சிறுபான்மையினர் ஜனநாயக உரிமையை சிந்தித்து செயற்படுத்தும் நேரமிது! – மகா

ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பே கடும் சுறுசுறுப்பும் விளம்பரங்களாலும், கட்அவுட்டுகளால் மூடப்பட்டிருக்கும் நகரங்களும் இன்று இலங்கையில் எங்கும் பேசப்படுகின்ற விடயங்களாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பான தேர்தலாகவே இருக்கப் போகின்றது. இந்த நிலையில் நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது…

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்க்க…

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,…

மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்குற்ற விவகாரம்!

சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் போர்க்குற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளன. முன்னர் போர்க்குற்றங்கள் என்ற சொல்லையே, ஒரு தீண்டத்தகாத சொல் போலக் கருதிய சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இப்போது அதுபற்றி அதிகம் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. அரசியல் மேடைகளுக்கு அப்பாலும் போர்க்குற்றங்கள் என்ற விவகாரம்…

ராஜீவ் கொலை வழக்கில் கே.பியை விசாரிக்க இன்டர்போலின் உதவியை நாடியுள்ள…

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்த இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் இதற்காக சர்வதேச பொலிஸின் உதவியை நாடியுள்ளது. இந்த விசாரணையில் ஒத்துழைக்குமாறு…

எமது மக்களின் போராட்டம் ஜனநாயக நெறிமுறைகளுக்கமைய பாதைகள் மாறிப் பயணிக்கும்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா அவர்கள் இன்று (07.12.2014) கொழும்பில் நடாத்திய ஊடாக மகாநாட்டில் முக்கியமான பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்…

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனை என்ன? ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்கிறது…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரதானமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது பற்றிய யோசனைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கோ, சமஸ்டி முறையிலான தீர்வுக்கோ ஆதரவளிக்கப் போவதில்லை என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால…

உலகத்தமிழர் தேசிய காங்கிரஸ் அமைக்க தமிழக அரசிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன்…

தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து, உலகத்தமிழ் தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்க வேண்டும் என நா.க.த.அரசு பிரதமர் தெரிவித்துள்ளார். தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா…

மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்……

பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்து வரும் அறிக்கைகளால் அதிர்ச்சியடைந்துள்ளது. தான் பேரினவாதியாம், சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லையாம், ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்படுமாம். தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போன்று…

ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!

ஜனா­தி­பதித் தேர்தல் பற்­றிய ஆர்வம் தமிழர் தரப்­பிடம் கொஞ்சம் கொஞ்­ச­மாக் குறையத் தொடங்­கி­யுள்­ளதை அண்­மைய நாட்­க­ளாக அவ­தா­னிக்க முடி­கி­றது. பொது­வா­கவே, ஜனா­தி­பதி தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் அவ்­வ­ள­வாக ஆர்வம் காட்­டு­வ­தில்லை, வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தில்லை. முன்­னைய ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் மிகக் ­கு­றைந்­த­ளவு வாக்­க­ளிப்பே இடம்­பெற்­றி­ருப்­பதை, கடந்த காலத் தேர்தல்…

வாக்களித்துவிட்டு தோற்றுப்போகும் தமிழர்களின் தலைவிதி மாறுவது எப்போது? -ஆதி

இலங்கைத்தீவில் 1505 திசைமாறி வந்த போர்த்துக்கீசர்கள் அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்துக்கொண்டு, பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன்படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர். 1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறினாலும் தமிழ் மக்கள் மாறமாட்டார்கள்!-…

அண்மைக் காலமாக குறிப்பாக ஐனாதிபதி தேர்தல் அறிவிப்புக்குப் பின் கட்சி தாவல்கள் தொடர்பான செய்திகள் களைகட்டியுள்ள வேளையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இரண்டு பிரதேச்சபை உறுப்பினர்கள் அரசு பக்கம் இணைந்துள்னர். இன்னும் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனிடம்…

என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி…

தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இதனைச் செய்ய முடியாது என்பதால் தம்மைப் பதவியிலிருந்து இறக்கி…

இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை…

இலங்கை கொடியுடன் சீனா கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை அமைச்சர் ஒருவரின் கருத்து மூலம் புலனாகியுள்ளது. இதுவரை காலமும் இலங்கை அரசு இதுதொடர்பாக மூச்சும் காட்டியது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, என்ன நடக்கிறது என்று விரிவாகப் பார்ப்போம். சர்வதேச கடற்பரப்பில் கடந்த வருடம்…

ஐ.நாவின் விசாரணையில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரிபால! கருத்துக்கூற மறுக்கிறது…

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு,…

எவ்வித சூழ்ச்சிகளுக்கும் பொது எதிரணியினர் இடமளிக்கக்கூடாது: விக்கிரமபாகு கோரிக்கை

மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழித்து ஜனநாயகத்தினை வென்றெடுப்பதற்கு மக்கள் பாதையில் இறங்கியுள்ளனர். இத்தருணத்தில் எவ்வித சூழ்ச்சிகளுக்கும் பொது எதிரணியினர் இடமளிக்கக்கூடாது. மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய எல்லோரும் ஒன்றுபட…

யாழில் மாவீரருக்கு சுடரேற்றியவர்களை தேடும் இராணுவம்! சரணடையக் காலக்கெடு விதிப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தமிழீழ மாவீரர் தினத்தன்று விளக்கேற்றிய குற்றச்சாட்டின் கீழ் 11 பொதுமக்களை ஒரு வாரத்திற்குள் தம்மிடம் சரணடைய வேண்டும் என படையினர் காலக்கெடு விதித்துள்ளனர். எனினும் அவர்களுள் 8 இளைஞர்கள் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த மாதம் 27ம் திகதி மாவீரர்கள் தினம் உலகில் பல…

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எங்களுக்கு முக்கியம் – மனோ கணேசன்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசு, ஜனாதிபதி முறைமையை அகற்றி விட்டு, 18ம் திருத்தத்தை ஒழித்து, 17ம் திருத்தத்தை மீண்டும் அரசியலமைப்பில் சேர்த்த பின், முதல் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு தேட வேண்டும். இதை நான் நேற்று ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்திருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு…

முழுமையில்லா உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்து இட்டுள்ளோம்: மனோ கணேசன்

தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை எதிரிணிக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது நாட்டில் ஜனநாயக இடைவெளியொன்றை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் முழுமையில்லாத இந்த உடன்படிக்கையில் நம்பிக்கையோடு கையெழுத்திட்டுள்ளோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொது எதிரணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் பிரதான இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பௌத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடனான…

விடுதலைப்புலிகள் 80 பேரை கொன்று புதைத்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆய்வு

விடுதலைப்புலிகள் 80 பேரைக் கொன்று புதைத்த இடம் என்று கூறப்படும் இடத்தில் அகழாய்வு செய்யும் போலிசார் விடுதலைப்புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்த 80 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடம் ஒன்றை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் செவ்வாயன்று அகழ்ந்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பெரிய இத்திமடு என்ற இடத்திலேயே…

இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் காரணமாகிவிட்டது என ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சீனா அரசிடமிருந்து இலங்கை பெற்ற அத்தனை திட்டங்களுக்கான கடனை திரும்பி செலுத்த முடியாவிட்டால் அந்த திட்டங்கள் அனைத்தும் சீனாவிற்கு சொந்தமாக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தமையே இந்தியாவின்…

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் பேசும் மக்களும்

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துக் கொண்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு மைத்திரி என்ற ஒரு பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல. சிறிது காலத்திற்கு முன் மஹிந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர் தான். இலங்கையின் அரசியல் யாப்புக்கமைய ஒரு பெளத்த சிங்களவரே…