கலப்பு நீதிமன்றமா? பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா?- ஐ.நா. பேரவை முடிவு…

கலப்பு நீதிமன்றமா? அல்லது பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா? என்ற கேள்வியை அமெரிக்காவின் பிரேரணை தற்போது ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இரண்டுமே சர்வதேச நீதித்துறையை சேர்ந்தவை என்கின்றனர் சில ஆய்வாளர்கள். விசாரணைக்குழு அறிக்கையில் 'ஹைபிரிட்' எனப்படும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையையே பரிந்துரை செய்துள்ளது. அதற்கென சர்வதேச நீதிபதிகள் சர்வதேச விசாரணையாளர்கள் சர்வதேச…

இந்திய தலையிட்டிருந்தால் இறுதி மோதல்களில் 40,000 பேரைக் காப்பாற்றியிருக்கலாம்: நவநீதம்…

இலங்கையின் இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் இந்தியா உரிய முறையில் தலையிட்டிருந்தால், 40,000 பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட…

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து: இந்தியா…

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர்.…

தமிழரின் தீர்வில் தடுமாறும் நியூயோர்க்கும் ஜெனிவாவும்

உலக நாடுகளில் ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் அடையாளங்கள் அல்லது அவ் இனத்தின் அடிமைபடுத்தப்பட்டதன் ஆதாரங்களை உலகின் உயரிய சபையாம் மனித உரிமைகள் விடயத்தின் ஆர்வம் காட்டும் உலக ஸ்தாபனம் ஒன்றியத்திடம் கையளிப்பது சர்வதேச சட்டங்களின் நடைமுறை. அந்தவகையில் ஐ.நா. சபையின் தலைமைக் காரியாலயம் நியூயோர்க்கில் அமைந்துள்ளது. ஐ.நாவின் மனித…

தடைகளை உடைத்து இலங்கை வெற்றிகரமாக முன்னேற்றியுள்ளது: வெளிவிவகார அமைச்சர் மங்கள…

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கை தடைகளை உடைத்து வெற்றிகரமான முன்னேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களாக இலங்கையின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகம் நாட்டை வெட்கத்திற்கு உள்ளாகும் யோசனைகளை முன்வைத்தது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு…

அமெரிக்காவின் யோசனைக்கு தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வெளியிட்டுள்ளது !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்பித்துள்ள உத்தேச தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. உத்தேச தீர்மானமானது இலங்கையின் நீதியின் குறிப்பிடத்தக்களவு வெற்றியாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட…

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க பிரேரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானதன் பின்னர் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அனைத்து தரப்புக்களினாலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை…

புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள்…

விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்த குற்றங்கள் குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதி முறைமையின் கீழ்…

அமெரிக்க யோசனைக்கு இலங்கையும் அனுசரணை! பிரதமர் ரணில் – த.தே.கூட்டமைப்பு…

இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த…

இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்! அமெரிக்கா அறிவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர்களுக்கு உரித்தான, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நம்பிக்கை வாய்ந்த நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றைக்குறித்த முன்மொழிவுகள்…

ஜெனீவா அறிக்கையின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்றக் கோரிக்கை நீக்கப்படும்!…

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பான விடயம் நீக்கப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்…

இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானம் பரகுவே அரசவையில்…

இலங்கையை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் பரப்பரப்படைந்துள்ள வேளை, இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானமொன்று பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்மக்களது நீதிக்கு உறுதுணையான சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை ஐ.நா மனித உரிமைச்சபையினை கோருவதாக (PROYECTO DE DECLARACION: QUE EXHORTA AL PODER EJECUTIVO A…

அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன்! அதிகாரிகளுடன் ஆலோசனை

அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது ஐ.நா.வின் அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள்,…

தமிழ் சமூகத்தை அழிக்க அரசியல் சதிவேலைகள் அரங்கேற்றம்: சி.வி.விக்கினேஸ்வரன் !

தமிழரை கீழ் நிலை சமூகமாக மாற்ற திட்டமிட்ட சதிவேலைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் சொத்தான கல்வியை வேருடன் அழிக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு போதைப் பொருள் பாவனை திட்டமிட்டு அதிகரிக்கப்படுவதாகவும் கூறினார். எம்மை கையாலாகாதவர்கள் ஆக்கி அடிமைச்சீவியம் நடத்தும்…

உள்நாட்டுக் கட்டமைப்பின் மூலமே விசாரணை: ரணில்

ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டில் அமைக்கப்படும் கட்டமைப்பின் மூலமாகவே விசாரணை செய்யப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் இவ்வாறு கூறினார். 2009ம் ஆண்டு…

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பல…

போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா…

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று…

தடம் புரளும் ஐ.நா

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கை சிங்கள இராஜதந்திரத்திற்குக் கிடைத்த பெரும் அடி. தமிழ் மக்களுக்கு விமோசனம் பிறந்து விட்டது என்பதுதான் தமிழ் மக்கள் சார்ந்த கருத்தாக இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிந்துரைத்துள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றப் பொறிமுறை நடைமுறைக்கு வருமா? அவ்வாறு வந்தால் தமிழர்களின்…

இறுதிப்போரில் 7000 பேரே மரணம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், ‘2011இல், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான…

வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை! யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் தவிர்க்க முடியாதது!-…

யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் என்பது தவிர்க்க முடியாததாகும். இதனை இனப்படுகொலை என அர்த்தப்படுத்த முடியாது.  வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை. இதனை ஐ.நா. வும் ஏற்றுக்கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; இலங்கை இறையாண்மை கொண்ட நாடு.…

இங்கு விசாரணை செய்ய முடியாது என சர்வதேச நீதிபதிகளே ஓடுகின்றனர்!…

திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை மற்றும் மூதூரில் 17 தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை போன்றவற்றுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிட்டவில்லை. இந்த விசாரணையின் பொருட்டு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாதென்று அவர்களே ஓடிவிட்டனர். இந்த நிலையில் உள்ளக விசாரணை…

கடல் பிரிக்கிறது…. கடமை இணைக்கிறது!

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு வழியாக வெளியிட்டு விட்டது. ஆணையர் செயித் ராத் அல் ஹுசெய்ன் முன்னதாகவே தெரிவித்தபடி, அந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது. 'அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இல்லை' என்று சொல்லியிருப்பது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்!…

இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டு அமர்வில் முன்வைக்கவுள்ள தீர்மானத்திற்கு, பல மேற்கத்திய நாடுகளில் உட்பட ஐ.நா சபையின் அங்கத்துவ…