சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன்மார்க்கெட் பகுதியை இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நடுக்குப்பம் பகுதி மக்களையும் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை தொடங்கினார்கள்.
அரசும், காவல்துறையும் இணைந்து கொண்டு வன்முறையாக மாற்றி இருக்கிறது.
வியர்வையில் தொடங்கிய அறப்போராட்டம் ரத்தத்தில் முடிந்துள்ளது.
சட்டத்தை இயற்றிய கையோடு அரசு அதிகாரிகள் குழு மாணவர்களை சந்தித்து பேசியிருக்கலாம்.
அதைவிட்டுவிட்டு மாணவர்களை அடித்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை அடித்து துன்புறுத்த வேண்டியதில்லை.
இவ்வளவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்த காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
-http://news.lankasri.com