இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் சென்றபோது அங்கு ஒசாமாவை சந்தித்துள்ளார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு ஒரு சிறுவனை சந்தித்தார். அவனின் பெயரைக் கேட்ட சச்சின் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டார். காரணம் சிறுவனின் பெயர் ஒசாமா. அல் கொய்தா தலைவர் ஒசாமா கொல்லப்பட்டாலும் அவரது பெயரை உலக மக்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
ஸ்போர்ட்ஸ் புகைப்பட பத்திரிக்கையாளர் சுமன் சட்டோபத்யாய சச்சினைப் பற்றி எழுதிய ‘தி பீக்’ என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. புத்தகத்தை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வெளியிட்டார். அதில் தான் சச்சின் ஒசாமாவை சந்தித்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் சச்சினின் அரிய புகைப்படங்கள் பல உள்ளன. புத்தகத்தின் அட்டையில் இளம் சச்சின் தனது பெற்றோர் மடியில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. புத்தகத்தில் உள்ள புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் கதைகளை சச்சினே கூறுவது போன்றும் உள்ளது.