இலங்கை – இந்திய கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணைப்பகுதியில் ஏற்பட்டுள்ள மீனவப்பிரச்சினையை ஆராயும் பொருட்டு நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இருநாட்டு அதிகாரிகளின் கலந்துரையாடலின்போது இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 6ஆம் திகதியன்று இலங்கையின் கடற்படையினரின் துப்பாக்கி சூட்டினால் மரணமான தமிழக மீனவர் பிரிட்டோ தொடர்பிலும் நேற்றைய சந்திப்பின்போது ஆராயப்பட்டது.
எனினும் இந்த சம்பவத்துக்கு இலங்கை கடற்படையினர் பொறுப்பல்ல என்று இலங்கை தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தருமாறு இந்திய தரப்பு இலங்கையிடம் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 150 படகுகளை விடுவிக்குமாறு இந்திய விடுத்தக்கோரிக்கைக்கு பதிலளித்த இலங்கை தரப்பு அரசியல் ரீதியான இருதரப்பு சந்திப்புக்கு பின்னர் இது தொடர்பில் ஆராயலாம் என்று குறிப்பிட்டது.
-tamilwin.com
சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
படித்ததும் சிரித்தது
தமிழ் நாட்டை தனி நாடாக்கனும்னு ஒரு குரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்துச்சாம் .. அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடகயிடட அப்புறம் பொருளாதாரம் வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவரதனு அறிவுப்பூரவம கேள்வி கேடடான.. அதுக்கு ஒரு அறிவாளி பதில் சொன்னான்…… அதாவது நாம அமெரிக்காவோடு போர் அறிவிச்சிடுவோம் .. எப்படியும் நாம போர்ல தோத்துடுவோம் .. அப்புறம் நம்மள அமெரிக்காரன் ஆட்சி செய்வான். க்ரீன் கார்டு, விசா எதுவும் இல்லமா நாம அமெரிக்க குடிமகன் ஆயிருளாம்… அப்புறம் நாம் முன்னேறுது ரொம்ப ஈசிதான். இதை எல்லாம் கேட்டுகிட்டு இருந்த இன்னொரு அறிவாளி ஒரு சூப்பர கேள்வி கேடடான . என்னனா ? அதெல்லாம் சரி, ஒரு வேலை நாம போர்ல ஜெயிடடா அமெரிக்காவை என்ன பண்ணறது ?
தற்போது தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு இந்தியாவே காரணம் – ஆனால் அங்குள்ள முதுகு எலும்பில்லா பிண்டங்களுக்கு எதையும் அறியும், திறன் கிடையாது. தற்போது RK நகரில் -தமிழ் நாட்டில்- என்ன நடக்கிறது? அங்கு ஊழல் மலிந்து போய் விட்டது அதனால் தான் யாருக்கும் அக்கறை இல்லை. அங்கு நடக்கும், அநியாயங்களை என்ன என்று சொல்வது? நம்பிக்கை நாயகனையும், மிஞ்சிய தமிழர்கள்