மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
கொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் – 284 ஆடம்பர கைபேக்குகள்,…
நேற்றிரவு கோலாலம்பூர் பெவியியன் குடியிருப்பு அடுக்ககத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் சொந்தமான வீட்டில் போலீஸ் மேற்கொண்ட சோதனைகளில் பிரமிக்க வைக்கும் சொத்துகளையும் ரொக்கத்தையும் கண்டனர். போலீஸ் மேற்கொண்ட சோதனைகளின் போது 284 ஆடம்பர கைபேக்குகள் மற்றும் நகைகள், இதர விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் பல வகையான…
அன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று, நஜிப் இரண்டு முறை…
மே 9-ம் தேதி பொதுத் தேர்தலில், பிஎன் கடுமையான தோல்வியைச் சந்தித்தபின்னர், என்ன செய்வது என்று ஆலோசனை பெற, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அன்வார் இப்ராஹிமைத் தொடர்பு கொண்டுள்ளார். யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் மன்னிப்பைப் பெற்ற பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அன்வார், பொதுத் தேர்தல் (ஜிஇ) இரவன்று…
மகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது
பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமதை அவதூறாகப் பேசினார் என்பதற்காக, காவல்துறையினர் ஒருவரை இன்று கைது செய்தனர். ‘மகாதிர் மற்றும் இஸ்லாத்தை அவமதித்துள்ளார்’ என அதிருப்த்தி அடைந்த சில அரசு சாரா நிறுவனங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்நபரைக் கைது செய்ததாக லங்காவி போலிஸ் தலைமையகம் முகநூல் வழி…
முன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில் 1எம்டிபி குழு நிறுவப்பட்டுள்ளது
1எம்டிபி ஊழல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மேன்மைமிக்கவர்கள் மன்றம் இன்று மாலை அறிவித்தது. 1எம்டிபி விவகாரத்தை ஆய்வதற்காக ஒரு தனிப்பட்ட முழு இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை மன்றம் அங்கீகரிப்பதாக ஒரு செய்தி அறிக்கையில் அம்மன்றம் கூறுகிறது. அக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அக்குழுவின்…
மகாதிர் கல்வி அமைச்சராகிறார், வான் அசிஸா மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சர்
பக்கத்தான் ஹரப்பானின் புதிய அமைச்சரவையில் கல்வி அமைச்சர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாக பிரதமர் மகாதிர் இன்று அறிவித்தார். இந்த நாட்டில் ஏராளமானோர் கல்வி கற்காதவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் கல்வி அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்டேன். அதன் மீது நான் கவனம் செலுத்த முடியும் என்று நகைச்சுவையோடு…
மஇகா-வுக்குச் சொந்தமான RM3 பில்லியன் சொத்துக்களைத் திருப்பிக் கொடுங்கள், கட்சி…
மஇகா-வுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்குமாறு, கட்சியின் முன்னாள் தலைவர் ச சாமிவேலுவையும் கட்சியின் கல்வி பிரிவு - எம்.ஐ.இ.டி. வாரிய உறுப்பினர்களையும் மஇகா உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான RM2.5 பில்லியன் சொத்துக்களை நிர்வகிக்கும் எம்.ஐ.இ.டி., அச்சொத்துக்களைக் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்சியின் உறுப்பினர்…
‘போலீஸ் நடவடிக்கை இயல்புக்கு மாறானது!’ – நஜிப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள்
முன்னாள் பிரதமர் நஜிப் இல்லத்தில் போலிசார் மேற்கொண்ட சோதனை தொடர்பில், அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிபடுத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக போலிசார் மேற்கொண்டுள்ள இச்சோதனை, இயல்புக்கு மாறாக அமைந்துள்ளது என மலேசியாகினியிடம் ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்நபர், நேற்றிரவு மலாய் சட்டை அணிந்திருந்த…
அன்வார்: டைம் பங்களிப்பு செய்யலாம், ஆனால் பழைய ஊழல்களை நினைவில்…
பெர்சத்து அமைக்கப்படுவதற்கு முன்பே, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடினை ஊழல் பேர்வழிகள் ஒருவராக முன்னிநிலைப்படுத்தி இருந்தார். தற்போதைய பிரதமர் மகாதிர் அம்னோவை விட்டு வெளியேறி பக்கத்தான் ஹரப்பானுடன் சேர்ந்து குடிமக்களின் பிரகடனம் வெளியிட்ட போதும்கூட, டைமுடன் ஒத்துழைப்பது பற்றி…
நஜிப் வீட்டில் போலிசாரின் தேடல் தொடர்கிறது
நேற்று இரவு, கோலாலம்பூர், ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் இரசாக்கின் தனியார் இல்லத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடல் நடவடிக்கை, 12 மணி நேரங்கள் கடந்தும் இன்னும் தொடர்கிறது. சில போலிஸ் வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறின, ஆனால் ‘பிளாக் மரியா டிரக்’…
பிஎம் : 17,000 அரசியல் நியமனப் பொது ஊழியர்கள் நிறுத்தப்படுவர்
அரசாங்க செலவினங்களைக் குறைக்க, 17,000 அரசியல் நியமனப் பொது ஊழியர்களை அரசாங்கம் அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்துள்ளார். அரசியல் நியமனப் பதவிகள் ஒரு 'வீண் செலவு' என அவர் விவரித்தார். "அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இவர்களில் சிலர் நிர்வாகத்…
ஜாம்: முகைடின் ஜொகூர் மந்திரி பெசார் நியமனத்தில் தவறு செய்துவிட்டார்
பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சித் தலைவர் முகிடின் யாசின், ஜொகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சப்பியன் நியமனத்தில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் ஜைனுடின் மைடின் கூறியுள்ளார். "ஜொகூர் மந்திரி பெசாரை நியமிப்பதில் முகிடின் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார், மக்களுடைய விருப்பத்திற்கு எதிரான இது…
ஜூன் தொடக்கத்திலிருந்து சுழியம் விழுக்காடு ஜிஎஸ்டி, நிதி அமைச்சு அறிவிப்பு
ஜூன் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு 6 விழுக்காட்டிலிருந்து சுழியம் (0) விழுக்காட்டிற்கு குறைக்கப்படும் என்று நிதி அமைச்சு இன்று அறிவித்தது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை நிறுத்தும்படி தாம் நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் மகாதிர் செய்த அறிவிப்புக்குப் பின்னர் நிதி அமைச்சு…
சந்தேகத்திற்குரிய பழமைவாதிகள் சீர்திருத்த திட்டத்தைத் தடம்புரளச் செய்ய முடியாது, அன்வார்…
"சந்தேகத்திற்குரிய நபர்களால்" சீர்திருத்தத் திட்டத்தைத் தடம்புரளச் செய்ய முடியாது என்று அன்வார் இப்ராகிம் அவரது ஆதரவாளர்களுக்கு உறுதி அளித்தார். சீர்திருத்தத் திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று பலர் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு வலிவான ஆதரவு இருப்பதை நான் குறைந்தபட்சம் கடந்த வாரத்தில் கண்டேன் என்று அன்வார்…
1எம்டிபி சிஇஒ அருள் கந்தா நாட்டை விட்டு வெளியேற தடை…
1எம்டிபியின் தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமிக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1எம்டிபியின் தலைமை செயல்முறை அதிகாரியாக அருள் ஜனவரி 2015 இல் பொறுப்பேற்றார். இவருக்கு முன்பிருந்த 1எம்டிபியின் தலைமை அதிகாரிகள் போலல்லாமல், அருள் அந்த அமைப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து அதைத் தற்காத்து…
வழக்குரைஞர் ஷாபிக்கு ரிம9மில்லியன் வழங்கப்பட்டதா? விசாரிக்க வேண்டும் என்கிறார் அமனா…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9மில்லியன் வழங்கியதாகக் கூறப்படுவதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என முகம்மட் ஹனிபா மைடின் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்விவகாரம்மீது பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் விவரமான விசாரணையை மேற்கொள்ளும் என்று அந்த அமனா தலைவர் எதிர்பார்க்கிறார். “பல தரப்புகள், மலேசிய …
பினாங்கு ஆட்சிக்குழு பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டது
பினாங்கு முதலமைச்சர் செள கொன் இயோ, 11-பேரடங்கிய பினாங்கு ஆட்சிக்குழுவினரை இன்று அறிமுகப்படுத்தினார். 11 பேரும் பினாங்கு ஆளுனர் அப்துல் ரஹ்மான் அப்பாஸின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீமுத்தியாராவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அதில் பிகேஆர் ஏற்கனவே இருந்ததுபோல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளது. பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் ஜகியுடின் …
அன்வாருக்கு முழு மன்னிப்பு அளிக்க பேரரசர் ஒப்புக் கொண்டார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முழு மன்னிப்பு கோரும் முறையீடு மே 16 இல் 51 ஆவது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அம்முறையீடு பரிசீலிக்கப்பட்டது. பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 42 க்கு ஏற்ப, மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைப்படி, பேரரசர் சுல்தான் முகம்மட்…
1எம்டிபி பற்றி வருத்தம் தெரிவிக்காதது ஏன்? கைரியிடம் கிட் சியாங்…
அம்னோ உறுப்பினர்கள் கட்சிமீது அதிருப்தி கொண்டிருந்ததை அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் தெரியப்படுத்தாதற்காக கைரி ஜமாலுடின் வருத்தப்படுவதை டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அம்னோ இளைஞர் தலைவர் காலம்தாழ்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்ட லிம், கைரி அவரது கண்மூன்னே நிகழ்ந்த …
அன்வார் இன்று விடுவிக்கப்படும் சாத்தியம் உண்டு
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது குடும்பத்தினர் அன்வாரின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாரிசான் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புதிய ஹரப்பான் அரசாங்கம் அன்வாரின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.…
1எம்டிபி தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பகிரங்கமாக்கப்பட்டுள்ளது
இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்த 1எம்டிபி தேசிய கணக்காய்வாளர் அறிக்கை இப்போது மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைக் கணக்காய்வாளர் மடினா முகமட் அறிவித்தார். பிரதமர் மகாதிரை சந்தித்த பின்னர் மடினா இந்த அறிவிப்பை இன்று செய்தார். ஜனவரி 22, 2016 இல் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்டு மார்ச் 4, 2016 இல்…
அன்வாருக்கு சிறப்பான அதிகாரங்கள் இல்லை, மகாதிர் கூறுகிறார்
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிரதமர் பதவியைத் துறந்த பின்னரும் பின்னணியிலிருந்து தொடர்ந்து தமது பங்களிப்பைச் செய்யப் போவதாக பிரதமர் மகாதிர் கூறினார். தமது இடத்திற்கு பிரதமராக அன்வார் வருவது பற்றி குறிப்பிட்ட மகாதிர், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு இருக்கையைப் பெற வேண்டும்; அதன் பின்னர் அவருக்கு…
நஜிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார், மகாதிர் உறுதி
1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப்பை நீதிமன்றத்தில் நிறுத்துவதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்பதை பிரதமர் மகாதிர் உறுதிப்படுத்தினார். தோக்கியோ, வால் ஸ்திரீட் ஜர்னல் சிஇயோ மன்றத்துடன் வீடியோ இணைப்பு வழி நடந்த ஒரு நேர்காணலில் நஜிப்புடன் எந்த ஒரு பேரத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மகாதிர்…
பிரதமர் தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் ஏஜி ஆகியோரைச் சந்தித்தார்
புத்ரா ஜெயா, இன்று பிரதமர் மகாதிர் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் முகம்மட் மற்றும் முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேல் ஆகியோரைச் சந்தித்தார். கனி பட்டேல் ரிம2.6 பில்லியன் மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பிரச்சனைகள் மீதான சிறப்பு பணிப்படைக்கு தலைமையேற்றிருந்தார். விசாரணையின் பாதி…
























