இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
அசாம் குடியுரிமை பிரச்சனை: தற்கொலை செய்துகொள்ளும் அசாம்வாசிகள்
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதாக கூறி இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் நாற்பது லட்சம் மக்கள் வழி தெரியாது திணறி வருகின்றனர். நாடு கடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதை அறிந்த சிலர் அச்சத்தின் காரணமாக தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து…
சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு – நடுக்கடலில் மாயமான 243…
அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது. அங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிலோனில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த இடத்துக்கு அந்த பெயர் வர காரணம். ஆனால்…
பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் குழாய்களுக்கு தீ- இருவர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுத்தகரிக்கப்படும் பெட்ரோல், டீசல், ஆயில் உள்ளிட்ட எரிபொருட்களை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்ல டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனத்திற்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படுவதாக கூறி எண்ணெய் நிறுவனம், பூமிக்கடியில் குழாய்…
‘கர்நாடக திட்டத்துக்கு தொந்தரவு கூடாது’: அமைச்சர் சிவகுமார்
பெங்களூரு: ''தமிழகம் எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் செயல்படுத்தட்டும்; எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், கர்நாடக திட்டங்களுக்கு தமிழகம் தொந்தரவு கொடுக்கக்கூடாது,'' என, நீர்ப்பாசனத்துறை அமைச்சர், டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து, அவர் அளித்த பேட்டியின் விபரம்: வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க, தமிழகம் அணை கட்டினால்,…
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை
வியன்னா : அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடும் பட்சத்தில் அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்புள்ளது என ஐ.நா.விற்கான அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்பின் தலைவர் லெஸினா ஜெர்போ கூறினார். ஆணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சி.டி.பி.டி. எனப்படும்.அணு ஆயுத…
இன்று டிரம்ப்-மோடி சந்திப்பு: வரி விவகாரத்திற்கு தீர்வு
ஒசாகா: ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கும் நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை இன்று சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. இதில் வரி விவகாரம் குறித்து டிரம்ப் வலியுறுத்துவார் என தெரிகிறது. ஜி - 20 நாடுகளின் கூட்டம், கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின்,…
கோவை.. சர்ச், கோவில்களில் குண்டு வைக்க சதி.. 3 பேர்…
கோவை: கோயம்புத்தூரில் உள்ள சர்ச், கோயில்களில் குண்டு வைக்க திட்டம் போட்ட 3 இளைஞர்களையும், 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை முதன்மை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது . இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சமயத்தில், அந்த தீவிரவாதிகளோடு இணைய தளம் மூலம் தொடர்பில் இருந்தவர்கள்…
கூடங்குளம் சுற்று பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலேயே அணுக்கதிர் வீச்சு உள்ளது..…
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலைய வளாககத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு அணுக்கழிவுகளை சேமிப்பதால், எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மேற்கண்ட பதிலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு…
தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர் இல்லை
புதுடில்லி: தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக வற்றிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்த பதில்: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து 2008 - 17 காலகட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 358…
ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்?- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில்…
லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் இன்னும் 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க…
காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் ராகுல் காந்தி நீடிப்பு!
கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது தலைமைப் பதவியை ஏற்க எவரும் முன் வராததாலும் அக்கட்சியின் உறுப்பினர்களின் தொடர் வலியுறுத்துதலாலும் தனது மனதை மாற்றிக்…
கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில்…
சர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியர்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்க்கரை நோய் என்பது இன்று சாதாரண தலைவலி போல் ஆகிவிட்டது. 40 வயதை கடந்தவர்களுள், யாரை கேட்டாலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் 20 வயதுக்கு மேற்பட்டோரையும் இந்த சர்க்கரை நோய்…
தவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது? – அச்சம்…
கடுமையான குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது சென்னை நகரம். சுமார் 85 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்திற்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது? நெருக்கமான நகரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மிகச் சில நகரங்களில் ஒன்று. தற்போதைய நிலவரப்படி சென்னை நகரில் ஒரு…
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட கர்நாடகா.. இன்று அவசரமாக…
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசுக்க கர்நாடகா கடிதம் எழுதியுள்ள இந்த பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என…
முசாபர்பூர்: குழந்தைகளைக் கொல்வது எது? – மூளை அழற்சியா அல்லது…
இரவு 8 மணி. முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குப்பையின் நாற்றம், வியர்வை, பினாயில் மற்றும் சடலங்களின் வாடைகள் நிரம்பியிருக்கிறது. மருத்துவமனையின் முதலாவது மாடியில் ஐ.சி.யூ. வார்டுக்கு வெளியே செருப்புகள் கழற்றிவிடப் பட்டிருந்த இடத்தின் அருகே நான் நின்று, கண்ணாடிக் கதவு வழியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பகல்…
சென்னை தண்ணீர் பிரச்சனை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தவிக்கும் பெற்றோர்
சென்னையின் மென்பொருள் பூங்கா வளாகங்கள் அமைந்துள்ள சாலையின் முடிவில் தெரிகிறது செம்மஞ்சேரி. கடந்த வாரம் ஐந்து நாட்களாக செம்மஞ்சேரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். செம்மஞ்சேரியில் வசிக்கும் பலரும், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை இந்த…
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி.. வரைபடம்-புள்ளிவிவரத்தோடு மத்திய அரசுக்கு…
பெங்களுரு: மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடந்த 20ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியள்ள பகுதியின் குடிநீருக்காகவும், மின்சார உற்பதிக்காகவும் அணை அவசியம் என கர்நாடகா அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில்…
100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்… மும்பையில்…
கும்பகோணம்: காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கத்தை மோசடி செய்த பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், கனடா தப்பிச்சென்றார். இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய போது அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டார். அவரை கும்பகோணம் அழைத்து…
“மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12,000 விவசாயிகள் தற்கொலை”
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார்.…
மெகுல் சோக்சியை அழைத்து வர ஆம்புலன்ஸ் விமானம் அனுப்ப தயார்-…
13 ஆயிரம் மோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்சியை அழைத்து வருவதற்கு ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்ப தயார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக…
ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு வருகிறது ஆப்பு; அரசு திட்டம்!
ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்து வருமாறு அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. பொது வாழ்க்கையில் இருந்தும், அரசுப்பணிகளில் இருந்தும் ஊழலை ஒழிக்கும் திட்டம், மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற கூட்டு…
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு!
லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த…
























