மெரினாவில் இனி போராட்டம் செய்ய தடை.. காவல்துறை திடீர் அறிவிப்பு- வீடியோ

Protest against Jallikattu banசென்னை: சென்னை மெரினாவில் இனி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை மெரினாவில் ஏழு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், போராட்டத்தை கலைக்க நடந்த கலவரத்தில்
மெரினாவை ஒட்டியுள்ள மீனவப்பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீன் சந்தை எரிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறை இனி மெரினாவில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. குறிப்பாக கலங்கரை விளக்கத்திலிருந்து நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளில் இனி போராட்டத்துக்கு அனுமதி இல்லை.

இந்த அறிவிப்பை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தெரிவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: