தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் தற்போது கேளிக்கை வரியை எதிர்த்து இன்று முதல் காலவரையின்றி மூடியுள்ளனர். இதுதொடர்பாக இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்திரையுலகத்தை சேர்ந்த முக்கிய சங்க நிர்வாகிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்,
இந்த பேச்சுவார்த்தையில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்த சினிமா கலைஞர்களுக்கு மீண்டும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அபிராமி ராமநாதன் அறிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தெரிவித்தார், இதன் மூலம் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறினார்.
-cineulagam.com