பொதுமண்டபத்திற்கு போராட மஇகா-வுக்கு காமாட்சி அழைப்பு!

பல தவணைகள் மஇகா-வின் இரும்புக் கோட்டையாக இருந்த காராக் நகரில் ஒரு பொது மண்டபம் கிடையாது. இங்கு வாழும் மக்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு பொது மண்டபம் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள். வருடத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருமணங்கள் காராக்கில் நடக்கின்றன. அவை சீனப் பள்ளி…

இந்திய தலைவர்கள் உதவிச் செய்வார்களா?

கல்வியால் உயரலாம். கல்வியே நமது வாழ்வின் கண்கள். கல்வி கற்றவன் சிறப்படைவான். கல்வி கற்காதவன் கண்கள் இருந்தும் புண்கள் இருப்பவனாக கருதப்படுவான்..கல்வியைப் பற்றி எவ்வளவு சிறப்பான கருத்துக்கள். நமது மலேசிய நாட்டில் கல்வியையும் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கையில் உண்மையாக மனம் வலிக்கின்றது. நமது மாணவர்கள் இரவும் பகலும் கல்வி…

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஷ்வரஹ…! இதைப்…

குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத…

என்னதான் நடக்குது நாட்டினிலே?……. (கதிர்)

13-வது பொதுத் தேர்தல் முடிந்தப் பிறகு நம் நாடு ஒரு சீரற்ற நிலையை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது! இதைப் பற்றி அரசியல்வாதிகளோ அரசு சார்பற்ற இயக்கங்களோ பெரும் அக்கறை கொண்டவர்களாக தெரியவில்லை! 13-வது பொதுத் தேர்தலுக்கு முன் சத்து மலேசியா சுலோகத்தோடு பல திட்டங்களையும் வாக்குறுதிகளையும் சுமந்து பம்பரமாய்…

ஸ்ரீ முருகன் நிலையம் சரியான பாதையில் செல்லுகிறதா?

ஸ்ரீ முருகம் நிலையம் சரியானப் பாதையில் செல்லுகிறதா என்னும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்னும் நோக்கம் நமக்கில்லை. டாக்டர் தம்பிராஜா அவர்களும், அவர் தம் குழுவினரும், ஸ்ரீ முருகன் நிலையத்தை ஆரம்பித்த போது நிச்சயமாக அவர்களிடையே ஒரு…

அடுத்த மாதம் முதல் டீசல் எண்ணை விலை குறைக்கப்படும் என…

தற்சமயம் நம் நாட்டில் டீசல் எண்ணை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கூடிய விரைவில் நம் அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தப் போகிறது என டீசல் விநியோகிப்பாளர்கள் உணர்ந்துள்ளதால், மொத்த விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை அரசாங்கம் குறைக்கப்போகிறது என அறிவிக்குமேயானால், டீசல்…

தலைமைத்துவ போராட்டம் இந்தியர்களுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது.

ம.இ.கா.கட்சி ஒரு இந்தியர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கட்சியாகும். இது முழுக்க முழுக்க மக்கள் நலன் கருதி செயல்படுகின்றது என்றால் மிகையாகாது. அதன் உண்மையான கோட்பாடுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக குறை கூற மாட்டார்கள். வழி நடத்துபவர்கள் வழி தவறி போயிருக்கலாம்.  தலைவர்கள் அவர்களின் கடமைகளை மறந்து விடலாம். ஆனால் ம.இ.காவின் சேவை…

குருட்டுத் தனமாய் குருமார் வழிபாட்டில் ஈடுபடும் மூட பக்தர்கள்! இந்து…

இந்த குருமார் வழிபாட்டின் தத்துவம் என்ன? ஒரு மனிதர் தான் வாழ்ந்தக் காலத்தில் ஏதோ அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக (அதுவும் அதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடையாது) அவர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகிவிடுவாரா? நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவரை (இக்குருமார்களின் இறப்பை பல மாதிரி…

நம்பிக்கை (ஆ)சாமியை நம்பி ஏமாந்தக் கதை!

என் மீது நம்பிக்கை வையுங்கள்! என் மீது நம்பிக்கை வையுங்கள்! அழியும் மை தடவி வாக்குப் போட்டு வெற்றிப் பெறச் செய்த (யார் வெற்றிப் பெற்றது???) மக்களுக்கு பட்டை நாமம் போட்டு பெற்ற வெற்றிக்குப் பரிசாக: சிறுபான்மையினர் மீது தொடர் பகிரங்க அச்சுறுத்தல். தாய் மொழிப் பள்ளிகளை! மூடச்…

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – கோவிந்தசாமி அண்ணாமலை

நமது கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கூறியவை இவை * கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை. * கடந்த ஆண்டு 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டும் அதே போல 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்படும். * இந்திய மாணவர்களின்…

ம.இ.கா. துணைக் கல்வி அமைச்சர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!

மா.இ.கா மாற வேண்டும்! ஆனால் அவர்கள் இன்னும்  மாறவில்லை! கடந்த தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட அடி கூட அவர்களை மாற்றவில்லை என்றே சொல்லத்  தோன்றுகிறது. அவர்களின் போக்கு பதவியில் இருக்கும் வரை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்னும் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறது.  மிகவும் வருத்தத்திற்குக்குரிய விஷயம்.…

இனி எவ்வளவு காலங்களுக்கு இனப் பாகுபாடு பிரச்சனைகளைப் புறக்கணிக்க போகிறோம்?

-ஜே. சோலமன், பொதுச் செயலாளர், என்யுபி, ஜூன் 28, 2013. வேலை செய்யும் இடங்களில் இனவேற்றுமை சம்பவங்கள் நடப்பது மலேசியாவில் நடக்கும் புதிய சம்பவங்கள் அல்ல. ஒவ்வொரு துறையிலும் அது கட்டம் கட்டமாக நுழைந்து தாக்கி அழித்து கொண்டிருக்கும் நோய் என்று சொல்வதில் தவறேதும் இல்லை. இதனால் , அரசாங்கம் 2012 வருடம்…

தந்தையர்களுக்கு, தந்தையர் தின வாழ்த்துக்கள்!

‘எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது, அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு’ என்கிறார் ஒரு கவிஞர். அப்பா உன்னால் வந்தேன் உலகில். என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய் நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்…

ஒற்றுமையில்லா இந்திய இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது. சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி…

தாய் மொழிப் பள்ளிகளுக்கு மீண்டும் சாவு மணி அடிக்கத் தொடங்கிவிட்டார்களா?

மாரா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின்  இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட், "13 வது பொதுத் தேர்தல் முடிவுகள் : முஸ்லிம் தலைமைத்துவமும் உயிர் வாழ்வும்" என்ற கருத்தரங்கில் , மலேசியாவில் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டுமாயின் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை அகற்ற வேண்டுமென்று திருவாய்…

மாற்றத்தை விரும்பிய மக்களிடம் இருந்து களவாடப்பட்ட 13வது தேர்தல்

அன்பான தமிழர்களே, நம்மில் எத்தனையோ பாகுபாடு கொண்ட மனிதர்கள். தலைமை என்ற பெயரில் சுய நலம் பெரிது  என வாழும் தலைமையே அதிகம் ! இதை அன்று தொட்டு (வெள்ளையன் ஆளத்தொடங்கிய காலம் முதல் ) கொஞ்சம் நின்று நிதானித்து சிந்தித்து பாருங்கள். அது ஒருவித கங்காணி /தண்டல்…

ஹிண்டராப் வேதமூர்த்தி நம்மை மீண்டும் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்!

2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சி, 2008ல் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2/3  பெரும்பான்மையை இழக்கச் செய்தது. இந்தியர்கள் உரிமை உள்ளவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்ற உரிமை முழக்கத்தை உரக்க கூறினார்கள். அன்று நம் கண் முன் இந்தியர்களின் போராட்டவாதிகளாக தெரிந்தவர்கள் வேதமூர்த்தி, உதயகுமார்,…

பணிந்து போன காலம் போய்விட்டது; துணிந்து முடிவெடுக்க வேண்டும்!

2008ல் தேர்தலில் நமது தாக்கத்தினால்தான் தேசிய முன்னணி ஆராசாங்கம் 2/3  பெரும்பான்மையை இழந்தது என்பதை அனைவரும் அறிவர். நமது பங்கு என்ன, நமது சக்தி என்ன என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கனும் ஆனால் அப்படி நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நமது பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதற்கு காரணம் தேர்தல்.…

பாரிசானின் (தமிழ்) கொலை முயற்சி!

தமிழ் மொழி 5 ஆயிரம் வருடத்திய ஒரு முதிர்ந்த மொழி. அதன் பயன்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலெல்லாம் பரவி தளிர் விட்டு கொடியாய் படர்ந்திருக்கின்றது. நமது மலேசிய மண்ணிலும் அதன் மணம்  இனிதே வீசிக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையிலே, தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவிருப்பதால் ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் …

Mr. பழனி அவர்களே எனக்கு ஒரு டவுட்டு…

அரசாங்க அடிமைகளான ஆசிரியர்கள் எல்லோருக்கும் கல்வி அமைச்சரிடமிருந்து திடீர் அழைப்பு. அதுவும் அடிமைகளின்  பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒன்றுகூட உத்தரவு. அடிமைகளான நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறியபோது ஆட்டுமந்தைகளானோம். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னைப்போலவே நிறைய அரசாங்க அடிமைகள்.…

அன்பு வேதமூர்த்திக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்!

உங்களுடைய உண்ணாவிரதம் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உடல் தளர்ச்சியினால் மயக்கம் ஏற்பட்டவுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.. நீங்கள் சொல்ல வந்ததை  கடந்த 21 நாட்களில் நன்றாகவே சொல்லிவிட்டீர்கள்.. இப்பொழுது இந்திய மக்கள் உங்களின் உன்னத நோக்கத்தையும் நீங்கள் யாருக்காக, போராடுகின்றீர்கள் என்பதனையும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். சீக்கிரம் நீங்கள்…

தமிழர்க்குத் தேவை தனித் “தமிழர் நாடு”

தமிழர் நாட்டு  தன்மானமுள்ள  மாணவ மணிகளே , அன்பு தம்பிகளே , தங்கைகளே , மாணவ கண்மணிகளுக்கு ஆதரவாக களமிறங்கி நிற்கும் பெற்றோர்களே , பொதுமக்களே , உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள் ! அண்மைய செய்திகளின் வழி நாம் அறிவது காங்கிரசு அரசு தமிழர்களின் கோரிக்கைகளை…

‘தமிழர்களை குழப்பும் செயற்பாட்டை முரளி நிறுத்திகொள்ளவேண்டும்’

ஈழத்தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 இலட்சம் வெள்ளி மீதான காவல்துறையினரின் விசாரணை முடியும்வரை பூச்சோங்க முரளி சுப்பிரமணியம்  அமைதி காக்க வேண்டும். காவல்துறையில் புகார் செய்த பிறகு அமைதியாக இருப்பதை விட்டு தினசரி பத்திரிக்கைகளில் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய ஆயுதப் போராட்டம் இலங்கையில்…