மோடி கூறுவது போல் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது!-…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் பாரதூரமான பிரச்சினை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து நேற்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதை முழு கிழக்கு…

சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு கிடைத்த இலவச இணைப்பு

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கைக்கு கிடைத்த இலவச இணைப்பு என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் முதலாவது பெண் வெளிவிவகார அமைச்சராக பதிவி ஏற்றுள்ளார். அவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களான சல்மான் குர்சித், எஸ்.எம்.கிருஷ்ணா போன்று இலங்கை அரசாங்கத்துக்கு புதிதானவர்கள்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்- இலங்கை மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்தவேண்டும் என்று இலங்கை மீனவர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர் தேசிய மீனவக்கூட்டுறவின் அழைப்பாளர் அந்தனி ஜேசுதாசன் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற கையெழுத்து திரட்டல் போராட்டத்தின்போது வடக்கில் இந்திய மீனவர்கள் அத்துமீறல் மீள்குடியேற்றம் காணி சுவீகரிப்பு மற்றும்…

மோடி – தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அடுத்த மாத இறுதிப் பகுதியில் அல்லது ஜுலை மாதத்தின் நடுப்பகுதியிலேயே இது சாத்தியமாகும் என்றும் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில் அவரை உடனடியாகச் சந்திப்பதற்கு…

ஜெயலலிதாவுக்கு கடிதம்: சம்பந்தர் விளக்கம்

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்திரத் தீர்வுகாண தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து தங்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அஇஅதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தும், இனப்பிரச்சினைக்கான…

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு: பிரித்தானியா உறுதி

மனித உரிமைகளை மதித்து, அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தமிழ் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் அரசியல் தீர்வுக்கான இணக்கத்தை ஏற்படுத்த இலங்கையை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையின் வளமான அபிவிருத்திக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகிறது என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்…

குரல் நசுக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக நாங்கள் குரல்கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கிளிநொச்சி மாவட்டம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த ஒரு மாவட்டம். அந்த மாவட்ட மக்களுடைய உரிமைக்கான குரலை நசுக்க சிறிலங்கா அரசாங்கம் கடுமையான பிரயத்தனம் எடுத்திருப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச்…

சுவிஸ்நாட்டில் அகதிகள் தஞ்சம் கோரிய 2000 ஆயிரம் பேரின் நிலை?

சுவிட்ஸர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை தோல்வியடைந்தவர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கையில் நிலவிய தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்று தஞ்சம் கோரி தோல்வியடைந்தவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்துவருவதாக மத்திய அரசின் குடியேறிகளுக்கான அலுவலகத்தின் பேச்சாளர் சிலீன் கோல்ப்ராத் பன்னாட்டு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், திருப்பி அனுப்பப்படுவதற்கு இருந்த தற்காலிகத்…

உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மு. குலசேகரன் குற்றச்சாட்டு

கோலாம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 15ம் திகதி 3 தமிழீழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு…

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவரினதும் பாதுகாப்பு குறித்து சர்வதேச…

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள இரண்டு அகதிகள் மற்றும் அடைக்கலம் கோரிய ஒருவரின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளது. இவர்கள் மூவரும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகரக பாதுகாப்பில் இருந்தவர்களாவர். மலேசியா 1951 ஆம் ஆண்டின்…

‘‘இந்தியாவும் ஈழத்தமிழரும்” -அவலங்களின் அத்தியாயங்கள்!- நிராஜ் டேவிட்

ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987-ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக் கொலைக்கு இராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த…

“தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய” மோடி கோரிக்கை

மோடி மஹிந்த சந்திப்பு   இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான அதன் உறவுகளை இந்தியா மதிப்பதாக ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் சமாதானம் மிக்க ஒரு வாழ்க்கைக்கான தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை…

மகிந்தவை சந்தித்துப் பேசினார் மோடி

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து…

‘மக்களைக் கொல்ல ஆணையிட்டவர்களுக்கு தூதரக பதவி’

இலங்கையில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் மக்களைக் கொல்வதற்கு ஆணைவழங்கிய இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கி ஊக்குவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் கொழும்புக்கு அருகே கம்பஹா மாட்டத்தில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான…

‘பெண்கள் மீதான கொடூரங்களை நிறுத்துக’: மன்னாரில் பேரணி

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, குறிப்பாக பெண்களின் கழுத்தை அறுத்தும் வாளால் வெட்டியும் கொலை செய்யும் கொடூரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றுகோரி மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடந்துள்ளது. நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நானாட்டான் கடைவீதி வரையில்…

40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து: சிங்களப் பத்திரிகை

குண்டு தாக்குதலைகளை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இவர்கள் பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின்…

விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் தீவிர தேடுதல்

மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்போது இதுவரைக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு…

புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கோபி, தேவியன் உள்ளிட்டவர்களை கொலை செய்தமைக்கு பழி தீர்க்கப் போவதாக பிரான்ஸிலிருந்து அவர்களை வழிநடத்திய சந்தோசம் சூளுரைத்துள்ளார். எனவே வடக்கு…

13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த அவரின் அரசாங்கம் முனையும் என்று கட்சியின் பேச்சாளர் நிர்மலா சித்தாரணம் தெரிவித்துள்ளார்.…

விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான்! இலங்கையை சிக்க வைக்க…

இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்…

மலேசியாவில் அல்லலுறும் இலங்கை அகதிகள்- தலையிடுமா மனித உரிமை அமைப்புகள்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், சட்டத்துக்குப் புறம்பான கைது, படுகொலை என்பவற்றால் பாதிப்படைந்து UNHCR யையே முழுதாக நம்பி 5000 ற்கும் மேற்பட்டோர் அகதியாக பதிவுசெய்து மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் சமீப காலமாக UNHCR இன் செயல்பாடுகள் கவலையளிப்பதாகவும், சந்தேகத்துக்கிடமானதுமாக உள்ளது.…

தமிழினத்தின் தலைவிதியைத் தொடர்ந்தும் தவறாகவே எழுத முயலும் இந்திய ஆட்சியாளர்கள்!

ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பிற்குப் பின்புலமாக அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கிய காங்கிரஸ் கட்சியின் அதே நியாயப்பட்டை தற்போது ஆட்சியில் ஏறவுள்ள பாரதிய ஜனதா கட்சியும் புதுப்பித்துள்ளது. சிறிலங்கா அரசுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளாவிட்டால், இலங்கையிலுள்ள தமிழர்களை யார் பாதுகாப்பது?என்று பாரதிய ஜனதா கட்சியின் கல்யாணராமன் தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி அவர்களது…

நவநீதம்பிள்ளை, ஜெயலலிதா ஆகியோரும் புலிகளின் கைப்பொம்மைகளே என்கிறார் உதய கம்மன்பில

புலி­களை கொன்­ற­மைக்கு பழி தீர்க்­கவே நவ­நீ­தம்­பிள்ளை அவ­ச­ரப்­ப­டு­கின்றார். நவ­நீ­தம்­பிள்ளை முதற்­கொண்டு ஜெய­ல­லிதா வரை­யிலும் இலங்­கையில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் அனை­வரும் பு­லி­க­ளினால் வழி­ந­டத்­தப்­பட்டு வரு­ப­வர்­களின் கைப்­பொம்­மைகள். என்று ஜாதிக ஹெல உறு­மய கட்­சி உறுப்பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். இலங்கை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யினை நடத்த ஐ.நா. ஆணை­யாளர்…