இலங்கை மற்றும் இந்தியாவும் இணைந்தே ஈழத்தமிழர்களை படுகொலை செய்ததாக தென் இந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் பேசி முடிக்கும் சாதாரண பிரச்சினை அல்ல எனவும், இந்த பிரச்சினையானது உலக அளவிலான பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினி உலகம் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கை மற்றும் இந்தியாவும் இணைந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை அழித்தார்கள். போராளிகள் பலரை சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்.
இன்னும் பலருக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாது. உலகில் எங்கும் நடக்காத கொடுமையே ஈழத்தில் நடந்தது. இந்தியாவும் இணைந்துதான் இந்த கொடூரத்தை செய்தது.
இந்தியா இறையாண்மை உள்ள நாடு என்பதை ஈழத்தமிழர்கள் விடயத்தில் காப்பாற்றப்படவில்லை. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏற்பாடு என குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த விடயத்தில் நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடியும் எனவும் கூறியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் விடயத்தில் நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே தவிர இதற்கான எந்த முயற்சியும் நம்மால் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈழத்தமிழர்கள் விடயத்தில் இறைவன் ஒருவன் தான் இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக கட்சி ஆரம்பிப்பது, கூட்டத்தில் பேசுவது என்பது அனைத்துமே ஒரு நாடகம்.
தங்களது, கட்சியை பலப்படுத்தி கொள்வதற்காகவும், சுயலாபத்திற்காகவும், ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஒரு சிலர் கையில் எடுத்துள்ளனர். அவர்களால் ஈழதமிழர்களுக்கு எவ்வித உதவியும் இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈழத்தமிழர்கள் குறித்த ராஜ்கிரணின் இந்த கருத்துக்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-tamilwin.com
முற்றிலும் உண்மை .ஆயுத உதவிகளை செய்தவர்கள் சோனியாவும் அவர் மகனும் .ராணுவ ஆலோசனை கூறியவர் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நம்பியார் என்ற ராணுவ அதிகாரி .மத்திய அரசு சார்பாக சென்று இலங்கை அரசுடன் பேசி தமிழினத்தை காக்க எந்த முடிவும் எடுக்காமல்
விருந்துண்டு வெறும் கையுடன் திரும்பியவர் ஒரு மேனன் .கையேந்தி நிற்கும் நம் இனத்தின் இன்றைய நிலையை மாற்ற நாம் கூட்டாக சிந்தித்து செயல்பட வேண்டும் .
இலங்கையுடன் சேர்ந்து இந்தியா ஒரு லச்சம் தமிழர்களை அழிக்கும் போது , இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் நாட்டின் தமிழர்கள் என்ன செய்து கொண்டிருந்திர்கள் ! கடவுள் மீது பழியை போட்டு தப்பித்து கொள்ளாதீர்கள் ! யாழ்ப்பாண தமிழனை அழித்ததில் தமிழ் நாட்டு தமிழனுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது ! பக்கத்திலேயே தன் சகோதரி கற்பழிக்க படுவதையும் ! தன் தாய் மானபங்க படுவதையும் ! சகோதரன் கொள்ள படுவதையும் பார்த்து கொண்டிருந்த கொலைகள் தமிழ் நாட்டு மக்கள் !!
நாற்றமடிக்கும் உங்களின் தமிழ் நாட்டு அரசியலினால் தான் தமிழனுக்கு எந்த நாட்டிலும் மரியாதை என்பது இல்லாமல் போய் விட்டது ! மேடைகளிலும் , திரைப்படத்திலும் வீர வசனம் பேசிக்கொண்டு , நிஜத்தில் கோழையாக , மானமிழந்து வாழ்ந்து கொண்டிருங்கள் !
இப்படி (நான் உட்பட) ஆளாளுக்கு கைவிரித்து விடுவதாலும் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனதாலும் அவனவனும் நம் தலைமேல் உட்கார்ந்து கூத்தாடுகிறான், வெட்கக்கேடான விஷயம். சீக்கிரத்தில் உலகிலயே மிகவும் கேவலமான இனமாக நாம் உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஹாஹாஹா பழியை மற்றவர் மீது போட்டு விடடாள் , நாம் நல்லவர்கள் ஆகவே முடியாது ! இது ஒரு உள்நாட்டு போர். இப்படி நிறைய நாடுகளில் நடந்துள்ளது. மற்றவர்கள் மீது பழி போடும் நாம், ஏன் தமிழர்களின் தமிழீழ தலைமையை கேள்வி கேட்க வில்லை ? அமெரிக்கா தந்த சுய ஆட்சி , ஸ்டானி நாடு என்னும் வழிமுறைகளும் வேண்டாம்! autonomy என்னும் நம்மை நாம் ஆளும் வழிமுறை வேண்டாம்! 30 வருடங்களாக போர்நடந்து கொண்டிருக்கும் வேலையில் , வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகள் மட்டும் 4 ஆண்டுகள் ஜப்பான் பல்கலைகழகத்தில் படிக்கலாமா ? இப்படி தலைமையை கேள்விகேடடாள் என்ன பதில் வைத்துள்ளனர் இவர்கள் ?