தமிழகத்தில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர, பிற 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 9 மணிக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது இறுதி வாக்குப்பதிவு விகிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் நடந்த 16வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து 73.74% வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஏழு கட்டங்களாக நடக்கும் 17வது மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இருக்கும் 38 தொகுதிகள் உள்பட, 11 மாநிலங்ககளில் இருக்கும் 95 தொகுதிகளுக்கு வியாழனன்று நடைபெற்றது.
தொகுதியின் பெயர் | வாக்குப்பதிவு % |
---|---|
திருவள்ளூர் (தனி) | 71.68 |
வட சென்னை | 63.47 |
தென் சென்னை | 56.41 |
மத்திய சென்னை | 59.25 |
ஸ்ரீபெரும்புதூர் | 61.61 |
காஞ்சிபுரம் (தனி) | 73.82 |
அரக்கோணம் | 76.64 |
வேலூர் | – |
கிருஷ்ணகிரி | 75.59 |
தர்மபுரி | 80.49 |
திருவண்ணாமலை | 77.51 |
ஆரணி | 78.80 |
விழுப்புரம் (தனி) | 78.22 |
கள்ளக்குறிச்சி | 78.22 |
சேலம் | 77.33 |
நாமக்கல் | 79.98 |
ஈரோடு | 72.67 |
திருப்பூர் | 72.93 |
நீலகிரி (தனி) | 73.70 |
கோயம்புத்தூர் | 63.99 |
பொள்ளாச்சி | 70.78 |
திண்டுக்கல் | 75.00 |
தேனி | 74.75 |
கரூர் | 79.11 |
திருச்சிராப்பள்ளி | 68.89 |
பெரம்பலூர் | 78.70 |
கடலூர் | 73.64 |
சிதம்பரம் (தனி) | 77.72 |
மயிலாடுதுறை | 73.56 |
நாகப்பட்டினம் (தனி) | 76.49 |
தஞ்சாவூர் | 72.46 |
சிவகங்கை | 69.34 |
மதுரை | 65.83 |
விருதுநகர் | 72.01 |
ராமநாதபுரம் | 67.85 |
தூத்துக்குடி | 69.03 |
தென்காசி (தனி) | 70.98 |
திருநெல்வேலி | 66.68 |
கன்னியாகுமரி | 69.62 |
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளன. வேறு எந்தத் தொகுதியிலும் 80%ஐ விடவும் கூடுதலான வாக்குகள் பதிவாகவில்லை.
குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 59.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த இரு தொகுதிகளில் மட்டுமே 60%ஐ விடவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
-BBC_Tamil