மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
ஐஜிபி, இனிமேலும் சாக்குப்போக்கு வேண்டாம், எனது முன்னாள் கணவரை கைது…
தன்னுடைய மூன்று குழந்தைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை முடிவிற்கு கொண்டுவர கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திரா காந்தி போராடினார். இன்று, பெடரல் நீதிமன்றம் அவருக்கு வெற்றித் தீர்ப்பை வழங்கியது. இப்போது, எனக்கு வேண்டியதெல்லாம் எனது இளைய மகள் பிரசனா டிக்சாவை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும். இப்போது…
மாணவி தற்கொலை முயற்சி: அமைச்சு நடவடிக்கை, ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்
பள்ளி ஆசிரியை ஒருவரின் கைத்தொலைப்பேசியைத் திருடி விட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 13-வயது மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மீது கல்வி அமைச்சு விசரணை நடத்தி வருகிறது எனத் துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறினார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார் என்பதையும் அவர் தெரிவித்தார். “கல்வி அமைச்சும் …
ஒருதலைப்பட்ச மதமாற்றம்: ‘அமைச்சரவை செய்ய அஞ்சியதை நீதிமன்றம் செய்தது’
ஒருதலைப்பட்ச மதமாற்ற வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அருமையான தீர்ப்பு என்று பாராட்டிய ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன், நாடாளுமன்றம் செய்யாத ஒன்றை நீதிமன்றம் செய்துள்ளது என்றார். ஒன்பதாண்டுப் “போராட்ட”த்துக்குப் பின்னர், ஒருதலைப்பட்ச மதமாற்ற சர்ச்சைக்குத் தீர்வுகாண நீதிமன்றம்தான் முன்வந்துள்ளது என குலசேகரன் கூறினார். உச்ச நீதிமன்றம் …
ஒருதலைப்பட்சமான மதமாற்ற வழக்கில் இந்திரா காந்திக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம்…
இந்திரா காந்தி அவரின் பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அவரின் முன்னாள் கணவர் ரித்வான் அப்துல்லாவுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திரா காந்திக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. முஸ்லிம்- அல்லாத பிள்ளைகளை முஸ்லிம்களாக மதமாற்ற பெற்றோர் இருவரின் சம்மதம் தேவை என்று அது கூறியது. …
நஜிப் மேம்பாட்டைக் காட்டி கிளந்தானை வசீகரிக்க முயல்கிறார்
கிளந்தான் மக்களிடம் “Ambo Perdana Menteri untuk semua” (நான் எல்லாருக்குமான பிரதமர்) என்று கூறியதன்வழி அவர்களின் நலன்களுக்கு கூட்டரசு அரசாங்கத்தைத் தாராளமாக நம்பலாம் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு கிளந்தான் சென்ற நஜிப், மற்ற …
இந்தியர்களை அரசாங்கம் புறக்கணிப்பதில்லை, தெங்கு அட்னான் கூறுகிறார்
கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள இந்தியச் சமுகத்தை அரசாங்கம் புறக்கணித்தே இல்லை, ஏனென்றால் அது நகர்புற மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தியர்கள் கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் லாபுவான் ஆகிய இடங்களிலுள்ள தங்களின் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகளையும் அவர்களுக்கான சிறப்பு வீட்டு கடன்களையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்று…
மாணவி தற்கொலை முயற்சி : அனைத்துத் தரப்பினரையும் போலிஸ் விசாரிக்கிறது
ஆசிரியரின் கைத் தொலைபேசியைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், தற்கொலைக்கு முயன்ற 2-ம் படிவ மாணவி, எம். வசந்தபிரியா வழக்குத் தொடர்பில், போலிசார் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர். அவ்வழக்கை விசாரிக்க அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து தரப்பிற்கும் நியாயமான முறையில் நடந்துகொள்ள இருப்பதாகவும், பினாங்கு…
புற்று நோய் வந்ததும் ‘அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது’ என்று பயந்து…
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் இரும்பு மனம் படைத்தவர்தான். ஆனாலும் சிறுநீரகத்தில் புற்றுக்கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளச் சென்றபோது திரும்பி வர முடியாமல் போகுமோ என்று கலங்கிப் போய்விட்டார். “அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இத்துடன் கதை முடிந்தது, வாழ்க்கை இறுதிக்கு வந்து விட்டது …
டென்னிஸ் சங்கத்திலிருந்து அதன் புரவலர் சித்தி ஹஸ்மா நீக்கம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா மலேசிய சக்கர நாற்காலி சங்கப் புரவலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். டிசம்பர் 28 என்று தேதியிடப்பட்ட அச்சங்கத்தின் கடிதம் ஜனவரி 22-இல் சித்தி ஹஸ்மாவின் அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுக்கப்பட்டதாக அவரின் உதவியாளர் ரோஸ்லினா ஜமாலுடின் மலேசியாகினியிடம் …
மகாதிரிடமிருந்து இலஞ்சம் பெற்றதை ஒப்புக்கொள்கிறார் இப்ராகிம் அலி
மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவரிடமிருந்து "மனிதத் தீவனம்" (இலஞ்சம்) பெற்றுக்கொண்டதை மலாய்க்காரர்களின் உரிமைக்குப் போராடும் அமைப்பான பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி நேற்று ஒப்புக்கொண்டார். "மகாதிர் எனக்கு கொடுத்தது கொஞ்சமல்ல. நான் அம்னோவில் சேர்ந்த போது ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் நான் அம்னோ உச்சமன்ற உறுப்பினராக்கப்பட்டேன்.…
செம்பனை எண்ணெய்க்குத் தடை விதித்தால் இயு பொருள்களை மலேசியா வாங்காது
ஐரோப்பிய ஒன்றியம் 2020க்குள் செம்பனை எண்ணெய்க்குத் தடை விதிக்க உத்தேசித்திருப்பதால் அந்த ஒன்றிய நாடுகளின் பொருள்களைக் கொள்முதல் செய்வதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது என அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்து முடிவெடுக்கப்பட்டது என்றாரவர். “நாம் ஒரு நாட்டின் பொருள்களை …
நாட்டைக் காக்க ஜிஎஸ்டி தேவையில்லை: நஜிப்புக்கு அறிவுறுத்து
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)தான் நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது என்று கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடிய பிகேஆர் தலைவர் ஒருவர், பிரச்னையெல்லாம் நிர்வாகத்தில்தான் என்றார். “பிரதமரின் ‘பிரமாதமான’ கூற்றைக் கண்டிக்கிறேன். ஜிஎஸ்டி அறிமுகமாகி மூன்றாண்டுகள் ஆகியும் பொருளாதார வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது, ரிங்கிட் மதிப்பு இறங்குமுகமாகவே …
சைட் சாதிக் வட ஜோகூரில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது
பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் வடக்கு ஜோகூரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது “அவர் நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிடுவார், சட்டமன்றஹ்துக்கு அல்ல”, என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. சைட் சாதிக்கைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார். வடக்கு ஜோகூரில் …
அதிகமான சீனப்பள்ளிகள் கட்டுவதற்கான அவசரம் ஒன்றுமில்லை, கல்வி அமைச்சர் கூறுகிறார்
அதிகமான தேசிய மாதிரி சீனப்பள்ளிகள் (எஸ்ஜேகேசி) கட்டுவதற்கான அவசரத் தேவை இல்லை என்று கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் கூறினார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் புதியப் பள்ளிகள் கட்டுவது உள்ளூர் மக்கள் கூட்டத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒரு புதியப் பள்ளியைக்…
அதிகாரிகளே, சித்தி ஹஸ்மாவுக்குத் தொல்லை கொடுக்காதீர், தெங்கு ரசாஸி கூறுகிறார்
முன்னாள் பிரதமர் மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலிக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று அரசாங்க அதிகாரிகளை குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டார். வேண்டுமென்றால், மகாதிரை விரட்டிப் பிடியுங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் கடுமையாக நடந்துகொள்வதால் நன்மை ஏதும் இல்லை...சித்தி…
மேற்கு பாப்புவா மக்கள் விடுத்துள்ள, சுயநிர்ணய உரிமைக்கான அழைப்பை ஐ.நா.…
நேற்று, 1.8 மில்லியன் மேற்கு பாப்புவா மக்கள் கையொப்பமிட்ட சுயநிர்ணய உரிமைக்கான அழைப்பை, ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மலேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியிடம், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) ஒரு குறிப்பாணையை ஒப்படைத்தது. பிஎஸ்எம் இளையர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அணி (ஜெரிட்), மக்கள்…
தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத போது உரிமைகள் பற்றி பேசுவது…
மலேசியாவில் மனித உரிமைகளை மேன்மைபடுத்துவதற்கான ஈடுபாட்டை அரசாங்கம் கொண்டிருந்ததே இல்லை, ஏனென்றால் நாட்டிலுள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் உரிமைகளைக்கூட அதனால் தற்காக்க முடியவில்லை என்று ஒரு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவிருக்கும்…
சிலாங்கூர் மக்களுக்கு மற்றுமொரு பரிவுமிக்கத் திட்டம்
சிலாங்கூர் மாநில அரசின் பரிவுமிக்க கொள்கையின் ஒரு பகுதியாக இம்மாநிலத்தில் ஏழைகளை அடையாளம் கண்டு உதவும் நோக்கில் பற்பல திட்டங்களை வகுத்து அது செயல் படுத்தி வருகிறது. அதில் இந்தியர்கள் கலந்துகொண்டு பயன் அடைவதை வரவேற்கிறோம் என்கிறார் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் தேசிய உதவித்…
தெங்கு ரசாலி: பல்முனைப் போட்டி என்றால் ஆதாயம் பெறப்போவது பிஎன்தான்
14வது பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது பிஎன்னுக்குதான் சாதகமாக அமையும் என்றார் குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா. பல கட்சிகள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறும் என்றாரவர். “மக்களில் பெரும்பாலோரது ஆதரவு எங்களுக்கு இருப்பதை முந்திய பொதுத் தேர்தல்களில் நிரூபித்திருக்கிறோம். பிஎன் தொடர்ந்து மக்களின் …
பொய்யான செய்திகளைக் கட்டுப்படுத்த புதுச் சட்டங்கள்- சாலே
பெருகிவரும் பொய்யான செய்திகளை ஒடுக்க புதுச் சட்டங்கள் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. உலக அளவில் பெரும் பிரச்னையாக விளங்கும் பொய்யான செய்திகளைச் சமாளிக்க இப்போதுள்ள சட்டங்கள் போதுமானவை அல்ல என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியதாக த ஸ்டார் மேற்கோள் காட்டியுள்ளது.…
அமனா கூற்றுக்கு மறுப்பு, சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் இடஒதுக்கீடு பேச்சுகளை…
சிலாங்கூர் பக்கத்தான் ஹரபானில் 14வது பொதுத் தேர்தலுக்கு இடஒதுக்கீடுகள் செய்வதுமீதான பேச்சுகள் நடைபெற்று வருவதாகக் கூறுகிறார் அதன் செயலாளர் ஸுரைடா கமருடின். “14வது பொதுத் தேர்தலுக்கு மாநில அளவில் இடஒதுக்கீடு செய்வதுமீதான பேச்சுகளை பிகேஆர் தலைமையில் சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் நடத்தி வருகிறது. “இதுவரை சிலாங்கூர் பக்கத்தான் ஹரபான் …
‘நச்சு அரசியல்’ பேரணி தொடர்பில் சித்தி ஹஸ்மாவிடம் போலீஸ் விசாரணை
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற “நச்சு அரசியலு”க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி தொடர்பில் போலீசார் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் துணைவியார் சித்தி ஹஸ்மாவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். சித்தி ஹஸ்மா,91, அவரின் கணவருடனும் மகள் மரினாவுடனும் காலை மணி சுமார் ஒன்பதுக்கு யயாசான் அல்-புஹாரிக்கு வந்தார். இரண்டு போலீஸ் …
ஜிஇ14 புறக்கணிப்பு பிரச்சாரம் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலானது
’14-வது பொதுத் தேர்தலில் ஓட்டு போடாதீர்கள்’ மற்றும் ‘வாக்குகளைச் சேதமாக்குங்கள்’ பிரச்சாரங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாத, எதிர்க்கட்சி வாக்காளர்களின் சமூக தளங்களில் மட்டுமே வலம் வருகிறது. பாரிசான் நேசனல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை உறுதி செய்ய, பிஎன் ஆதரவாளர்கள், 14-வது பொதுத் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டு…












