இலங்கையை விட்டு வெளியேறுவோர் தொகை இலட்சக்கணக்கில் அதிகரிப்பு

2022 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஆரம்பமாவதற்கு முன் வருடாந்தம் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பென்று மத்திய வங்கி கூறுகிறது. மத்திய வங்கியின்…

இலங்கை முழுவதும் மிகவும் குளிரான காலநிலை

இங்கையில் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை இதனை தெரிவித்துள்ளது. மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின்…

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை அரசு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டினர் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில், இலங்கை சுகாதார அமைச்சகம் கொரோனா கட்டுப்பாடுகளை நேற்று அதிரடியாக…

காலாவதியான அரிசி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி! ராகமை களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

இலங்கையில் பிரபல அரிசி உற்பத்தி நிறுவனமொன்றில் காலாவதியான அரிசி பொதிகளை திகதி மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த களஞ்சியாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ராகமையில் உள்ள பாரிய களஞ்சியசாலை ஒன்றுக்கே பொதுச்சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு இவ்வாறு சீல் வைத்துள்ளனர். காலாவதி திகதி மாற்றம்…

கொழும்பில் தூசி துகள்களின் அளவு அதிகரிப்பு

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலையுடன் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் நிலவும் பனிமூட்டமான சூழல் தொடர்பில்  ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட…

கொழும்பில் மனித உடற்பாக கடத்தலில் ஈடுபடும் நபர் கைது

கொழும்பு ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மனித உறுப்புகள் சத்திரசிகிச்சை மூலம் கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ், காஜிமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை கைது…

இலங்கையர்களை சுற்றுலா வீசாவில் மலேசியாவிற்கு அனுப்பும் மோசடி அம்பலம்

இலங்கையர்களை சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது. சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் வேலைக்காக ஆட்களை கடத்துவது தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கண்டுபிடித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பணியகம் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து கடத்தலில்…

இலங்கையில் கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாற்றப்படுகின்றன

கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாறுவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான இன்றைய…

சீனாவின் முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம்

சீனாவின் முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் சீனாவின் வர்த்தகரக்ள் தூதுக்குழுவொன்றுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இலங்கையில் முதலீடு செய்வதற்கான விருப்பத்தை சீனாவின் முன்னணி வர்த்தகர்கள் வெளிப்படுத்தி இருப்பதாக பிரதமர் அலுவலக ஊடகப்…

தொழில் தேடி வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

இலங்கையில் இருந்து கடந்த பதினொரு மாத காலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்துக்கும் அதிமான மக்கள் வெளிநாடுகளுக்குத் தொழில் தேடி பயணித்துள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சத்தி 89 ஆயிரத்து 395 பேர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர். மேலும் பதினைந்தாயிரம் பேர்…

ஐரோப்பிய நாட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர தீவிர முயற்சி

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவது பாரிய சவாலாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்தில் கொண்டு குறுகிய கால,…

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்! அமெரிக்கா அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அலி சப்ரியை சந்தித்த அன்டனி பிளிங்கன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும்…

இலங்கையில் 80 ரூபாயாக அதிகரிக்கும் முட்டை விலை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது முட்டையின் விலை 50 - 60 ரூபாய் வரையில் இருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை…

இலங்கையில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை! ஜப்பான் வழங்கியுள்ள பணம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக எம்ஏஜி என்ற சுரங்க ஆலோசனைக் குழுவிற்கு ஜப்பான் அரசாங்கம் மொத்தமாக 648,148 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஜப்பானின் தூதர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் எம்ஏஜியின் இலங்கைக்கான இயக்குநர் கிறிஸ்டி மெக்லெனன் ஆகியோர் இதற்கான உடன்படிக்கையில் கடந்த 30…

இணையவழி குற்றங்களை தடுக்கும் சர்வதேச ஒப்பம் – முதல் தெற்காசிய…

புடாபெஸ்ட் சைபர் குற்ற சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இந்த நெறிமுறையில் கைச்சாத்திட்ட முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு…

இலங்கையின் தேசிய வளங்கள் புலம்பெயர் தமிழருக்கு விற்பனை – ரணிலின்…

இலங்கையில் வருடாந்தம் 9 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டும் சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்நிய செலவாணியை இலக்காக கொண்டு சிறிலங்கா டெலிகாம் நிறுவனத்தை மலிவான விலைக்கு விற்பனை…

மத்தியவங்கி ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கோரும் ரணிலின் ஆலோசகர்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் தெரிவித்த கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலாநிதி…

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை மின்சார சபையின் (CEB) தற்போதைய இழப்பை ஈடுசெய்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு படிகளின் கீழ் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (29) நடைபெற்ற தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான…

இந்தியாவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித் துகள்களின் தர அளவு மீறப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி…

போதை கலந்த இனிப்புகள் பெருமளவில் மீட்பு – மாணவர்கள் இலக்கு

போதைப்பொருள் அடங்கிய 40,000 இனிப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறுவர்களுக்கு விற்க தயாராக வைத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பெற்றோர் முறையீடு பாணந்துறையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக உள்ள கடையொன்றில் இவை…

இலங்கையர்கள் இந்திய ரூபாயை வைத்திருக்க புதிய நடைமுறை

இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரம் இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவி நிலை கட்டளைத் தளபதி நியமனம்

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (COS) நேற்று (29.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவரான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 1986 இல் இராணுவத்தில் அதிகாரியாக இணைந்தார் மற்றும் இலங்கை இராணுவத்தின் மிகவும் மரியாதைக்குரிய காலாட்படை படைப்பிரிவுகளில் ஒன்றான இலங்கை லைட்…

ஓமானில் விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள் – குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது…

ஓமானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷான் குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். இன்று (29) அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போதே இவர் கைதுசெய்யப்பட்டார். இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம்…