இலங்கையில் மத வன்முறை, துவேஷம் குறித்து ஐநா கவலை

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக…

இராணுவப் பயிற்சிகளை முடித்த தமிழ்ப் பெண்கள்

இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்…

அவுஸ்திரேலியா சென்ற 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து நாடுகடத்தல்

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டிருந்த 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இலங்கை கடற்படைக் கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.  இதற்காக தமது கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருக்கிறது, மோசமான காலநிலை…

கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது!

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்துப் பேசினாலும், இலங்கை மீது இந்தியா எவ்­வா­றான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­க­ாது. இலங்கை­யா­னது இறை­மை­யுள்ள ஒரு­மைப்­பாட்டைக் கொண்ட நாடு என்­பது மோடிக்கு நன்­றா­கவே தெரியும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல்…

மோடியுடன் பேச்சு நடத்தி சர்வதேச விசாரணையை வலியுறுத்த தமிழ் கூட்டமைப்பு…

மோடி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணை­யை வலி­யு­றுத்­தவே தமிழ் தேசியக் கூட்­டமைப்பு முயற்­சிக்­கின்­றது என குற்றம் சுமத்தும் அர­சாங்க பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய மோடியுடன் ஐநா விசா­ர­ணைக்­கு­ழுவை தடுப்­பதில் அர­சாங்­கத்­திற்கு துணை­யாக செயற்­ப­டுவோம் எனவும் தெரி­வித்­தது. மோடி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­திப்பார்…

கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாதம்’

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்கள் பிரதேசவாதத்தால் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்று மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அரச அலுவலர்கள் பிரதேசவாதத்துடன் நடந்துகொள்வதாக குறை கூறப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக மக்கள் வாழும் கிராமப்பகுதிகளுக்கு ஞாயிறன்று விஜயம் செய்து அவர்களின் வாழ்க்கை நிலைமைகள்,…

‘இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐநா விசாரணை நடக்கும்’

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர்…

அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்’

இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவந்தாலும் அந்த விசாரணைகள்…

ஐ நா விசாரணைக் குழு எந்தவொரு சம்பளமும் பெறாமல் தொண்டு…

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயும் குழு தொண்டு அடிப்படையிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் இந்த விசாரணைக் குழுவை நியமித்திருந்தது. அந்த…

ஐ.நா குழுவுக்கு நேரடியான பங்களிப்பு சாத்தியமில்லை : இலங்கை மனித…

இலங்கை மீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ள வல்லுநர் குழுவை ஐ.நா மனித உரிமைகள் பேரவை…

பாதகமாக முடிந்தது கோத்தபாய- முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பு

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமானதாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின்…

முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவது பொறுக்காமல் அடித்து விரட்டுகின்றனர்: விக்னேஸ்வரன்

முஸ்லிம்கள் பொருளாதார நிலையில் முன்னேறுவதை பொறுக்க முடியாத பெரும்பான்மையினர் அவர்களை அடித்து அடித்து துரத்துகின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னர்…

விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் குறித்து கருத்து வெளியிட கனடா…

கனடாவில் வாழ்ந்துவரும் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மற்றும் நாடுகடத்த முயன்று வருவதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கனேடிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். இலங்கை அப்படியான கோரிக்கையை விடுத்திருப்பது தொடர்பில் கனேடிய நீதியமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. கனடாவில் இருக்கும்…

புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாடு! ஜூலை 23ல் மொரீசியஸில்…

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலாவது அனைத்துலக மாநாடு, மொரீசியஸில் ஜூலை 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது.  மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இது குறித்துப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், மொரீசியஸின் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம்…

புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம்…

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் ஆதரவாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

மற்றொரு அனர்த்தத்தி​ற்கு தூபமிடுகின்றது பொதுபல சேனா: தடுக்கக் கோருகிறார் ஏ.எம்.ஜெமீ​ல்

கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி எனும் போர்வையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று தசாப்த கால…

இலங்கை தொடர்பான ஐநா விசாரணைக்குழுவின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் வெளியாகும்!

இலங்கையில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழு எதிர்வரும் செப்டம்பரில் தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இந்தக்குழுவின் மூன்று முக்கிஸ்தர்கள் நேற்று பெயரிடப்பட்டனர்.  எதிர்வரும் தினங்களில் ஏனையவர்களும் பெயரிடப்படவுள்ளனர். இதனையடுத்து தமது விசாரணைகளை ஆரம்பிக்கும் குறித்த குழு எதிர்வரும் செப்டம்பரில்…

ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம்…

தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, பேருவளையில்…

இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை

இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என இந்திய ஊடகமான தி ஹிந்து ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், தெற்கின் சுற்றுலா நகரங்களான பேருளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் நான்கு…

போர்க்குற்ற விசாரணைகளுக்கு பான் கீ மூன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்…

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் முழுமையான ஆதரவை வழங்குவார் என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர்சிட்டி பிரஸின் கேள்விகளுக்கு நேற்று பதில் வழங்கிய…

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது –…

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 51 பேர் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஹொரணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

ஜிஹாத், தாலிபான்கள் அமைப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை

இலங்கையில் ஜிஹாத் மற்றும் தாலிபான் அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று கொழும்பில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் ஜிஹாத், தாலிபான் அமைப்புகள் குறித்தும்…

தமிழ் கற்றுக்கொண்ட 1122 இராணுவத்தினர் இனி தமிழ் பெண்களை கலியாணம்…

தமிழ் மொழிப்பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 1122 இராணுவ அதிகாரிகளைக் கொண்ட மற்றுமொரு குழுவினருக்கு யாழ் பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தில் அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேற்படி தமிழ் மொழிப் பயிற்சிநெறியை 12 அதிகாரிகளும் வேறுபல பதவிகளையும் சேர்ந்த 1110 பேர்களும் பூர்த்தி செய்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்புப்படை தலைமை அலுவலக…