தல அஜித்துக்காக ஒரு தறுதலை யாழில் செய்துள்ள காரியம் இது: புலிகள் ரேஞ்சில் உயர்த்தி என்ன கொடுமை

வெளிவர உள்ள அஜித்தின் விவேகம் படத்திற்கு, அவரது ரசிகர்கள் பல கொண்டாட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள். தவறில்லை. ஆனால் யாழில் ஒரு தறுதலை, அவர் விவேகம் படத்தில் ஒருக்கும் ஒரு போஸ்டரை காப்பி அடித்து. அதில் மேலதிகமாக சற்று வரிப் புலில் கோடுகளைப் போட்டு. ஏதோ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் போல அதனை சித்தரித்து போஸ்டர் அடித்து தொங்க விட்டுள்ளார். போதாக்குறைக்கு “பஞ்ச் டயலக்” வேறு.
அதாவது , உலகமே உன் முன்னால் வந்து நீ தோற்றுவிட்டாய், தோற்றுவிட்டாய் என்று கத்தினாலும். நீயா ஒத்துக்கிறவரைக்கும் நீ தோக்கவே இல்லை என்று ஒரு கேவலம் கெட்ட பஞ்ச டயலக்.  ஒரு விடையத்தில் தோற்றுவிட்டால், அது தோல்வி தானே. அது என்ன நீயா ஒத்துக்கிறவரைக்கும் ? அப்படி என்றால் தோற்றுவிட்டு ஒத்துகொள்ளாமல் அடம் பிடித்தால் அது சரி என்று ஆகிவிடுமா ? அட பாவிகளா , எதுக்கு எல்லாம் பஞ்ச டயலக் சொல்வது என்று ஒரு விவஸ்த்தை இல்லையா ?

-athirvu.com