தல அஜித்தின் திரைப்படம் ஒன்று வெளியாக உள்ள நிலையில். அதற்கான போஸ்டர் பலவற்றை அடித்து யாழ்ப்பாணம் எங்கும் ஒட்டிவருகிறார்கள் சிலர். இதனை விட வேறு சில காவாலிகள் கூட்டமாக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு அஜித்தின் கட் அவுட்டை பவனியாக யாழ்ப்பாணம் எங்கும் கொண்டு செல்கிறார்கள். அத்தோடு பற மேளம் வேறு அடித்து ஏதோ சாவு வீடு நடத்துவது போல பெரும் காவாலித்தனத்தில் ஈடுபடுகிறார்கள்.
குறித்த படத்தில் அஜித் ஒரு ராணுவ அதிகாரி போல வேடமிட்டுள்ளார். இந்திய ராணுவ அதிகாரியின் சீருடையை சற்று மாற்றி. அதற்கு வரிப்புலி போல கலரில் போட்டு ஏதோ புலிகள் தலைவரின் படத்தை கொண்டு செல்வது போல கொண்டு செல்கிறார்கள். இவர்களுக்காகவா 44,000 ஆயிரம் மாவீரர்கள் மரணித்தார்கள் ? என்று எண்ணத் தோன்றுகிறது. 33 வருட விடுதலைப் போராட்டத்தை ஒரு நொடிப் பொழுதில் கொச்சைப்படுத்தியுள்ளார்கள் யாழ் இளைஞர்கள். இவர்களுக்கு பணத்தை வெளிநாட்டில் இருந்து அனுப்பி. அவர்களை கெடுத்து குட்டிச் சுவராக்கி வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் தான் என்றால் அது மிகையாகாது.
வேலைக்கு போய் தான் அன்றாடம் காசு சம்பாதிக்கவேண்டும் என்ற நிலை இருந்தால். இவர்கள் இப்படி எல்லாம் செய்வார்களா ?
-athirvu.com
இங்கு ஒரு யாழ்பாணத்தான் அடிக்கடி தகரத் தமிழ் நாடு என்று கேலி செய்வான்! இப்போது அங்கும் தாழ்ப்பாணத்தான் தகர மேளம் அடிக்கிறான்! அடாடா! என்னா ஒற்றுமை!
ஆனால் தகர தமிழா நாட்டு அளவில் இவர்கள் இன்னும் முன்னேற வில்லை ….
சாராய விட்பனை தகர தமிழா நாட்டில் 30 ,000 கோடிகள்…..எந்த தமிழனையும் இவர்களை மிஞ்ச முடியாது
இதை செய்தியாய் போடறீங்களே பாஸ் தெறி என்று ஒரு படம் வெளியீட்டிற்கு நம் நாட்டில் மூன்று விஜய் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்களே, அதைவிடவா இது மோசமாய் போய்விட்டது ? நம்மவர்களுக்கு ஹீரோ, ஹீரோயின் பக்தி தலைக்கேறிவிட்டால் கோவில் கட்டுவது, சிலை வைப்பது, பாலாபிக்ஷேகம் செய்வது , காவடி எடுப்பது எல்லாம் பியாசா தானே பாஸ் , ஆனால் இவர்கள் தெரிந்தே மதத்தை கேலி செய்கிறோம், மதத்தினரை புண்படுத்துகிறோம் , என்பதை உணர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கேள்விக்குறி, இந்த விடயத்தில் கிருத்துவ மதமும், இஸ்லாம் மதமும் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது, இந்த மாதிரி அருவருப்புகளை சாதீயம் பேசும் நமது ஆச்சார அனுக்ஷ்டான சமயவாதிகள் எதிர்க்காமல் ஏற்றுக்கொள்வதைப்போல் அவர்கள் நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள். ஹாலிவூட்டில் அர்னால்டுக்கு எங்காச்சும் சர்ச்சு இருக்கா பாஸ் ? சாருக்கானுக்கு எங்காச்சும் தர்க்கா இருக்கா பாஸ் ? ஆனா நம்மில் குக்ஷ்பாம்பிகா கோவில் கூட இருந்திருக்கு பாருங்க , வேறென்ன சொல்ல ? வேதனைதானே மிஞ்சும் 🙁
தகரத் தமிழ் நாட்டில் சாராய விற்பனை இன்னும் கூடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது! யாழ்ப்பாணத் தமிழனும் குறைந்தவன் அல்ல! அவனும் குடித்தும் தனது நிலை அறியாமல் சுருண்டு கிடக்கிறான்! எத்தனை கோடி என்பது தான் தெரியவில்லை! ஆனால் தகரத் தமிழ் நாடாக இருந்தால் என்ன, யாழ்ப்பாணம் என்றால் என்ன, இதனை சரி செய்ய முடியும். சரி செய்ய முடியாதது அல்ல. இவைகளையெல்லாம் திராவிடக் கட்சிகள் திட்டம் போட்டு தமிழனை அழிக்கின்ற முயற்சிகள்; அவ்வளவு தான்! அங்கு சிங்களவன் தமிழனை அழிக்கின்ற முயற்சிகள்; அவ்வளவு தான்! தமிழனின் கையில் ஆட்சி இல்லாதவரை இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும். இதில் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ ஒன்றுமில்லை!