தமிழ்சினிமா இன்னும் எத்தனை காலத்திற்குதான் பல்லிளித்துக் கொண்டிருக்குமோ?
சிங்கம் 3 படம் வெளிவந்த அடுத்த நிமிஷமே அப்படத்தை பேஸ்புக்கில் லைவ் பண்ணிவிட்டது தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணைதளம்.
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து இயங்கி வரும் இந்த தளத்தை தடுத்து நிறுத்த யாருமே முன் வராத நிலையில், பேச்சடைத்து நிற்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
போன வாரம்தான் போகன் படத்தை பேஸ்புக்கில் லைவ் பண்ணியது இதே இணையதளம்.
ஒரே நாளில் நாலரை லட்சம் பேர் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். இப்படி தயாரிப்பாளர்களின் உயிரை சுரண்டும் இந்த விஷயத்தை எப்போது யார் தடுப்பார்கள்?
போண்டா வடை தின்றுவிட்டு பஞ்சாயத்து பண்ணும் பெருசுகள், ஒரு முறை டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுக்கலாம் அல்லவா? வெட்கம்…
-http://www.4tamilmedia.com
இதுவும் தமிழர்களின் சினிமா எதிரலை வேட்டையாகியுள்ளது
வடுக சினிமா ஆதிக்கம் சாகட்டும். சினிமாதான் இந்த
தமிழின சிறப்பை ஊமையன் குராலாக்கியது சாகட்டும்.
1. இந்த திருட்டை ஒழிக்கத்தான் இயக்குநர், நடிகர் சேரன் ஒரு திட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதற்கு தமிழ்திரையுலகில் யாரும் ஆதரவு தராததால்
முதல் பரிட்சையிலேயே அவர் தோற்றுப் போனார்.
2. படம் ஆரம்பிக்குமுன் அதாவது படம் ஓடத் துவங்கும் சமயம் சம்மந்தப்பட்ட நடிகர் ஓர் அறிவிப்பு செய்யலாம். அதாவது ‘இது எங்கள் உழைப்பு. இது தான் எங்கள் பிழைப்பு.
இதுவே எங்கள் மூலதனம். இதை திருட்டுத் தனமாக பார்க்க வேண்டாம். தியேட்டரில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க பணம், மனம் இல்லாதவர்கள் தாராளமாக
திருட்டுத் தனமாக பாருங்கள். அவர்களை பிச்சைக்க்காரர்களை விட மோசமானவர்களாக நாங்கள் எண்ணிக்கொள்கிறோம்
3. தியேட்டரில் டிக்கெட் விலையை குறையுங்கள். ஏழைகளும் பார்க்கும் வகையில் டிக்கெட் விலை இருப்பதை உறுதி செய்யுங்கள்.
4. படம் பார்த்த பின் அந்த படம் சம்மந்தப்பட்ட 5- அல்லது 10- கேள்விகளைத் தொகுத்து ஒரு போட்டி அறிவியுங்கள்.
போட்டிக் கூப்பனுடன் டிக்கெட்டின் ஒரு பாதியை இணைத்து அனுப்பச் சொல்லுங்கள். பரிகளாக வீடு, வீட்டு மனை, கார்கள், அடுத்தப் படத்தில் நடிக்க ஒரு வேடம் கொடுங்கள்
இப்படி செய்தால் கள்ளத்தனமாக படம் பார்ப்போர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.
இதையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்றால் நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும். டிக்கெட்டின் விலை ஐந்து, பத்து ரூபாய்க்குள் வர வேண்டும். சினிமா நடிகர்களின் பேராசை தான் அத்தனைக்கும் காரணம்!