கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 7 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை மனு!

இந்தியா கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனுவை கையளிக்க 7 தமிழ் அரசியல் கட்சிகள்கூட்டாக தீர்மானித்துள்ளன. காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது…

சுயநல வாதிகளா ஈழத்தமிழர்கள்?

சொந்த நாட்டிலே போர் சூழல் காரணமாக பல உயிர்கள் கொன்று குவிக்கப் பட்டதுடன், ஈழத் தமிழர்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும், உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழியையும், தமிழ் கலை கலாச்சாரத்தையும் நிலை…

தொப்புள்கொடி உறவுத் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்

கர்நாடக தமிழர் மீதான தாக்குதல் சம்பவத்தினை நடுவன் அரசு தலையிட்டு சுமூகமான நிலமைக்கு கொண்டு வர வேண்டும் என மிருகபலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு…

இயக்கத்தில் இருக்கும்போதே தமிழினிக்கு புற்றுநோய் என்பது பொய் ! தாயாரின்…

தமிழினிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் என சிலர் சொல்வது உண்மைக்குப்புறம்பானது என தமிழியின் தாயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில்…

ஏழு வருடங்களாகியும் நீதியை பெறாத தமிழினம்

சொத்துக்கள், சுகங்கள், அங்க அவையங்கள், உயிர்களையும் இழந்து உரிமைக்கான போராட்டமே இழந்துவிட்டது எங்கள் தமிழினம். ஏழவருடங்கள் ஆகியும் நீதியோ நியாயமோ இதுவரை கிடைக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு அவர் வழங்குள்ள சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது, லங்காசிறிக்கு அவர் வழங்குள்ள சிறப்பு…

மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரின் பாதுகாப்பைஅதிகரிக்க மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உயர்ஸ்தானிகரின் வீடு, அலுவலகம் போன்றவற்றில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் அபூபக்கர்தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில்…

தமிழ் ஈழத்தை அங்கீகரித்த டென்மார்க்! விளக்கம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி

டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், டென்மார்க் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டென்மார்க் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள இணையத்…

மதுவில் முதலிடம் பெற்று தமிழ்ப் பண்பாட்டை இழந்து நிற்கும் யாழ்.மாவட்டம்!

தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது.இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை. இன்று…

இந்தியாவிடம் இருந்து விலகுகிறதா இலங்கை

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த போது, இந்தியாவுடன் காணப்பட்ட நெருக்கம் இப்போது குறையத் தொடங்கியுள்ளது போலத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.சீனாவுடன் நெருக்கமான…

கொரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு!– மேஜர்…

பாடங்களின் அடிப்படையில் இதனை நான் இங்கு உறுதிப்படுத்த முடியும். அப்போதைய சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான தெளிவான இலக்கைக் கொண்டிருந்தனர். போரில் அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தவர் என்ற வகையில் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா புலிப் பயங்கரவாதத்தை முடிவுக்குக்…

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அழிக்கப்படும் தமிழர் வராலாறு!

இலங்கையில் ஐந்து ஈச்சரங்கள் இருந்துள்ளன. இது இலங்கையில் தமிழ் மக்கள் நாடு பூராகவும் வாழ்ந்தமைக்கான சான்றாகும். இவ்வாறு வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று ஒரு பகுதியில் கூட உரிமையுடன் வாழ்வதற்கு போராடி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்…

வைத்திய பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை : முன்னாள் போராளிகள்

வடமாகணத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வீச ஊசி ஏற்றப்படவில்லை என வடமாகண மாவட்ட வைத்தியசாலை விசேட பரிசோதனை வைத்தியர்கள் இன்று கூறியுள்ளார். எனினும் இதுவரை குறைந்த எண்ணிக்கையை கொண்ட முன்னாள் போராளிகளே மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த…

பிரபாகரன் சிறந்த தலைவர் என்பதை இலங்கை இராணுவம் காலந்தாழ்த்தியேனும் ஏற்றுக்கொண்டுள்ளது!

வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது,'பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை. பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான…

பிரபாகரனை தேடும் வடபகுதி மக்கள்! காரணத்தை கண்டுபிடித்த ஆளுநர்

வடக்கில் தற்போது மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வடக்கில் சாதி பேதம் அதிகரித்துள்ளதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது இருக்க வேண்டும் என வடபகுதி மக்கள் தம்மிடம்…

யுத்த உயிரிழப்புக்கு கடந்த ஆட்சி தலைவரே பொறுப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்தமைக்கு கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார். நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை…

மலேசிய செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்யும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய உயர்ஸ்தானிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலேசிய வாழ் இலங்கையர்கள் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் அந்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை குருடர்களைப் போன்று பாராதிருந்தனர் என குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின்…

எதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான பார்வை

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹிம் அன்ஸார் மீதான தாக்குதல் சம்பவம் இலங்கையில் பரவலான அவதானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் நேற்று முன்தினம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 23/2 கீழ் பாராளுமன்றத்தில் எழுப்பிய கவனயீர்ப்பு…

எல்லாளன், பிரபாகரன் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வீரர்கள்..! வரலாற்றுத் தடம்

மதிப்பும், மரியாதையும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நம்மோடு கூடியிருப்பவர்களை, அல்லது நம்மில் பெரியவர்களுக்கு வயதின் காரணமாக மரியாதை கொடுப்பது உண்டு. இன்னொருபுறத்தில், அவர்களின் திறமைகளைக் கண்டு, வியந்து, போற்றி அதன் மூலமாக மரியாதை கொடுப்பது இன்னொரு ரகம். இந்த இருவேறு நிலைகளில் இருந்து நோக்கில், இலங்கை…

மலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!

மலேசியாவில் இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை தமிழ் இளைஞர்கள் கைவிடவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பிரதேசத்தில் நன்னடத்தை…

மலேசியாவில் புலிகளின் கொடிகள் வந்தது எவ்வாறு? ஏன் கைதுகள் இடம்…

புலிகளின் கொடிகளை வைத்துக்கொண்டு மலேசியாவில் போராட்டம் மேற்கொள்ள அனுமதி உள்ளதா? என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்தார். விடுதலைப் புலிகளின் கொடிகளை வைத்துக் கொண்டு பாரிய அளவிலான போராட்டங்களை மலேசியாவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மலேசிய அரசு…

பிரபாகரனிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி புகழும்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.…

மஹிந்த போர் குற்றவாளி! உரிய நடவடிக்கை வேண்டும் – கஸ்தூரி…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை…

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல்! புலி ஆதரவாளருக்கு மலேசியா எச்சரிக்கை!

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென…