சில தேசிய கூட்டணி இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்குவர்!

சபா மாநிலத் தேர்தலில் பல தொகுதிகளில் தேசிய கூட்டணியில் இருந்து (பி.என்) இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பாரிசான் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா சுட்டிக்காட்டினார். "பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்க வாய்ப்புள்ளது.” "எடுத்துக்காட்டாக, பெர்சத்து (Bersatu) இருந்தால் அநேகமாக ஸ்டாரும் (STAR) இருக்கும் ...…

கோவிட்-19: 24 புதிய பாதிப்புகள், சிகிச்சையில் 300க்கும் அதிகமான பாதிப்புகள்!

கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 300க்கும் மேல் அதிகரித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 322 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று மதியம் நிலவரப்படி, 24 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குனர்…

வாரிசான் சின்னத்தில் போட்டியிடுகிறது டிஏபி!

அடுத்த சபா மாநில தேர்தலில் டிஏபி வேட்பாளர்கள் தங்கள் சொந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக வாரிசான் சின்னத்தின் கீழ் அவர்கள் போட்டியிடுவார்கள். இம்முடிவு டிஏபி மத்திய செயற்குழுவின் கடினமான ஒன்று என்று கூறிய கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங், கூட்டு சின்னத்துடன் போட்டியிட…

கோவிட்-19: 100 புதிய பாதிப்புகள்! தொற்று தொடர்ந்து உயர்கிறது!

08.09.2020 பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் மேலும் 100 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மூன்று மாதங்களில் மிக உயர்ந்த அதிகரிப்பு ஆகும். இன்று அறிவிக்கப்பட்ட புதிய பாதிப்புகளில் 85 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் 15 இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள் என்று மலேசியா சுகாதார அமைச்சு கூறியுள்ளது. பதினைந்து…

விளம்பர பலகைகள் மலாய் மொழியில் இருக்க வேண்டும்!

கோலாலம்பூரில் உள்ள விளம்பர பலகைகள் மலாய் மொழியை முக்கிய மொழியாகப் பயன்படுத்த வேண்டும், மற்ற மொழி துணை மொழியாக அனுமதிக்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார். மாண்டரின் மொழியை பிரதான மொழியாகப் பயன்படுத்திய விளம்பர பலகை நேற்று அகற்றப்பட்ட பின்னர் அவர் இதைக் கூறினார்.…

தண்ணீர் லாரி நேரடியாக விஐபி வீடுகளுக்கு அனுப்பப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி

சிலாங்கூரில் நீர் குழாய்கள் வறண்ட போக ஆரம்பித்திருந்தாலும், சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் வி.ஐ.பி.க்கள் மேல் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அப்படியான வி.ஐ.பி-களில் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்கியுள்ளனர். அவரது மனைவி தனது வீட்டின் முன் நிருத்தப்பட்ட சிலாங்கூர் நீர்…

அன்வாரை விட அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளே மேலானது! –…

பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பல தசாப்தங்களுக்குப் பிறகு, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது இப்போது மிகவும் வசதியாக உள்ளது என்று கூறியுள்ளார். அன்வாருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் இடையிலான போட்டியின் நடுவில் இழுத்துச்…

நதிகளைப் பாதுகாப்பது அவசியம்! – சார்ல்ஸ் சந்தியாகோ

நதி மாசுபாட்டால் ஏற்படும் நீர் விநியோகத் தடங்கல்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தொடர்ந்து, நதி பாதுகாப்பு அமைப்பை நிறுவுமாறு வலியுறுத்தியுள்ளார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ. தேசிய நீர் சேவை ஆணையத்தின் (SPAN) முன்னாள் தலைவரான அவர், ஆற்றைச் சுற்றி 300 முதல் 400 மீட்டர் பரப்பளவில்…

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு முகிதீனிடம்…

தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தப்படக்கூடாது என்று கேட்டு உள்துறை அமைச்சர் முகிதீன் யாசினுக்கு கடிதம் எழுதியதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார். "நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. அப்பிரச்சினை இலங்கையில் ஏற்பட்டது, இங்கு அல்ல. அவர்கள் மலேசியாவில் அத்தகைய மோசமான…

அம்னோ தலைவர், இளைஞர் பிரிவு தலைவர் பி.என் மாநாட்டில் கலந்து…

தேசிய கூட்டணி நிர்வாகத்தின் (பி.என்) அரை ஆண்டு மாநாடு இன்று கோலாலம்பூரில் நடந்தது. பெர்சத்து தலைவரான பிரதமர் முகிதீன் யாசின், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அதில் உரை நிகழ்த்தினர். விழாவில் பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அகமட் பாஹிசால் வான் அகமது கமால் மற்றும்…

பாஸ் இளைஞர் பிரிவு: தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க வேண்டிய அவசியமில்லை!

தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதை பாஸ் இளைஞர்கள் ஆதரிக்கின்றனர் என்றும் ஆனால் அங்கு தேசிய மொழியின் கல்வியும் கற்றலும் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தேசிய அடையாளத்துடன் மாணவர்களை உருவாக்க தாய்மொழிப் பள்ளிகள் தவறிவிட்ட காரணத்தால் அவைகளை கட்டங்கட்டமாக ஒழிக்க வேண்டும் என்று முன்னதாக பெர்சத்து இளைஞர்…

கோவிட்-19 : சபாவில் புதிய திரளை

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் 14 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 14 புதிய பாதிப்புகளில், புதிதாக கண்டறியப்பட்ட திரளையில் இருந்து ஏழு உட்பட ஒன்பது நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் நிகழ்ந்துள்ளன என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்…

புதிய ‘’பூங்கா’ திரளை

மலேசிய சுகாதார அமைச்சு இன்று மற்றொரு புதிய கோவிட்-19 திரளையை (‘’பூங்கா’ திரளை/Bunga Cluster) கண்டறிந்துள்ளது. இது நெகேரி செம்பிலான் போர்ட் டிக்சன் துறைமுகத்தில் ஒரு கப்பலின் நான்கு ஊழியர்கள் சம்பந்தப்பட்டதாக அடையாளம் கண்டுள்ளது. இந்த கப்பலுக்கு சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து வந்த பயண வரலாறு இருப்பதாக சுகாதார இயக்குநர்…

13 கைதிகளுக்கு முன்கூட்டி விடுதலை அளிக்கிறார் மாமன்னர்

இன்று 63வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து மலேசியாவின் பல சிறைகளில் உள்ள 13 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து முன்கூட்டியே விடுதலை வழங்க மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டார். மாமன்னர் அல்லது அரசர் அல்லது மாநில ஆளுநரை எதிர்த்த அல்லது எதிர்க்க…

கோவிட்-19: மற்றொரு இறப்பு, ஆறு புதிய பாதிப்புகள்

ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகளும் ஓர் இறப்பும் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. சமீபத்திய இறப்பு, கெடாவில் உள்ள தாவார் திரளையில் இருந்து 62 வயதான மூத்த குடிமகன் (‘நோயாளி 9124’) சம்பந்தப்பட்டதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்…

பிரதமர்: தேசிய கூட்டணியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்!

தேசிய கூட்டணியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதற்கு பாரிசான் வேட்பாளரின் வெற்றியே ஒரு சான்றாகும் என்றுள்ளார் பிரதமர் முகிதீன். ஸ்லிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நேற்று பாரிசன் நேஷனல் வேட்பாளர் முகமட் ஜைதி அஜீஸின் வெற்றி, கட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் தேசிய கூட்டணி அரசாங்கம் செயல்படுத்திய…

ஸ்லிம் இடைத்தேர்தல்: 10,945 வாக்குகள் பெற்று பாரிசான் வெற்றி!

10,945 வாக்குகள் பெற்று ஸ்லிம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பாரிசான் பெஜுவாங் வேட்பாளர் டெபாசிட் பணத்தை இழக்கவில்லை. இரவு 9.30 மணி - புதிதாக அமைக்கப்பட்ட பெஜுவாங் கட்சி ஸ்லிம் இடைத்தேர்தலில் அதன் வேட்பாளர் அமீர் குஷைரி தோல்வியடைந்த போதிலும் அதன் வைப்புத்தொகையை இழக்கவில்லை. அக்கட்சி 13.69 சதவீத…

கோவிட்-19: தேசிய வகை சுபாங் சீனப்பள்ளியில் பாதிப்பு

தேசிய வகை சுபாங் சீனப்பள்ளி தனது மாணவர்களில் ஒருவர் கோவிட்-19 பாதிப்புக்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், இரண்டாம் வகுப்பு மாணவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பள்ளித் தலைவர் உறுதிப்படுத்தியதாக சீனா பிரஸ் மேற்கோளிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அம்மாணவர் கிழக்கு மலேசியாவுக்குச் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. தற்போது…

தேசிய கூட்டணியின் சின்னம் அறிமுகம்

சபா மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் தேசிய கூட்டணியின் சின்னம் இன்று வெளியிடப்பட்டது. நீல நிற பின்னணியில் வெள்ளை எழுத்துடன் கூட்டணியின் பெயரைக் கொண்ட சின்னத்தை பெர்சத்து கட்சியின் தலைவர் முகிதீன் யாசின் இன்று சபாவில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் வெளியிட்டார். தேசிய கூட்டணி அறிமுக விழா ரத்து…

ஸ்லிம் இடைத்தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 60 சதவீதம்…

ஸ்லிம் இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று மந்தமாகவே தொடங்கியது. காலை 11 மணிக்கு 29 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இருப்பினும், 22,749 வாக்காளர்களில் 85 சதவீதத்தினர் மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு முடிவதற்குள் வாக்களிப்பர் என்ற இலக்கை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு அந்தந்த…

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை…

நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகிதீன் யாசின்அறிவித்தார். கடந்த ஜூன் 7-ஆம் தேதி அமலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு நிறைவடைய இருந்தது. “கொவிட்-19 தொற்று இன்னும் நீண்ட…

தாய்மொழிப்பள்ளிகள் இனப் பிளவுகளுக்கு காரணமல்ல – வி சிவகுமார்

நாட்டின் பல்வேறு இனங்களிடையே ஒற்றுமையின் மொழி மலாய் மொழி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இது மற்ற மொழிகளை, குறிப்பாக தாய்மொழிகளை அகற்ற வேண்டும் என்று அர்த்தமில்லை. தாய்மொழிப்பள்ளிகள் அவற்றின் சொந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. மேலும் நம் நாட்டின் அடையாளம், தனித்துவம் மற்றும் இன வேறுபாட்டை முன்னிலைப்படுத்த அவை…

தேசிய கூட்டணியில் சேருவதில் இருந்து விலகியது ம.இ.கா

தேசிய கூட்டணியில் அம்னோ இணைய வேண்டாம் என்று முடிவு செய்ததை அடுத்து, ம.இ.கா கட்சியும் அதில் சேருவதில் இருந்து விலகியது. கட்சியின் முடிவை தெரிவிக்க ம.இ.கா, மலேசிய சங்கங்கள் பதிவுத் துறைக்கு (ஆர்.ஓ.எஸ்) கடிதத்தையும் அனுப்பியுள்ளது. "ஜூலை 15, 2020 தேதியிட்ட எங்கள் கடிதம் பற்றி குறிப்பிடுகையில், அம்னோ…