நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மலேசியாகினியின் சட்ட தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது.
இந்நிதி திரட்டல் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்கம் வழக்கில் மலேசியாகினி அந்நிறுவனத்திற்கு இழப்பீடாகவும் வழக்கு செலவுத் தொகையாகவும் ரிம350,000 வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சம்பந்தப்பட்டதாகும்.
மலேசியாகினியின் தலைமை நிருவாகி பிரமேஷ் சந்திரன் நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
மலேசியாகினியின் வாசகர்கள், செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை நன்குணர்ந்துள்ளனர். அவர்கள் மனமுவந்து வழங்கும் நன்கொடைக்கும் ஆதரவுச் செய்திகளுக்கும் அவர் மீண்டும் நன்றி கூறினார்.
இந்நிதிக்கு நன்கொடை வழங்க விரும்புகிறவர்கள் தங்கள் நன்கொடையை கீழ்க்கண்டவாறு அளிக்கும்படி பிரமேஷ் கேட்டுக்கொண்டார்.
Account name: Mkini Dotcom Sdn Bhd
Account no: 514253516714 (Maybank)
Swift Code: MBBEMYKL
Branch address: Dataran Maybank, Level 1 Tower A, Dataran Maybank, 59000 Kuala Lumpur.
Alternatively, you may also donate using your credit card by calling us at +603 7770 0017 or via PayPal.