யோகாவை தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்

யோகாவின் பலன்கள் எண்ணற்றவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘நமது அன்றாட வாழ்வில் யோகா’ என்ற யூடியூப் இணைப்பை மோடி வெளியிட்டார். சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், யோகாவின் பலன்கள் எண்ணற்றவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ” சர்வதேச யோகா தினம் இன்னும் சில நாட்களில் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.

யோகாவின் பலன்கள் எண்ணற்றவை.

மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் ‘நமது அன்றாட வாழ்வில் யோகா’ என்ற யூடியூப் இணைப்பையும் மோடி வெளியிட்டார்.

 

Malaimalar