நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி…

சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான சியரா லியோனில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. தலைநகரான ஃபீரிடவுனுக்கு அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் சிக்கி…

ஐரோப்பியாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் தாக்குதல்: தாக்குதல்தாரி சுட்டுக்கொலை

ரஷ்யாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சூர்குட் நகரத்திலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், யாரும் உயிரிழக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்தில் இருந்தவர்கள் அவசர சேவைக்கு தகவல் அளிக்க, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட…

தயார் நிலையில் ராணுவம்: வடகொரியாவை வீழ்த்துவது குறித்து அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவை தாக்குவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை…

பயங்கரவாதத்துக்கு எதிராக பிரித்தானியா துணை நிற்கும்: தெரேசா மே உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்பெயினுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் கூட்டத்தில் வேன் மூலம் மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, சம்பவத்துக்கு பின்னர்…

ஐரோப்பாவை மீண்டும் அதிர வைத்துள்ள ஐ.ஸ் பயங்கரவாதம்!

ஐரோப்பா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், மற்றுமொரு கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நேற்று பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக மக்கள் செறிவான பகுதியில் வைத்து வேன் ஒன்று மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிகளவானோரை கொலை செய்யும் நோக்கில்…

சற்று முன் கோஸ்டா கடல் கரையில் 5 தீவிரவாதிகள் தற்கொலை…

சற்று முன்னர் கோஸ்டா பிராவோ உல்லாச கடல் கரையில், 5 தற்கொலைதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்தாலும். அதிஷ்டவசமாக அவை எதுவுமே வெடிக்கவில்லை. இவர்கள் தமது காரால், மக்களை இடித்து தள்ளிவிட்டு. இறுதியில் தற்கொலை அங்கியை இழுத்து வெடிக்கச் செய்ய திட்டம் தீட்டி இருந்ததாக…

8 மணிக்கு பிறகு வெள்ளையர்கள் வர வேண்டாம்: பேர்மிங்ஹாம் நகரில்…

பிரிட்டனில் உள்ள பேர்மிங்ஹாம் நகரில், 90 சதவீதமானவர்கள், முஸ்லீம்கள் ஆக உள்ளார்கள். அங்கே இனத்துவேசம் கொடி கட்டிப் பறக்கிறது. அதன் உச்சமாக பல இடங்களில் வெள்ளையர்கள் இங்கே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு வருகிறது. யார் மண்ணில் வந்து யாரை வரவேண்டாம் என்று சொல்கிறாய் என்று ஒரு விவஸ்த்தை…

போதை மருந்து கடத்திய 80 பேரை சுட்டுக்கொன்ற பொலிசார்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் போதை மருந்து கடத்திய 80 பேரை அந்நாட்டு பொலிசார் விசாரணையின்றி சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து குற்றங்களை தடுப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். சர்வதேச அளவில் ஜனாதிபதியின்…

தாக்குதலை தள்ளி வைத்துக் கொள்கிறேன் கிம்: புத்திசாலித்தனமான முடிவு என…

வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் தாக்குதலை தற்போதைக்கு தள்ளி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று கூறியுள்ளார். வடகொரியாவின் செயல்காளால் கடும் அதிருப்தியான அமெரிக்கா, அந்நாட்டின் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானமும் ஐ.நாவில் ஏற்றுக்…

பதின் மூன்று பேரின் உயிரைக் காவு கொண்ட பயங்கரவாத தாக்குதல்!…

ஸ்பெயின் நாட்டில் மக்கள் கூட்டத்தில் வான் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவில் உள்ள ரம்பிலாஸ் சுற்றுலாத்தலத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மீது மோதிய வான் ஓட்டுநர் சம்பவயிடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய…

24 மணி நேரத்தில் 32 பேர் படுகொலை: பிலிப்பைன்சில் பயங்கரம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்தல் கும்பல் என கண்டறியப்பட்ட 32 பேரை அங்குள்ள பொலிசார் 24 மணி நேர இடைவெளியில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக ரோட்ரிகோ டூடெர்டே பொறுப்பேற்ற பின்னர் போதை மருந்துக்கு எதிரான போரில் இது மிகவும் கொடிய நாள்…

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்? அச்சத்தில் குவாம் தீவு மக்கள்

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளால், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது. ஐ.நா-வில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவிற்கு பதிலடியாக குவாம் தீவின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா சில தினங்களுக்கு முன் எச்சரித்தது. இதனால் குவாம் தீவு…

கட்டார் விமானங்களை தாக்கி அழிப்போம்: சவுதி அரேபியா எச்சரிக்கை

கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவுதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவுதி அறிவித்துள்ளது. கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந்நாட்டு விமானங்களை தாக்குதல்…

ஆட்சியை பாதுகாக்க..ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடுமையான தண்டணைகள்

சிரியாவில் தங்கள் ஆட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், பாதுகாப்பதற்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடுமையான முறையில் தண்டனைகளை கொடுத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா. ஈராக்கையும்,…

பாரிஸில் பயங்கரவாத தாக்குதல்? சிறுமி பலி – 13 பேர்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நபர் ஒருவர் காரை ஓட்டிச் சென்று, பீட்சா உணவகத்தின் மீது மோதியதில் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய BMW வாகனத்தை ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய…

வடகொரியா மீது அதிரடி தடை விதித்த சீனா

வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா அதிரடியாக தடை செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய தடையால், ஏற்கனவே அமெரிக்கா முன்மொழிந்து ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்த பொருளாதார தடைகளால் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து…

வடகொரியாவில் உற்பத்தி; உலகம் முழுக்க காட்சிப்படுத்தும் சீனா: அம்பலமான உண்மை

வட கொரியாவில் மிகக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்யும் தொழிலாளிகளைப் பயன்படுத்தி சீன நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் டண்டாங் மாநகரத்தில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களை பயன்படுத்தி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது.…

அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

வடகொரியா மீது போர் தொடுக்க தயாராகி வரும் அமெரிக்காவிற்கு சீனா அதிபர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு மத்தியில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூ ஜெர்ஸி மாகாணத்தில் விடுமுறையை கழித்து வரும் டொனால்டு டிரம்ப்…

எந்த நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம்! தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்

ஒரு புறம் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா அமெரிக்காவை மிரட்டினால், மறுபுறம் பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது. வட கொரியா - அமெரிக்கா இடையே மூண்டுள்ள வார்த்தை போர் எந்த நேரமும் போராக வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடையக் கூடிய…

‘மனிதனுக்கு பன்றியின் உடல் உறுப்புகள் பொருத்த முடியும்’ விஞ்ஞானிகள் அதிரடி…

பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாற்று ஆபரேசன் மூலம் ‘மனிதனுக்கு பன்றியின் உடல் உறுப்புகள் பொருத்த முடியும்’: விஞ்ஞானிகள் சாதனை லண்டன்: உடல் உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காத்து…

10 வயதில் 8 மாத கர்ப்பம்: நாட்டையே அதிர வைத்த…

அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது. Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர். அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி…

15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

ஹொங் கொங் மற்றும் 15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் ஐரோப்பிய ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. நெதர்லாந்து பண்ணைகளில் உண்ணிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும்…

அமெரிக்காவை வடகொரியா கடுமையாக வெறுக்க காரணம் இதுதான்

சர்வதேச அளவில் பல்வேறு அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கடந்த 60 ஆண்டுகளாக எதிரி நாடுகளாக அமெரிக்காவும், வட கொரியாவும் திகழ்ந்து வருகிறது. உலக வல்லரசு நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவை வறுமையில் வாடி வரும் வட கொரியா தன்னுடைய முதல் எதிரி நாடாக கருதி வருகிறது. இந்த வெறுப்புணர்ச்சிக்கு…