தன்மானத் தமிழன் என்பதை நிருபித்துக் காட்டிய சத்யராஜ்

sathiyarajதென்னிந்திய நடிகர் நடிகைகள் பலரும் ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் அவருக்கு வந்த ஹிந்திப் பட வாய்ப்பை தூக்கி எறிய முடிவு செய்திருக்கிறாராம்.இயக்குனர் ரோஷி ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. இதில் ஷாருக்கானுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சத்யராஜ்.

படத்தின் கதைப்படி சில காட்சிகளை இலங்கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர். “தமிழ் மக்களை ஈழப்போரில் கொன்று குவித்த இலங்கை மண்ணில் கால் பதிக்க மேட்டேன். கட்டாயம் அங்கே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என விரும்பினால் தாராளமாக எனக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெற்றுகொள்ளுங்கள். படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என படக்குழுவிடம் கூறிவிட்டாராம் சத்யராஜ்.

சத்யராஜின் இந்த முடிவைக் கேட்ட படக்குழு படப்பிடிப்பை கோவாவில் நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டனராம். மேலும், இப்படத்தில் தமிழர்களை தவறாக சித்தரித்திருப்பதாக சத்யராஜுக்கு தெரியவந்ததால் இது பற்றி அவர் இயக்குனரிடம் விளக்கம் கேட்டிருக்கிறாராம்.

தமிழ் மக்களை தவறாக சித்தரிக்கும் எந்த படத்திலும் தன்மானத்தை விட்டுக்கொடுத்து நடிக்கமாட்டேன் என தெளிவாக கூறிவிட்டாராம் சத்யராஜ்.

TAGS: