பிஎம்ஓ: புருணை சுல்தான் யுஎஸ்$1 பில்லியன் நன்கொடை அளித்தார் என்பது…

சமூக    வலைத்தளங்களில்   புருணை    சுல்தான்  மலேசிய   அரசாங்கத்துக்கு  யுஎஸ்$1 பில்லியன்  நன்கொடை  அளித்தார்   என்று  பரவிவரும்     செய்தி  பொய்யான    செய்தி   என்று    பிரதமர்   அலுவலகம் (பிஎம்ஓ)   கூறியது. இன்று   காலை   முக்ரிஸ்   மகாதிர்  எப்சி  முகநூல்   பக்கத்தில்    வெளியான   அச்செய்தியில்    சிறிதளவும்  உண்மை  இல்லை    என்று   பிஎம்ஓ   பேச்சாளர்  …

நஜிப்பிடம் உண்மையைச் சொல்லாதது தப்பு: கைரி வருத்தம்

முகைதின்  யாசினையும்   ஷாபி   அப்டாலையும்   கட்சிநீக்கம்   செய்தது   அடிநிலை  உறுப்பினர்களுக்குப்  பிடிக்கவில்லை  என்பதை  முன்னாள்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கிடம்   சொல்லியிருக்க   வேண்டும்   சொல்லாதது   தப்பு    என்று  கைரி   ஜமாலுடின்  வருத்தப்படுகிறார். “முகைதின்  தூக்கப்பட்டபோதும்   ஷாபி    தூக்கப்பட்டபோதும்   ஒரு   பிரச்னை   உருவானது.  அதை  ஒப்புக்கொள்ள   யாரும்   விரும்பவில்லை.  அதுதான் …

மகாதிர் மலேசியாவைச் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வார், சாமிவேலு கூறுகிறார்

  பிரதமர் மகாதிர் நாட்டை அனைத்து மலேசியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வார் என்று மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் சாமிவேலு அவரது அமைச்சரவையில் அமைச்சராக 1981 லிருந்து 2003 ஆம் ஆண்டு வரையில் இருந்துள்ளார். தாம் மகாதிர்…

ரோஸ் பதிவாளர்: நான் வழக்கம் போல் இன்னும் கடமையில் இருக்கிறேன்

  மன்றங்கள் பதிவாளர் (ரோஸ்) சுரயாத்தி இப்ராகிம் தாம் இன்னும் எப்போதும் போல் தமது கடமைகளைச் செய்து வருவதாகக் கூறினார். எந்த நடவடிக்கை பற்றியும் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; இன்று வரையில் தமது கடமைகளை வழக்கம் போல் செய்து வருவதாக அவர் கூறினார். மன்றங்கள் பதிவகத்தில் மிக…

பொய்ச் செய்தி சட்டம் : நீக்கப்படும் எனக் கூறப்பட்டது, இப்போது…

2018-ஆம் ஆண்டு பொய்ச்செய்தி சட்டத்தை இரத்து செய்யலாமா என்பதை அரசாங்கம் முதலில் பரிசீலிக்கும் என துன் டாக்டர் மகாதிர் முஹமட் இன்று தெரிவித்தார். "நாம் ஆய்வு செய்ய வேண்டும்," என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுருக்கமாக கூறினார். பொதுத் தேர்தலுக்கு முன்னர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி…

இர்வான் பொதுச் சேவை இலாகாவிற்கு மாற்றப்பட்டார்

  கருவூலத்தின் தலைமை அதிகாரி இர்வான் செரிகர் அப்துல்லா உடனடியாக பொதுச் சேவை இலாகாவிற்கு (பிஎஸ்டி) மாற்றப்பட்டுள்ளார் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹமாஸ் தெரிவித்தார். 1எம்டிபியின் தலைவருமான இர்வான் கருவூலத்தின் தலைமை அதிகாரியாகச் செயல்பட இனிமேலும் அனுமதிக்கப்பட மாட்டார் என்று அலி கூறினார். மே 14…

அன்வார் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம், மகாதிர் கூறுகிறார்

  பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மன்னிபு அளித்தல் மற்றும் விடுவிக்கப்படுதல் ஆகியவற்றில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார். அன்வாருக்கு மன்னிப்பு பெறுவோம் என்ற நமது வாக்களிப்பு தொடரும், ஆனால் அதற்கான வழிமுறை பின்பற்றப்படும். அது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், மன்னிப்பு வாரியம்…

குடிநுழைவுத்துறை கருப்புப் பட்டியல் மிக நீளமானதாம்

குடிநுழைவுத்துறையின்  கருப்புப்   பட்டியலில்   சேர்க்கப்பட    வேண்டிய   பலரது   பெயர்களைக்  கொண்ட   இன்னொரு   பட்டியல்   பிரதமர்  டாக்டர்    மகாதிர்   முகம்மட்டிடம்   கொடுக்கப்பட்டுள்ளது. முதலில்   கொடுக்கப்பட்ட    பட்டியலில்    உள்ளவர்கள்  ஏற்கனவே   கருப்புப்  பட்டியலிடப்பட்டு  விட்டனர்  என   ஒரு   வட்டாரம்   கூறியது. “இரண்டாவது   பட்டியல்  பிரதமரிடம்  ஒப்புதலுக்காக   ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அது  விரைவில்   அமலுக்கு  …

ஏர்ஏசியா பங்குகள் சரிவு

பங்குச்   சந்தையில்   இன்று   வர்த்தகம்   தொடங்கியபோது   ஏர் ஏசியா  நிறுவனப்  பங்குகள்   10 விழுக்காடு   சரிவு  கண்டன.  அந்நிறுவனத்   தலைவர்    டோனி   பெர்னாண்டஸ்    பொதுத்   தேர்தலில்   முன்னாள்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கை   ஆதரித்தது    தப்பு   என்று   ஒப்புக்கொண்டு   மன்னிப்பு   கேட்ட   பின்னரும்   இது    நிகழ்ந்தது. நஜிப்  கடந்த  …

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவி துறக்க வேண்டும் அல்லது 100…

  தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களும் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அவர்களை ஆணையத்திலிருந்து அடுத்த 100 நாள்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் பெர்சே கோரியுள்ளது. கிடைக்கப் பெற்ற புகார்கள் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு முன்னால் அந்த ஆணையம் புரிந்த குற்றச்…

எம்ஏசிசி தலைமையகத்தில் வாகனங்கள் சோதனை

புத்ரா    ஜெயாவில்,  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையத்   தலைமையகத்திலிருந்து  வெளியேறும்    வாகனங்கள்    சோதனை    செய்யப்படுவதாக     பெரித்தா   ஹரியான்   கூறியது. அந்நாளேடு  பதிவேற்றம்  செய்த   ஒரு   காணொளி   எம்ஏசிசி   பாதுகாவலர்   ஒருவர்   அக்கட்டிடத்தைவிட்டு    வெளியேறும்   ஒரு   வாகனத்தைச்  சோதனை   செய்வதைக்   காண்பித்தது. ஏன்  இச்சோதனை   என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ள   இயலவில்லை. டாக்டர்  மகாதிர்  …

எம்ஏசிசி தலைவர் பணிவிலகல்; ஏஜி வழக்கம்போல் அலுவலகம் சென்றார்

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)  தலைவர்    சுல்கிப்ளி   அஹமட்   அரசாங்கத்   தலைமைச்    செயலாளரிடம்   பணிவிலகல்   கடிதத்தை      இன்று   காலை   கொடுத்தார். “அவரது   பணிவிலகல்   கடிதம்  ஒப்புதலுக்காக  மகாதிரிடம்  ஒப்படைக்கப்பட்டது. “சுல்கிப்ளியின்   இடத்துக்கு   யாரை  நியமிப்பது   என்பது  இன்னும்   முடிவாகவில்லை”,  என   ஒரு   வட்டாரம்   மலேசியாகினியிடம்   தெரிவித்தது. இன்னொரு   வட்டாரம்   சுல்கிப்ளி   …

நிதி அமைச்சராக விரும்பினேன் என்பதை மறுத்த ரபிஸி, சின் சியு…

  பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலி தாம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பியாதாக கூறியுள்ள சின் சியு டெய்லிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக கூறினார். பிரதமர் மகாதிர் செய்துள்ள அமைச்சரவை நியமனங்கள், டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நிதி அமைச்சராக…

டையம்: ஜிஎஸ்டி அகற்றல், எரிபொருள் மானியம் மீண்டும் வழங்குதல் பொருளாதாரத்தைப்…

  பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அகற்றல் மற்றும் எரிபொருள் மானியம் மீண்டும் வழங்குதல் மலேசியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்காது என்பதை மகாதிரின் புதிய அரசாங்கம் உறுதி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆலோசனை மன்றத்தின் உறுப்பினருமான டைம் ஸைனுடின் பெர்னாமாவிடம் சனிக்கிழமை…

அட்டர்னி ஜெனரல் பதவி விலக வேண்டும், கோபிந் சிங் கூறுகிறார்

சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்ட் அலி அப்பதவியில் தொடர்வது ஏற்றுக்கொள்ளக்கத்தக்கதாக இல்லாததால் அவர் பதவி விலக வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். நாட்டில் இப்போது ஏஜி இல்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். அது ஏஜி…

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாதவரை புதிய நிதியமைச்சர் நிரபராதிதான் -ஜொகாரி

டிஏபி  தலைமைச்    செயலாளர்  லிம்   குவான்   எங்   நிதி   அமைச்சராக   நியமிக்கப்பட்டிருப்பது     சரியா    என்று   கேள்விகள்   எழுப்பப்படுகின்றன.  அவர்மீது    ஊழல்   வழக்கு    உள்ளதால்   இப்படிப்பட்ட    கேள்விகள்   எழுப்பப்படுகின்றன. இது   குறித்து    முன்னாள்   இரண்டாம்நிலை   நிதி   அமைச்சர்   ஜொகாரி   அப்துல்   கனியிடம்   கேட்டதற்கு,  லிம்   குற்றவாளி    என்று   தீர்ப்பளிக்கப்படாதவரை   நிரபராதிதான்   என்றார்.…

நஜிப்புடன் தொடர்புகொண்ட ஆடம்பர கொண்டோவில் சோதனை நடத்தவில்லை- போலீஸ் மறுப்பு

முன்னாள்   பிரதமர்    நஜிப்    அப்துல்  ரசாக்குடன்    தொடர்புள்ள   ஆடம்பர  அடுக்ககம்  ஒன்றில்      அதிரடிச்   சோதனை   நடத்தப்பட்டதாகக்   கூறப்படுவதை     போலீஸ்   மறுத்தது. போலீஸ்   அந்த  அடுக்ககம்   சென்று       அங்குள்ள  சிசிடிவி   பதிவைச்    சரிபார்த்தது,  அவ்வளவுதான்  என   கோலாலும்பூர்    போலீஸ்    தலைவர்   மஸ்லான்   லாசிம்    தெரிவித்தார். “போலீஸ்  அங்குள்ள  சிசிடிவியைக்  கவனமாக   …

அமைச்சரவை பதவிகள் பற்றிய கூட்டத்திற்கு பிகேஆர் வரவில்லை

  அமைச்சரவை பதவிகள் பற்றிய முடிவுகள் எடுப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு பிகேஆர் தலைவர்கள் வரவில்லை என்று ஹரப்பான் பங்காளித்துவ கட்சிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன. இக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை பட்டியல் பற்றி நான்கு கட்சிகள் நடத்திய கூட்டத்தின் தொடர் கூட்டமாகும். மேலும்…

செள பினாங்கின் புதிய முதலமைச்சர்

டிஏபி  தலைமைச்  செயலாளர்   லிம்   குவான்   எங்,  பாடாங்   கோட்டா  சட்டமன்ற   உறுப்பினர்   செள   கொன்   இயோவை  பினாங்கின்   புதிய   முதலமைச்சராக     அறிவித்தார். நிதி  அமைச்சராக   நியமிக்கப்பட்டிருக்கும்   லிம்,   தம்முடைய  பராமரிப்பு   முதலமைச்சர்   பணி  இன்றுடன்   முடிவுக்கு   வருவதாகவும்   கூறினார். “கனத்த   இதயத்துடன்  பிரிந்து   செல்கிறேன்.  ஆனால்,  பினாங்கு  …

கட்சித் தாவவில்லை: பேராக் பிஎன் பிரதிநிதிகள் விளக்கம்

பேராக்கில்  பக்கத்தான்   ஹரப்பான்   சாதாரணப்  பெரும்பான்மையில்     ஆட்சி  அமைக்க    உதவிய  இரண்டு   சட்டமன்ற   உறுப்பினர்களும்  தாங்கள்   கட்சித்தாவவில்லை    என்றும்  இன்னமும்  பிஎன்   உறுப்பினர்கள்தான்   என்றும்   கூறியுள்ளனர். பேராக்   மாநில  நிலைத்தன்மையின்   பொருட்டு    அஹமட்  பைசல்  அஸுமு   ஆட்சி    அமைக்க    ஆதரவு   வழங்கியதாக   துவாலாங்   செகா   சட்டமன்ற   உறுப்பினர்  நோலி …

பிதற்றுவதை நிறுத்துக, பிகேஆர்-க்கு அம்பிகா வலியுறுத்து

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, துன் டாக்டர் மகாதிர் முகமட் அந்தக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளதன் அடிப்படையில், வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் பிகேஆரை விமர்சித்துள்ளார். டுவிட்டர் செய்தியின் அடிப்படையில், மலேசியாகினியின் கட்டுரையைப் பற்றிக் கருத்து தெரிவித்த முன்னாள் பெர்சே தலைவரான அம்பிகா,…

பிஎன் உதாரணத்தைப் பின்பற்றி, எதிர்க்கட்சிகளுக்கு ஜொகூர் அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகள் இல்லை

எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவர்களை அங்கீகரிக்கவில்லை, அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடுகளை வழங்கவில்லை என ஜொகூர் மாநில அரசை பக்காத்தான் ஹராப்பான் குறைகூறி வந்துள்ளது. இப்போது பிஎன் எதிர்க்கட்சியாகிவிட்டது, ஹராப்பானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மந்திரி பெசார், ஓஸ்மான் சப்பியன் அந்தக் கொள்கையை மாற்ற தயாராக இல்லை என்று தோன்றுகிறது.…