கோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

மொத்தம் 12 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு உள்ளூர் தொற்று பாதிப்புகள் மற்றும் ஐந்து இறக்குமதி பாதிப்புகள் ஆகும். "நாட்டில் ஏற்பட்ட ஏழு பாதிப்புகளில், ஐந்து பாதிப்புகள் மலேசியர்களிடையே மற்றும் இரண்டு பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களிடையே ஆகும்" என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர்…

‘அடுத்த இலக்கு சிலாங்கூர், நெகேரி செம்பிலான்’

சபா ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பின்னர் நெகேரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இலக்காக இருக்கக்கூடும் என்று அமானா இளைஞர் தலைவர் ஷஸ்னி முனீர் தெரிவித்தார். "சபா ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பின்னர், துரோகிகள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்.” "2018 மக்கள் ஆணையை…

மலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!

மலேசியாகினி வாசகர்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!!! உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இன்று தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் மிக முக்கியமான நாட்களில் ஹஜ் பெருநாளும் ஒன்றாகும். அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இறைதூதரான இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மவேல் நபி ஆகியோரின் தியாகங்களை…

கோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்

இன்று, எட்டு புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,964 ஆகக் கொண்டுவருகிறது. எட்டு புதிய பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட இரண்டு மலேசிய குடிமக்கள் மற்றும் ஒரு மலேசியர் அல்லாதவர் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள் என்றார்…

சபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது

மூசா தன்னிடம் எண்கள் இருப்பதைக் காட்டுகிறார் மாலை 6.10 மணி - மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான எண்கள் தன்னிடம் உள்ளன என்பதற்கு ஆதாரமாக முகநூலில் ஒரு புகைப்படத்தை மூசா வெளியிட்டுள்ளார். புகைப்படம் மூசா மற்றும் பல்வேறு சபா சட்டமன்ற உறுப்பினர்கள் 1 முதல் 33 வரையிலான எண்…

சபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு தடை

முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மற்றும் அவரது குழுவினர் சபா மாநில அரண்மனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அக்குழுவை சார்ந்த பத்து சொகுசு வாகனங்கள் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு ஜாலான் இஸ்தானாவின் அருகே காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். மூசாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படும் பல வழக்கறிஞர்கள் சாலை தடையை…

இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை நீக்கியது பி.கே.ஆர்

இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக் ஹோவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியதாக பி.கே.ஆர் தெரிவித்துள்ளது. "சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையை பி.கே.அர். ஒழுங்கு வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. சபா மாநில அரசாங்கத்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள மூசா அமான் குழுவுடன் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக்…

நானா, முசாவா? மக்களே தீர்மானிக்கட்டும்!

ஷாஃபி அப்டால்: சட்டமன்றம் கலைக்கப்படும்! மாநில தேர்தல் நடத்தப்படும்! சபா மாநிலத் தேர்தலை நடத்த ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைக்க மாநில ஆளுநர் (யாங் டி-பெர்துவா நெகேரி) ஜூஹர் மஹிருதீன் ஒப்புதல் அளித்துள்ளதாக சபா முதல்வர் ஷாஃபி அப்டால் அறிவித்தார். இன்று காலை நடந்த கூட்டத்தில் ஜுஹார் தனது…

நேரலை: சபா மாநில அரசியல் நிலவரம்

சபாவின் அரசியல் நிலவரம் குறித்த நேரடி அறிக்கையை மலேசியாகினி உங்களுக்குக் கொண்டு வருகிறது. மூசா தன்னிடம் எண்கள் இருப்பதைக் காட்டுகிறார் மாலை 6.10 மணி - மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான எண்கள் தன்னிடம் உள்ளன என்பதற்கு ஆதாரமாக முகநூலில் ஒரு புகைப்படத்தை மூசா வெளியிட்டுள்ளார். புகைப்படம் மூசா…

தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி நீட்டிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஆறு மாத கால வங்கிக் கடன் தள்ளுபடி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதை நீட்டிப்பதற்கும் தேவைப்படுவோருக்கு வங்கி உதவியை வழங்கவும் பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். "செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆறு மாத கால…

சபாவில் புதிய அரசாங்கம் அமைக்க பெரும்பான்மை உள்ளது, மூசா அமான்…

சபாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாக மூத்த அரசியல்வாதி மூசா அமான் அறிவித்தார். அவர் தலைமையிலான ஒரு புதிய கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அவருக்கு கிடைத்த ஆதரவை உறுதிப்படுத்தும் உறுதிமொழி அறிக்கைகளை (எஸ்டி) சபா மாநிலத் தலைவருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான…

‘நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டால், டாக்டர் மகாதீரும் தனிமைப்பட வேண்டும்’

நேற்று நீதிமன்றத்தில் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்ட பாரிசான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடல் இடைவெளிக்கான எஸ்ஓபி-க்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றாம் சாட்டியுள்ளனர். நேற்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்த வேண்டுமா என்று ஆர்.எஸ்.என் ராயர்…

கோவிட்-19: 13 புதிய பாதிப்புகள்

மொத்தம் 13 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றின் பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அதாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிப்புகளின் எண்ணிக்கை 220 என்றும், இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,956…

கூடுதல் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப்

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான நிதியில் RM42 மில்லியனை தவறாகப் பயன்படுத்திய வழக்கில் ஏழு குற்றங்களில் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட கூடுதல் RM1 மில்லியனை ஜாமீனாக செலுத்தியுள்ளார். நஜீப் 67, நீல நிற சட்டை அணிந்து, மதியம் 1.00 மணியளவில்…

குற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின் கதை

அருட்செல்வன் | இந்த மாதம் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவு இது. முதலாவது, முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்டது. இரண்டாவது, கேஸ் லாரி டிரைவர் மற்றும் கோவிட் காலத்தில் வேலை இழந்த அவரது துணை சம்பந்தப்பட்டது. இதில், ஒரு சம்பவம் 7 ஜூலை 2020-ல்…

நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM210 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அதிகார முறைகேடு செய்த குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM120 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டார். நம்பிக்கை மோசடி குற்றத்திற்கு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப் மீது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். பணமோசடி குற்றங்களுக்காக, ஒவ்வொரு குற்றத்திற்கும்…

ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தில் கூடியதைக் கண்டு நூர் ஹிஷாம் வருத்தம்

இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் "சுய கட்டுப்பாடு இன்றி" அலட்சியமாக இருந்தது குறித்து சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது விரக்தியை வெளிப்படுத்தினார். "ஒவ்வொரு நாளும் சுகாதார அமைச்சு மலேசியர்களை குறைந்தது 1 மீட்டர் பாதுகாப்பு கூடல் இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவரி…

நேரலை: RM420 மில்லியன் அபராதம், சிறைத்தண்டனை கோருகிறது அரசு தரப்பு

மாலை 5.25 மணி - அதிகார முறைகேடு செய்ததற்காக RM210 மில்லியன் அபராதம், மற்றும் கட்டாய சிறைத்தண்டனை ஆகியவற்றை அரசு தரப்பு கோருகிறது. நம்பிக்கை மோசடி குற்றத்தைப் பொறுத்தவரை, இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க கோரி அரசு தரப்பு முயல்கிறது. பணமோசடி குற்றச்சாட்டுக்காக,…

நஜிப்பின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அதிகார முறைகேடு செய்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் குற்றவியல் விசாரணையின் தீர்ப்பு மற்றும் 1எம்.டி.பி நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும். நஜிப்பின் ஆதரவாளர்கள் இன்று அதிகாலை முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடிவருகின்றனர். நஜிப்பின்…

நஜிப் வழக்கு: கோலாலும்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் கடும் காவல்

கோலாலும்பூர் உயர்நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டு முக்கிய நுழைவாயில்கள் உட்பட கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி காவல்துறையினர் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளனர். எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதியில் RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நஜிப் ரசாக் வழக்கின் முடிவுகளை இன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் தற்போதைய நிலைமையைக்…

அனைத்து 7 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி என தீர்ப்பு

அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான ஆர்.எம் 42 மில்லியன் நிதி பணமோசடி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது தீர்ப்பை வாசிக்கும் போது முன்னாள் பிரதமர் அமைதியாகவே…

நஜீப் ஊழல் வழக்கு : இன்று தீர்ப்பு

அனைத்து 7 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான ஆர்.எம் 42 மில்லியன் நிதி பணமோசடி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது தீர்ப்பை…

மலாய் ஆதிக்கம் – வெள்ளையர் ஆதிக்கம், இரண்டிற்கும் வேறுபாடு இல்லை…

இன்று அமானா கட்சியின் மக்கள் பிரதிநிதிகளில் சிலர், மலாய் மேலாதிக்கமும் வெள்ளையர் மேலாதிக்கமும் ஒன்றுதான் என்றார்கள். மேலும், இதுபோன்ற உணர்வுகள் எதிர்காலத்தில் இனக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். வாரிசான் கட்சியின் ஷாஃபி அப்டாலும், மலாய்க்காரர்கள் சிந்திக்க வேண்டும் என்றும், மற்ற இனங்கள் வெற்றி அடைந்து இருந்தால்…