நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி அவரது ரசிகர்கள் காட்சிக்கு வைத்துள்ள பாதாதைகளை கண்டு பலர் கொதிப்படைந்துள்ளனர்.
இந்து மதத்தை அவமதிக்கும் நோக்குடன் பாதாதைகளை காட்சிக்கு வைத்த நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
விஜய் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், இந்துக்களின் கடவுள்களை கேலி செய்து பாதாதைகளை காட்சிக்கு வைத்து அவமதித்ததை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று இந்து மக்கள் கட்சி செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தின் அண்ணா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பாதாதைகளை வைக்கச் சொல்லும் நடிகர் விஜய், தமிழ் மக்களை திரைத்துறை மூலம் மடையர்களாக்கி சம்பாதித்த பணம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அல்லது அந்த பணத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? என அவர் கேள்வியெழுப்பினார்.
அவர் நடித்த வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
உடனடியாக இந்த பாதாதைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால் இந்து மதத்தை நேசிக்கும் எல்லா மக்களும் விஜய்க்கு எதிராக போராட்ட களத்தில் இறங்குவார்கள் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கைவிடுத்தது.
vj…
amma