சோனியாவின் மருத்துவ சிகிக்சை 1800 கோடி செலவு, அடேங்கப்பா!

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் மருத்துவ சிகிக்சை பெறுவதற்காக, அரசுத் தரப்பில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்தத் தகவல்கள், பத்திரிகையில் வெளியாகியிருப்பதாகவும், ஆனால் அதுபற்றி காங்கிரஸ் கட்சி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கருத்துத் தெரிவித்த மோடி, ”இந்த செய்தி வெளியாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதுதொடர்பாக மத்திய அரசு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. சோனியாவின் ஆதரவாளர்களும் அமைதி காக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் வாய் திறக்கவில்லை. பத்திரிகையில் செய்தி வந்தவுடன் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தால் கேள்வியே எழுந்திருக்காது. நான் தவறான தகவலை வெளியிடுவதாக இருந்தால் ஏன் என் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தவறான தகவலைத் தந்ததாக நிரூபித்தால் அதற்காக மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கிறேன்’’, என்றார்.

இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் தான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றும், சோனியாவின் சிகிச்சை செலவுக்காக அரசாங்கக் கருவூலத்திலிருந்து எவ்வளவு தொகை செலவிட்டீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம்தான் கேட்கிறேன் என்றும் மோடி தெரிவித்தார்.

TAGS: