மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
மஸ்லி மாலிக் விவகாரத்தில் தவறான எண்ணம் வேண்டாம், சேவியர்
இந்த 14வது பொதுத்தேர்தலில் எனக்கு வாக்களித்துக் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும், நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர உதவிய அனைவருக்கும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியின் வழி நாங்கள் மமதையோ ஆணவமோ கொள்ளவில்லை. நமக்கு முன் இருக்கும் மிகப் பெரிய…
1எம்டிபி சிறப்புப் பணிப்படை; முன்னாள் ஏஜி கனி திரும்பி வந்துள்ளார்
1எம்டிபி ஊழலை விசாரிக்கவும், தவறு செய்தவர்கள் மீது வழக்குத் தொடரவும், சம்பந்தப்பட்ட சொத்துகளை மீட்கவும் பிரதமர் மகாதிர் ஒரு சிறப்புப் பணிப்படையை அமைத்துள்ளார். அச்சிறப்பு பணிப்படைக்கு முன்னாள் ஏஜி அப்துல் கனி பட்டேல், முன்னாள் எம்எசிசி தலைவர் அபு காசிம் முகம்மட், தற்போதைய எம்எசிசி தலைவர் முகமட்…
மகாதிர்: தேசியக் கடன் ரிம1 டிரிலியனைத் தாண்டி விட்டது
முன்பு ரிம300 பில்லியனாக இருந்த மலேசியாவின் கடன் இப்போது ரிம1 டிரிலியனாக உயர்ந்து விட்டது என்று மகாதிர் இன்று கூறினா
குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளிப் போடப்பட்டது
பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் பாங் லி கூன் ஆகியோருக்கு எதிராக இன்று தொடங்கவிருந்த ஊழல் வழக்கு தள்ளிப்போடப் போடப்பட்டுள்ளது. குவான் எங் மற்றும் கோபிந்த் சிங் டியோ ஆகிய இருவரும் முறையே நிதி அமைச்சராகவும் தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர்களாகப்…
போக்கா சட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் – சுவராம்!…
பிரதமர் துன் மகாதீர், போலீஸ் தடுப்புக்காவலில் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், கைது செய்யபட்டவர்களை முறையாக நடத்த வேண்டும் என்றும், தடுப்புக்காவலில் மரணம் ஏற்பட்டால், முறையான புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த மே16-ஆம் தேதி கருத்து கூறியிருந்தார். அதை ஒட்டி கருத்துரைத்த சுவராம் மனித…
ராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை, வேறு சாட்சிகள் இருக்கின்றன
அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு தொடர்பான உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டுமானால், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கேட்கும் சிரூல் அஸாரின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கக் கூடாது என புக்கிட் குலுகோர் எம்பி ராம்கர்ப்பால் சிங் இன்று கூறினார். இந்தக் கொலை வழக்கில், இன்னும் விளக்கம் அளிக்காத சாட்சிகள் பலர்…
கிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு வாய்ப்பு தரவும்
டாக்டர் மஸ்லி மாலிக் கல்வி அமைச்சராக தனது பணியைச் செய்ய, அவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரையும் லிம் கிட் சியாங் கேட்டுகொண்டார். அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து, அந்த முன்னாள் விரிவுரையாளரைப் பலர் விமர்சித்து வருவதை தான் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார். “ஆனால், புதிய மலேசியாவில் கல்வி…
ரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக நடத்துங்கள்
தங்கள் குடும்பத்தினரைக் கண்ணியம் மற்றும் சுய மரியாதை கொண்ட சாதாரண மக்கள் போல் நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் கேட்டுக்கொண்டார். 1எம்டிபி விசாரணையை முடிக்க, அவரது இல்லத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார். "அதிகாலை நேரத்தில் நடந்த…
ரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த வாரம்
மேன்மக்கள் மன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக ரோபர்ட் குவோக் அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதன் பேச்சாளர் எ. காடிர் ஜாசின் கூறினார். ஹோங்காங்கிலிருந்து அக்கோடீஸ்வரர் இங்கு வருவதற்குகான தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை என்று காடிர் மலேசியாகினியிடம் கூறினார். அவர் இங்கு வர திட்டமிட்டுள்ளார்.…
ஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப் ஏளனம் செய்தார்
முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புபடுத்தப்பட்ட சொத்துகள் மீது போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர், நஜிப் பேச ஆரம்பித்துள்ளார். நேற்று, மலாய் மெயிலுடன் நடத்திய நேர்காணலில், ஜிஎஸ்டியை அகற்றுவது மற்றும் இதர பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவது பற்றி பக்கத்தான் ஹரப்பான் அளித்துள்ள வாக்குறுதிகளை நஜிப் வெறும் கனவு மற்றும்…
கிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம் இல்லை என்று தெரிவித்து…
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மகாதிர் அறிவித்த அவரது முதல் கட்ட அமைச்சரவையில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பெயர் இடம்பெறாதது பெரும் கேள்விக்குறியானது. இன்று, தாம் புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை என்பதை அவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்று சைனா பிரஸ் கூறுகிறது. புதிய…
நாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை வெளிப்படுத்தவும் சிரூல் தயார்
ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ்காரர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு உதவும் வகையில், 12 ஆண்டுகளுக்கு முன்னர் அல்தான்துயா ஷாரிபூவின் மரணத்தில் நடந்த உண்மையை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். புதிய மலேசிய அரசாங்கம், அவருக்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டுமெனும் நிபந்தனையோடு, சிரூல்…
அறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நஜிப் கூறுகிறார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனக்கும் தன் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலிஸ் புகார் செய்துள்ளதாக உள்ளூர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 1எம்டிபி ஊழல் தொடர்பான மோசடி விசாரணையில் ‘சாட்சிகள் பாதுகாப்பு திட்ட’த்தின் கீழ் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதாகவும் மலாய் மெயில் கூறியுள்ளது.…
புதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று அல்லது நான்கு இந்தியர்கள்…
பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான மகாதிர் “இந்தியச் சமூகத்தைச் சமூகப் பொருளியல் ரீதியில் இதர சமூகங்களுக்கு இணையாக உயர்த்துவது தன் முக்கிய இலக்குகளில் ஒன்றென” கூறியிருப்பதை வரவேற்பதாக “நாட்டின் முதன்மை இந்திய சமூக அமைப்புகள்” என்று கூறிக்கொள்ளும் 14 இந்திய என்ஜிஒ-கள் நேற்று பிரிக்பீல்ட்ஸில் நடந்த…
‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு, மார்க்கோசின் சொத்து மதிப்பை…
முன்னாள் பிரதமர் நஜிப்பின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட சொத்தின் மதிப்பு, பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸ் மற்றும் அவரது துணைவியார் இமெல்டாவின் சொத்து மதிப்பையும் மிஞ்சும் சாத்தியம் உள்ளது. "ஓர் அற்புதமான சாதனையை நாம் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன், இமெல்டா மற்றும் மற்றவர்களையும் மீற (சொத்து) வாய்ப்புள்ளது,” என…
இரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம், திருமணச் சான்றிதழ் –…
ஜாலான் லங்காக் டூத்தா, தாமான் டூத்தாவில் உள்ள நஜிப் துன் ரசாக்கின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரும்புப் பெட்டி வெற்றிகரமாக திறக்கப்பட்டது, அதனுள் பழைய வெளிநாட்டு நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக கூறுகையில், நஜிப்பின் செய்தித் தொடர்பாளர், அதனுள் நஜிப் – ரொஸ்மாவின் திருமணச் சான்றிதழ்களும் இருந்தது என்றார்.…
முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை இசி தலைவர் மறுத்தார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்திற்குச் சென்றதையும் அங்கு செய்தி சேகரித்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டார் எனக் கூறப்படுவதையும் தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா மறுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவ்வாறு பதிவிட்ட இரண்டு முகநூல் செயலர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை அவர்…
நாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் இப்போது மலேசியா…
முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது நிருவாகத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு நாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரவுன் இப்போது நாட்டிற்குள் வருவதற்கான சுதந்திரம் பெற்றுள்ளார். பிரச்சனை இன்றி வந்து சேர்ந்தேன். எனது இருதயம் சற்று தயங்கியது. ஆனால், குடிநுழைவுத்துறையில்…
ஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்ச்சி
கடந்த 2009, மே18-ம் நாள் இலங்கை அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தங்கள் இன்னுயிரை ஈந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கோரும் நிகழ்ச்சி, நேற்றிரவு ஜொகூர் பாரு மாநகரில் நடந்தேறியது. ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், தொடர்ந்து 9-ம் ஆண்டாக நடந்த இந்த ‘மெழுகுவர்த்தி ஏந்தல் நினைவஞ்சலி’ நிகழ்ச்சியில்…
டைம்” நான் மகாதிர், பாக் லா, நஜிப் ஆகியோரல் விசாரணைக்கு…
மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம் ஸைனுடின் தமக்கு எதிராக அன்வார் இப்ராகிம் விடுத்துள்ள எச்சரிக்கையை உதறித்தள்ளினார். அன்வார் இப்ராகிம் மலேசியாகினியுடன் நடத்திய நேர்காணலில் டைமின் ஜனநாயக பொறுப்புடைமை குறித்து கேள்வி எழுப்பியதுடன் அந்த முன்னாள் நிதி அமைச்சர் அவரது கடந்த கால பெரும் பிரச்சனைக்களுக்கு விளக்கம் அளிக்க…
பேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர் வெளியிட்டார்
அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளப் போகிறவர்களின் பெயர் பட்டியலை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டது. பேரரசர் சுல்தான் மாமுட் V தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தப் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டு உயர்மட்ட பதவிகளைத் தவிர்த்து, பெர்சத்துக்கு மூன்று பதவிகள், பிகேஆருக்கு மூன்று, டிஎபிக்கு 4…
மகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான் எடுத்துக்கொள்ள முடியாது
கல்வி அமைச்சர் பதவியைத் தாம் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் அது பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கைக்கு முரணானது என்று பிரதமர் மகாதிர் கூறினார். அது தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் அதை இப்போதைக்கு மீற முடியாது...ஆனால் நான் கல்வி அமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை…
இன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்
யாங் டி-பெர்த்துவான் அகோங்கிடம் மலேசிய அமைச்சரவையின் பட்டியலை வழங்க, இன்று மாலை அவரைச் சந்திக்கவிருக்கிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட். இன்று மாலை 5 மணியளவில், இஸ்தானா நெகாராவில் அச்சந்திப்பு நிகழும் என பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். "டாக்டர் மகாதிர், அவர் தரப்பு முன்மொழிந்த…
























