ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அமைச்சகம் ஒப்புதல்: தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி

Protest against Jallikattu banதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சென்னை, மதுரை, கோயமுத்தூர், சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதனால் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது. இன்று கூட தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று உறுதியுடன் கூறினார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு தயாரித்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அவசர சட்ட வரைவில் சிறிய திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டி மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

https://youtu.be/BpPFndXYGok

TAGS: