மேற்காசியப் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் RON95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு குறித்த செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இன்று மலேசியக்கினி மேற்கொண்ட ஆய்வில், சில நிலையங்களில் RON95 பெட்ரோல்…
புத்ரா ஜெயாவைப் பிடிப்போம்; இந்தியர்களின் இரத்தக் கண்ணீரைத் துடைப்போம்
மலேசியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆனால், மலேசியக் குடிமக்களாகிய இந்தியர்கள், குறிப்பாக வறுமைப்பிடியில் சிக்கியிருக்கும் 40 விழுக்காட்டு இந்தியர்கள் (B40) அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். அம்னோவின் தலைமையிலான பாரிசான் நேசனல் அரசாங்கம்…
தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் டுபாய்க்குத் தப்பி ஓடிவிட்டாராம்
ஒரு வழக்கில் பத்தாண்டுச் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவட்ரா டுபாய்க்குத் தப்பி ஓடிவிட்டதாக அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறினர். முன்னாள் பிரதமர் கடந்த வாரமே தாய்லாந்தை விட்டு வெளியேறி சிங்கப்பூர் வழியாக டுபாய்க்குப் பறந்தார் என பியு தாய் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.…
மற்ற மாநிலங்களில் பிஎன் எம்பிகள், சிஎம்முகள் அரசு அமைப்புகளுக்குத் தலைமை…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பிஎன் “இரட்டை நியாயங்களைப் பின்பற்றுவதாக” சாடியுள்ளார். அதன் அமைச்சர்களில் ஒருவர் முதலமைச்சர் அரசு நிறுவனங்களுக்குத் தலைவராக இருக்கக்கூடாது என்று கூறியதை அடுத்து லிம் அவ்வாறு சாடினார். முந்தைய பிஎன் மாநில அரசுதான் குறிப்பிட்ட அரசு நிறுவனங்களுக்கு முதலமைச்சர்தான் தலைவராக இருக்க வேண்டும் …
பாஸுக்கு எதிராக அனைத்துலக அளவில் சதித் திட்டமாம்
பாஸ் கட்சி ஏற்கனவே 1எம்டிபிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதை “வெளியார் தலையீடு” என்று வருணித்துள்ளதை அறிவோம். இப்போது பாஸ் தலைவர்களில் ஒருவர் அந்த இஸ்லாமியக் கட்சியின் பெயரைக் கெடுப்பதற்கு அனைத்துலக அளவில் சதி செய்யப்படுவதாகக் கூறுகிறார். இச்சதித் திட்டமே தம் கட்சி அம்னோவுடன் ஒத்துழைத்து சிலாங்கூரைக் …
குவான் எங் மன்னிப்பு கோர எம்எசிசி 48 மணி நேர…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்துள்ளது. மன்னிப்பு கோரத் தவறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது மேலும் கூறியது. நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு…
காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம்…
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அவதூறாகப் பேசியதற்காக காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் அக்கட்சியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணிக்கவாசகத்திடம் கொடுக்கப்பட்ட இடைநீக்கம் கடிதத்தில் அவரை காப்பார் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நியமிக்கக்கூடாது என்பதற்காக ஓம்ஸ் தியாகராஜனிடமிருந்து ரிம300,000-400,000 ரொக்கமாக பெற்றுக்கொண்டதாக…
தாய்லாந்து முன்னாள் பிரதமரை கைது செய்ய ஆணை
பதவியிலிருந்து அகற்றப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவாட்ரா நாட்டை விட்டு தப்பியோடி விட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. அவருக்கு எதிராக தாய்லாந்து இராணுவ ஆட்சியாளர்கள் தொடர்ந்திருந்த வழக்கில் அவர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருந்த நாளில் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதால் தாய்லாந்து உச்சநீதிமன்றம் அவரைக்…
மகாதிர்: பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அம்னோ/பிஎன்னுக்கு வாக்களிக்காதீர்கள்
அம்னோ- பிஎன் பணம் அல்லது இலவசங்களைக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் பொதுத் தேர்தலின்போது பக்கத்தான் ஹராபானுக்கு வாக்களியுங்கள். இது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று கிளந்தான் பக்கத்தான் ஹராபானைத் தொடக்கி வைத்தபோது வாக்காளர்களுக்கு வழங்கிய ஆலோசனை. “பலர் பயப்படுகிறார்கள். பயப்படுவது சரி. அம்னோ கொடுக்கும் அன்பளிப்புகளை …
நஜிப்பும் ஹாடியும் சிலாங்கூரைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்களாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூரைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் உடன்பாடு ஒன்றைச் செய்துகொள்ளும் ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்களாம். இதனைத் தெரிவித்த சிங்கப்பூர் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், கடந்த சில மாதங்களில் நஜிப்பும் ஹாடியும் அன்றாடம் ஒருவர் மற்றவருடன் …
சக மாணவனுக்கு மரணம் விளைவித்தான், 6-ஆம் ஆண்டு மாணவன் கைது
சரவாக், காபிட்டில் ஏழு வயது மாணவனுக்கு மரணம் விளைவித்ததற்காக ஆறாம் ஆண்டு மாணவன் ஒருவன், நேற்று போலிசாரால் கைது செய்யப்பட்டான். கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள ஒரு விடுதிப்பள்ளியில், சக மாணவனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த முதலாம் ஆண்டு மாணவன், பள்ளி நிர்வாகத்தினரால், சிபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இருப்பினும், சிகிச்சை…
நஜிப்: பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம்
எப்போது பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்விக்கு வழக்கம் போல் அடக்கமாகவே நஜிப் இருந்தார். தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம். தேவைப்பட்டால் இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் அம்னோ பேராளர் மாநாட்டையும் நாங்கள் தள்ளிவைப்போம் என்று நஜிப் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அம்னோ பேராளர் மாநாடு இந்த…
மகாதிர்: 14 ஆவது பொதுத்தேர்தலில் டிரம்ப் பங்கேற்க விரும்பினால், அவர்…
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை அடுத்த மாதம் பிரதமர் நஜிப் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லெர்சன் இம்மாத தொடக்கத்தில் கோலாலம்பூருக்கு வருகையளித்திருந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நஜிப் எதிர்வரும் செப்டெம்பர் 12 இல் அமெரிக்க அதிபரை சந்திக்க விருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை…
ஏஎம்கே கிளந்தானில் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி
கிளந்தான் பிகேஆர் இளைஞர் பிரிவு அங்காத்தான் மூடா கெஅடிலான் (ஏஎம்கே), அதன் தலைவர் ஹாவிட்ஸ் ரிஸால் அம்ரான், பதவி விலகக் கோரிக்கை விடுத்துள்ளது. கிளந்தான் ஏஎம்கே உதவித் தலைவர் முகம்மட் கைருல் அமின் அப்துல் ரஹ்மான், இன்று ஓர் அறிக்கையில், ஹாவிட்ஸ் “கிளந்தான் ஏஎம்கே தலைவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை …
சிலாங்கூரில் பாஸ் 42 இடங்களில் போட்டியிடும்
அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 42-இல் பாஸ் போட்டியிடும் என அற்ஃபிவிக்கப்பட்டுள்ளது. பிகேஆர் தலைவர்கள் பாஸுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள முயன்று வரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. “சிலாங்கூர் பாஸ் அடுத்த பொதுத் தேர்தலில் பல்முனை போட்டிக்குத் தயாராக உள்ளது. பிஎன் அல்லது …
மகாதிர்: நான் சாவதையே பலரும் விரும்புகிறார்கள்
தம்முடைய உடல்நலன் குறித்து யாரும் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தம் எதிரிகள்தான் தாம் சாவதைக் காண பெரிதும் விரும்புகிறார்கள் என்றார். “நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கடுமையான நோயில் அடிபட்டு மீண்டு வந்ததுபோலவா தோற்றமளிக்கிறேன்? “நான் சாவதைப் பலர் விரும்புகிறார்கள். நான் இருப்பது …
ஜாஹிட்: பெரும்பாலான பிஎன் கட்சிகள் வேட்பாளர் பட்டியலைக் கொடுத்து விட்டன
அம்னோ உள்பட, பெரும்பாலான பிஎன் கட்சிகள் 14ஆம் பொதுத் தேர்தலுக்கான அவற்றின் வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பித்து விட்டதாக பிஎன் துணைத் தலைவரும் துணைப்பிரதமருமான அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். வேட்பாளர்களை ஆய்ந்து தேர்ந்தெடுக்க அம்னோவும் பிஎன்னும் ஒரு தனிக் குழுவை அமைத்திருப்பதாக அவரை மேற்கோள்காட்டி த ஸ்டார் கூறியது.…
வேதாவை அடுத்து பழனிவேல் ஆதரவாளர்களுக்கு வலை வீசுகிறார் மகாதிர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபானுக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மஇகா முன்னாள் தலைவர் ஜி.வடிவேலின் ஆதரவாளர்களுக்கு வலைவீசுவதாக செய்தி வந்துள்ளது. இதன் தொடர்பில் பார்டி பிரிபூமி பெர்சத்து அவைத் தலைவர் மகாதிர் பழனிவேலைச் சந்திக்க விரும்பி அவருக்கு …
‘சமுதாயச் சுடர்’ ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் மறைவு ஈடுகட்டமுடியாத…
நியாட் எனப்படும் தேசிய இந்தியப் போராட்ட அமைப்பின் தலைவர் சமுதாயச் சுடர் ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் இன்று இரவு டாமன்சாரா கேபிஜே மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மலேசிய இந்தியர்கள் உற்ற தோழரை இழந்து விட்டனர் என்று சேவியர் ஜெயக்குமார் அவரது இரங்கல் செய்தியில் கூறுகிறார். "அவர் ஓர்…
நாடு ஒரு சமூகப் போராளியை இழந்தது!
டத்தோ ஹஜி தஸ்லிம் என பலரால் அழைக்கப்படும், 68 வயதுடைய ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு மாபெரும் இழப்பாகும். தலையில் ஒரு சொங்கோவையும் கையில் ஒரு தடியையும் வைத்துக்கொண்டு, ஊடுருவும் விழிகளுடன் நடமாடிய இவரின் பிரிவு சமூகப் போரட்ட களத்தில் ஒரு வெற்றிடத்தை…
‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் காலமானார்
நாடறிந்த சமூகச் சேவையாளர், ‘சமுதாயச் சுடர்’ ஹஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் சற்றுமுன், நோயின் காரணமாகக் காலமானார். அன்னாருக்கு வயது 68. நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த சில நாட்களாக, கே.பி.ஜே. டாமான்சரா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் (ஐ.சி.யு.) அவர் சிகிச்சை பெற்று…
மெமாலி சம்பவம் : முதலில் இறந்தது போலிஸ்காரர்கள், மகாதீர் கூறுகிறார்
மெமாலி சம்பவத்தில் முதலில் தாக்கப்பட்டது போலிஸ்காரர்களே என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிராமவாசிகள் போலிஸ்காரர்களை மறைந்திருந்து தாக்கியதாகவும், அத்தாக்குதலில் சார்ஜன் ஒருவரும் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இறந்ததோடு, இன்னொரு கான்ஸ்டபல் படுகாயம் அடைந்ததாக அச்சமயத்தில் இடைக்காலப் பிரதமராக இருந்த முசா ஹீத்தாம், சம்பவம் நடந்து முடிந்த மறுநாள்…
மெமாலி மீது ஆர்சிஐ : வரவேற்கிறார் மூசா ஹித்தாம், ஆனால்…
முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாமுக்கு 18 பேரின் உயிரை உறிஞ்சிய மெமாலி சம்பவத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்கப்படுவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. ஆனால், அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதைத் தவிர்க்க, அந்த ஆர்சிஐ பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமைக்கப்பட வேண்டும் என்றவர் கருதுகிறார்.…
பிகேஆர் எம்பி அரசியல் செயலகத்திலிருந்து விலகினார்
பிகேஆர் கட்சியில் உள்ள சிலருக்கு அது பாஸ் கட்சியுடன் பேச்சு நடத்துவது பிடிக்கவில்லை. அதன் விளைவாக அக்கட்சியில் விரிசல் பெரிதாகிக்கொண்டு வருகிறது. பாஸுடன் பேச்சு நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிகேஆர் எம்பி வில்லியம் லியோங் கட்சியின் அரசியல் செயலகத்திலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக அறிவித்தார். “ என்னால் (பாஸுடன் ஒத்துழைப்பதைத் …


