நான் தமிழன்… சூப்பர்ஸ்டாரை நேரடியாகவே சீண்டிய பிரபல காமெடி நடிகர்..

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்த விஷயம் செய்தாலும் அது பெரிய சர்ச்சை ஆகிவிடுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “எந்த 7 பேர்? எனக்கு தெரியாது..” என கேட்டார். பல வருடங்களாக பேசப்படும் விஷயம் இவருக்கு தெரியவில்லையா என கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், “ரஜினிக்கு தெரியாமல் இருக்கலாம். எனக்கு தெரியும்” என கூறி அந்த 7 பேரின் பெயர்களையும் கூறினார்.

சூப்பர்ஸ்டாருக்கு தெரியாதது பவர் ஸ்டாருக்கு தெரிந்திருக்கிறது என்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்கிற கேள்விக்கு “நான் தமிழன்” என கூறியுள்ளார்.

ரஜினி வேறு மாநிலத்தை சேர்ந்தவர், தமிழர் இல்லை என்பதை தான் பவர் ஸ்டார் சுட்டிக்காட்டியுள்ளார்.

-athirvu.in