ஊழல் செய்தவர்களை ராஜினாமா செய்ய அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுக்கு தான் என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், சமூக பிரச்னைகளுக்கு தன்னுடன் இணைந்து குரல் கொடுப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அவருடன் இணைந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க தயாராக இருப்பதாக கூறிய சீமான் இதற்கு கமல் தயாரா என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும், நாங்கள் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
மேலும், தமிழகத்தில் ஊழல் செய்தவர்களை ராஜினாமா செய்ய அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுக்கு தான் என சீமான் கூறியுள்ளார்.
-lankasri.com