய்யாபேருஇல்லாதவரே.அன்றையசூழ்
நிலையில்லட்சக்கணக்கானகிராமப்புற
பிள்ளைகளின் கல்விகண்ணைதிறந்வர்
காமராஜர்.அரசுநிதி ஒதுக்கீடுசெய்துமதிய
உணவுதிட்டத்தைஆரம்பித்யார்.இலவசம்
ஊழல்என்பதுஉங்கள்கருத்து.இலவசம்
ஊழல்என்று காமராஜரைகொச்சைப்படுத்தி
எப்போஎழுதினேன்.மீண்டும்படித்துகோடிட்டு
கண்பியுங்கள்.
முதெல்லே உன் பெயரை எழுதுடா! அது என்ன anonymous? விதை இல்லனா இங்கே வராத.உன்னை மாதிரி 10 பெரு anonymous ன்னு எழுது வான் எவன் எதை எழுதினான்னு எப்படி தெரியும்?
en thaai thamizh அவர்களே, நமது முன்னோர்கள் மற்றும் தற்பொழுது தொப்புள் கொடி உறவு என்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது உறவுகள், கூத்தாடி/கூத்தாடி தொழில் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு கொடுத்த தவற்றை மீண்டும் புரிய கூடாது என்றுதான் கூற வருகிறேன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் கூத்தாடி/கூத்தாடி தொழில் சார்ந்தவர்களுக்கு அரசியல் ஆதரவு தருவதை நிறுத்தினாலே போதும், நாம் எதிர்பார்க்கும் திறமையுள்ள, தூரநோக்கு சிந்தனையுடைன் கூடிய சிறந்த ஆட்சி தர கூடிய தமிழன் நிச்சயம் கிடைப்பான்.
நாம் எதிர்பார்க்கும் திறமையுள்ள, தூரநோக்கு சிந்தனையுடைன் கூடிய சிறந்த ஆட்சி தர கூடிய தமிழன் தமிழ்நாட்டின் அரசியலில் இல்லாததற்கு காரணமே இந்த சினிமா மோகம்தான். தமிழ்நாட்டு மக்களிடம் குடிகொண்டிருக்கும் இந்த சினிமா மோகம் ஒழிந்தால்தான் தமிழ்நாட்டிற்கே விமோசனம்.
இலவச மீன் கொடுக்கக்கூடாது– மீன் பிடிக்கக்கற்று கொடுக்கவேண்டும்– இதுதான் சரி— கையேந்தும் கலாச்சாரம் நம்மிடையே ஊறி போய் இருக்கிறது — சுய பச்சாதாபம் நம்மவர்களிடையே அதிகம். ஏற்பது இகழ்ச்சி என்று கூறி இருந்தாலும் -அது பிச்சை மட்டுக்கும் பொருத்தம் அல்ல இக்கால கட்டத்தில் எதர்க்கும்பொருந்தும்- சில நேரங்களை தவிர,.
காமராஜரைப் பற்றி பேசுவதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.கடந்த ஐம்பது ஆண்டுகால திருட்டு திராவிடர்களின் ஆட்சியைப் பற்றி பேசும்போது அங்கு காமராஜரின் ஆட்சி சிறப்பான தமிழர் ஆட்சி என்கிறோம். ஒரு தமிழர் சிறப்பான ஆட்சி கொடுத்தார் என்பதை திராவிடர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அது இயற்கை தான். காமராஜரின் இடத்தைக் கோடிட்டு நிரப்புவதற்கு ஒரு சீமான் வர வேண்டும் என்கிறோம். அதற்கு காரணம் தமிழ் நாட்டை ஆளுவதற்கு இன உணர்வு, மான உணர்வு உள்ள ஒரு தமிழன் வேண்டும் என்கிறோம். மற்றவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல!
கூத்தாடி/கூத்தாடி தொழில் சார்ந்தவர்கள் 48 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கூத்தடித்ததை பார்த்து விட்டோம். இனிமேலாவது கூத்தாடி/கூத்தாடி தொழில் சாராத ஒரு தமிழனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் கூத்தாடிகளுக்கு கொடி பிடிக்க தூண்டிவிட்டு பிறகு தமிழ்நாட்டு மக்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.
புலிகேசி – எவன் எதை எழுதினான்னு நொண்டி என்ன செய்ய போற ?
சீமானை கூத்தாடி என்று சொன்னால் கோபம் வருதோ ? உண்மையை சொன்னால்தான் உங்களுக்குதான் கசக்குமே !
48 வருசமா கூத்தாடிகளுடன் கூத்ததடித்து விட்டு இப்பதான் உங்களை போன்றோருக்கு தமிழ் ஞானோதயம் பிறந்திருக்கு.
பிறந்த நாட்டில் தமிழுக்கு என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் விடை பூஜ்யம்தான். …………………..
தமிழ் நாட்டை ஆளுவதற்கு திருட்டு திராவிடக் கூத்தாடிகளுக்கு 50 ஆண்டுகள் தமிழர்கள் கொடுத்தார்கள். அவர்கள் திருட்டுத் தமிழ் அரசியல்வாதிகளை உருவாக்கினார்கள். இப்போது மீண்டும் தமிழ் கூத்தாடிகளைத் தான் நாங்கள் நம்ப வேண்டியிருக்கிறது. என்.டி.ராமராவை ராமர் என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு தமிழ்க் கூத்தாடிகளை காக்க வந்த கபாலிகளாக ஏற்றுக் கோள்ளுவோமே!
டேய் Anonymous! நீ யாரையாவது எதையாவது சொல்லிட்டு போ அது என் பிரச்னை அல்ல! ஒரு புனை பெயரை கூட வைத்து கருத்து எழுத பயப்படற நீ என்னாத்துக்கு இங்கு வர? ………………இது பொது இடம் அவரவருக்கு அடையாளம் இருக்கு!!!
இங்கு ஏன் ஒருவரை ஒருவர் அனாவசியமாக மட்டமாக சாடிக்கொள்கின்றனர் –அவரவரின் கருத்துக்கள் பகுத்தறிவுக்கு ஒத்து இருக்கவேண்டும்– கருது வேறாக இருந்தாலும் பொதுவில் நமக்கு சமுதாய ஒற்றுமை இருக்க வேண்டும்.
கூத்தாடுவதும் ஒரு தொழில் தான். அதில் என்ன தவறு? ஆனால் அவன்களின் அட்டைக்கு பால் அபிஷேகம் செய்வது தான் முட்டாள்தனம்– அது யாருடைய தவறு? நம்முடைய அறியாண்மை அறிவிலித்தனம் –
அய்யாAbrahamterahஅவர்களே வணக்கம்.
பேரு இல்லாதவர்கூத்தாடாத தமிழன்தான்
தமிழகத்தை ஆளவேண்டும் என்கிறார்.
கூத்தாடாததமிழன் ஒருவேளைசாதிகட்சி
அன்புமணியா?அல்லதுபாப்பாத்தி தீபாவா?
பேரு இல்லாதவர் அறிமுகப்படுத்தினால்.
ஏற்கத்தக்கவர் எனறால் ஆதரிக்கலாம்.தமிழக
த்துக்கு விமோசனம் கிடைத்தால் மகிழ்ச்சியே.
சரிங்க! நீங்க நாளும் தெரிந்த பெரியவங்க…இனிமேல் பத்து பதினைந்து anonymous கள் கருத்து வரும்….
தமிழர் பண்பாடு காற்றில் பறக்கின்றது!
தமிழன் யார் வந்தாலும் அங்கு சாதி வரத்தான் செய்யும். அதற்குத்தான் – தமிழனைத் தூண்டி விடுவதற்கு நாங்கள் திராவிடர்களை வைத்திருக்கிறோம்! நாங்கள் அடித்துக் கொண்டு சாவதில் அவனுக்குப் பரம திருப்தி! இதற்கு ஒரு முடிவு காணவேண்டுமென்றால் இன, மானமுள்ள ஒரு தமிழன் தேவை. அவனை நாங்கள் தேடி வருகிறோம்.
அலை ஓசை – சினிமா மோகம்தான் ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்பதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக்கி விட்டது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்தை விட்டொழித்தால், நாம் எதிர்பார்க்கும் நல்லாட்சி தரக்கூடிய தமிழன் கிடைப்பான் என்கிறேன்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டு அரசியலில் அறிமுகப்படுத்த தகுதியுள்ள நாம் எதிர்பார்க்கும் தமிழ் தலைவர் இல்லை என்றே கூறுவேன். அதேவேளை 48 வருட அரசியல் சாக்கடைகளை உடனே துப்பரவு செய்ய வேண்டும் என்றால் அது மிகவும் கடினம்.
ஆகவே, அடுத்து வரும் தமிழக தேர்தலில் எல்லா தொகுதியிலும் ‘சாதி-சமயம்-சினிமா’ சார்ந்திராத படித்த தமிழ் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட வேண்டும். அதே சமயம் தமிழக மக்களும் அதிக அளவில் இந்த தமிழ் சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
திராவிட கட்சிகளோ, திராவிட கட்சிகளிருந்து பிரிந்து உருவாகி இருக்கும் புது திராவிட கட்சிகளோ, கம்னியுஸ்டு சித்தாந்தம் உடைய கட்சிகளோ, சாதி கட்சிகளோ, சமயம் சார்ந்த கட்சிகளோ எந்த கட்சிகளானுலும் ‘தமிழ் சுயேச்சை வேட்பாளர்கள்’ ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கினால், அதற்கடுத்துவரும் தேர்தலில் நாம் எதிர்பார்க்கும்
நல்லாட்சி தரக்கூடிய தமிழன் கிடைப்பான் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டு அரசியலிருந்து முதலில் ‘சினிமா மோகம்’ எனும் கழிவுகளை அப்புறபடுத்தினாலே, அது நாம் எதிர்பார்க்கும் தமிழர் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி எனலாம்.
பேருஇல்லாத அய்யாநீங்கள்இல்லாத
ஊருக்குவழிகாண்பிக்கிரீர்கள்.அதற்க்குள்
நாம்மேல்உலகம்போய்விடுவோம்.
என்னைப் பொறுத்தவரை யார் எங்கு வேண்டுமானாலும் பணி புரியட்டும். கூத்தாடிகளுக்கும் நாட்டை ஆள உரிமையுண்டு. அவனுக்கு அறிவும் உண்டு. தேவை எல்லாம் அவனுக்குத் தமிழன் என்கின்ற உணர்வும், இனப்பற்றும், மொழிப்பற்றும் இருந்தால் போதும். இவைகள் தாம் முதல் தகுதி. வேறு தேவை இல்லை. அது காமராசருக்கு இருந்தது. அண்ணாவுக்கு இருந்தது. அதன் பின் அது மிருகக்காட்சி சாலைக்குப் போய்விட்டது!
Anonymous wrote on 8 January, 2017, 22:15
கூறி இருக்கும் யோசனை ஒருபுறமிருக்கட்டும்.
கல்வியா செல்வமா வீரமா?
அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
என்ற கண்ணதாசன் பாடலைப்போல,
’சாதி-சமயம்-சினிமா’ இம்மூன்றும் கலந்ததுதான் தமிழ்நாட்டு அரசியல் எனலாம்.
நீங்கள் கூறும் படித்த தமிழ் வேட்பாளர்கள் இம்மூன்றையும் இழந்து அரசியலுக்கு தயாராக இருப்பார்களா ?
அப்படியே அரசியலுக்கு வந்தாலும் இம்மூன்றும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் அவர்களால் நிலைத்து இருக்க முடியுமா ?
செம்பருத்தி ஆசிரியரருக்கு தாழ்மையான
வேண்டுகோள்.போகும ஊருக்கு வழிகேட்டால்
தொடருங்கள்,,,..நன்றி.
கூத்தாடிகளுக்கும் நாட்டை ஆள உரிமையுண்டு என்பதை ஒத்து கொள்கிறேன். 4 வருடம் 8 வருடம் அல்ல 48 வருடம் கூத்தாடிகள் ஆட்சி செய்த லட்சணம்தான் இன்றைய தமிழ்நாட்டின் அவலநிலை.
ஆரம்பித்தில் தமிழன் உணர்வு, இனப்பற்று, மொழிப்பற்று என்று பேசியே தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த கூத்தாடிகள்தான், சோழவேந்தன் கூறுவதைப்போல பிற்காலத்தில் சாதி-சமயம்-சினிமா இம்மூன்றும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து பிரிக்க முடியாத சக்திகளாக மாற்றிவிட்ட அனுபவத்தை பெற்றும், மீண்டும் மீண்டும் கூத்தாடிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றால் என்ன அர்த்தம்.
முன்பு ஜெயலலிதா தற்போது சசிகலா காலில் விழும் தமிழர்களுக்கும், தடுக்கி விழுந்தாலும் கூத்தாடி காலில்தான் விழுவோம் என்கிற தமிழர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
++++++++++++++++
சோழவேந்தன் அவர்களே !
தமிழ் வேட்பாளர்கள் இம்மூன்றையும் இழந்து அரசியலுக்கு தயாராக இருப்பார்களா ? அப்படியே அரசியலுக்கு வந்தாலும் இம்மூன்றும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் அவர்களால் நிலைத்து இருக்க முடியுமா ? என்று கேட்கிறீர்கள்.
தமிழன் உணர்வு, இனப்பற்று, மொழிப்பற்று என்று பேசிய கூத்தாடிகளை ஒரு மாற்றத்திற்காக ஏற்று 48 வருடம் ஆள ஆதரவு கொடுத்தும் அவர்களின் ஆட்சியில் நாம் எதிர்பாத்த மாற்றத்திற்கு பதிலாக ஏமாற்றத்தைத்தான் பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.
அதனால் கூத்தாடி/கூத்தாடி தொழில் சாராத தமிழனுக்கு வாய்ப்பை வழங்கி மற்றொரு மாற்றத்திற்கு நாம் ஏன் முயற்சி செய்யகூடாது ? தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்பதுபோல் தமிழர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் கூத்தாடிகளுக்கு கொடி தூக்க போகிறீர்கள் ?
நியாயம் கேட்டா,இவன் அவனே சொல்லுவான்! அவன் இவனே சொல்லுவான்! தேர்தல் வந்தா நாலா பக்கட்டு பணம் வாங்கிட்டு ஏதாவது ஒரு திருட்டு திராவிட கூட்டத்துக்கு ஒட்டு போடா வச்சிருவானுங்க வந்தேறிங்க…இப்படியே 50 வருசம் ஓடி போச்சு…
யாரும் நாட்டை ஆளலாம்– ஆனால் தகுதி திறன் உள்ள பாராபட்சம் பார்க்காத மக்கள் ஆட்சி -நியாய ஆட்சி புரிய திறன் உள்ள ஒருவரே ஆட்சியில் இருக்க வேண்டும்– ஆனால் அது அறிவுள்ள அரசியல் சமூக சம நீதி அறிந்த மக்களால் தன முடியும்– இந்தியாவில் முடியுமா? அறிவிலித்தனத்திற்கும் ஊழலுக்கும் சுய நலத்திற்கும் தானே அங்கு முக்கியத்துவம்? ஆஸ்திரேலியாவில் $3000 / பிரயாண கட்டண த்திற்காக அமைச்சர் தன் பதவியை விசாரணை முடியும் வரை துறந்திருக்கிறார். இது மூன்றாம் உலகில் நடக்குமா? இதே ஆஸ்திரேலியாவில் சபாநாயகர் ஒரு ஹெலிகோப்டேரில் பிரயாணம் மக்கள் பணத்தில் செய்தார் என்ற குற்றச்சாட்டிற்கு அந்த சபாநாயகர் அந்த பணத்தை கட்டிய பிறகும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்- இதெல்லாம் நடக்குமா மூன்றாம் உலகங்களில்? குரங்கு பிடியாக ஆட்சியில் இருக்கவே பெரும்பாலான மூன்றாம் உலக அரசியல் வாதிகள் செயல் படுகின்றனர்.
48 ஆண்டு காலம் தமிழ் நாட்டில் கூத்தடித்தவர்கள் திராவிடப் பெருமக்கள். அவர்கள் யாரும் அறிவில் குறைந்தவர்கள் அல்ல. கருணாநிதிக்கு என்ன குறை? திருக்குறளுக்கு உரை எழுதியவர். ஓர் தமிழ் அறிஞர். அவர் எப்போது பதவிக்கு வந்தாரோ அன்றிலிருந்தே ஊழல் ஆரம்பமாகிவிட்டது. தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழரின் கலாச்சாரத்தை அழித்தவர். இன்றைய தமிழ் நாட்டின் அவல நிலைக்கு அவரே காரணம். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அது ஜெயலலிதாவுக்கு நடந்தது. இப்போது கருணாநிதியின் காலம். இவரையும் நின்று கொல்லும்.