தனுஷ் நடித்த இந்திப் படம் ரான்ஞ்சனா. தமிழில் டப் செய்து அம்பிகாபதியாக ரிலீசானது. வட இந்தியாவில் பெரிய வெற்றி பெற்ற படம் வசூலையும் குவித்து வருகிறது. இந்தியில் ஹிட்டாகும் படங்கள் மறுவாரமே பாகிஸ்தானிலும் வெளியிடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ரான்ஞ்சனாவை பாகிஸ்தான் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தை பாகிஸ்தானில் வெளியிட மறுத்து விட்டது. இதுபற்றி அந்த நாட்டு அரசுக்கும் தெரிவித்து விட்டது.
ஒரு முஸ்லிம் பெண் இந்துப் பையனை முஸ்லிம் என்று பொய் சொல்லி காதலித்து திருமணம் செய்ய முயற்சிப்பதை போன்ற கதை என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆக, நமக்கும் அடி இருக்கிறது! இங்கு மூளை இல்லாதவர்கள் பாக்கிஸ்தானை விட அதிகம்!
பாகிஸ்தான் காரன் இல்லாதுக்கும் தடை போடுவான், அனால் தாய்லாந்தில் மட்டும் குட்டிகளுடன் கும்மாளம் போடுவான்…