ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி?: சுட்டுக்கொலை…

வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு பெயர் வெளியிடப்படாத தென்கொரிய ராணுவ அதிகாரி ஒருவர் இன்று பரபரப்பான தகவலை அளித்துள்ளார். அதில், ‘ஆட்சியை…

இறந்த குழந்தை இறுதிச்சடங்கின் போது உயிர்பிழைத்த அதிசயம்: அளவில்லா மகிழ்ச்சியில்…

சீனாவில் இறுதிச்சடங்கின் போது இறந்த குழந்தை உயிர்பிழைத்துள்ள சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைந்துள்ளனர். சீனாவில் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பெண் ஒருவருக்கு 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால், -12C அளவில் இன்குபேட்டரில் வைத்து 23 நாட்கள் பாதுகாக்கப்பட்டது.…

சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள்: ஓராண்டு சிறை,…

சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கடற்கரை குடியிருப்பு ஒன்றில் மது விருந்து நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து…

14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை:ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. வட சிரி­யா­வி­லுள்ள ஜரா­புலஸ் நகரைச் சேர்ந்த…

கோஹினூர் வைரம் எங்களுக்கு தான் சொந்தம்: உரிமை கொண்டாடும் பாகிஸ்தான்

பிரித்தானிய மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துகொண்டது. அப்போது புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றியது. பின்னர் பிரித்தானிய மகாராணிக்கு அந்த வைரத்தை அன்பளிப்பாக…

கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்துவரும் கலிபோர்னியா கன்னியாஸ்திரிகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் மரிஜுவான வளர்த்து விற்பனை செய்வதில் பிரபலமடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் Kate மற்றும் Darcy ஆகிய இரண்டு கன்னியாஸ்திரிகள் வலி நிவாரணியாக வாடிக்கையாளர்களுக்கு மரிஜுவானா விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது இருப்பிடத்தை சுற்றியுள்ள பகுதியிலேயே மரிஜுவான செடிகளை பயிரிட்டு வளர்த்து விற்பனை…

இந்தோனேஷியாவில் விஷ மது குடித்த 26 பேர் சாவு

இந்தோனேஷியாவில் இயங்கி வந்த சிறிய மதுக்கடைகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் மது தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய ஜாவாவின் யோகியகார்த்தா நகருக்கு அருகே உள்ள ஸ்லெமன் பகுதியில் ஒரு தம்பதியினர், வீட்டில் தயாரித்த மதுவை விற்பனை…

கடலில் படகு கவிழ்ந்ததில் 35 அகதிகள் பலி: துருக்கி அருகே…

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்ததால் 33 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,  துருக்கியில் இருந்து கீரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற போது லெஸ்போஸ் தீவு அருகே படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று துருக்கியின்…

ஐ.எஸ்.அமைப்பில் தொடர்புடைய 7 நபர்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்பெயின்…

ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.அமைப்பில் தொடர்புடைய 7 நபர்கள் மீது அந்த நாட்டு பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.அமைப்பு மற்றும் ஜபத் அல் நுஸ்ரா அமைப்புகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். Valencia and Alicante மாகாணத்தில் இருந்து செயல்பட்டு…

அகதிகளின் பாதுகாப்பிற்கு வந்த பொலிசாரை சரமாரியாக தாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில்…

பிரான்ஸ் நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள அகதிகளை பாதுகாக்க வந்த பொலிசாரை சுமார் 150 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரான்ஸில் உள்ள கெலைஸ் என்ற பகுதியில் 2 அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3,700 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வடகொரியா!

நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை வடகொரியா ஏவி உள்ளது உலகநாடுகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா.வின் தடையையும் மீறி வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. வடகொரியாவின் இச்செயல் ஆத்திரமூட்டும் செயலாகும் என்று அமெரிக்கா…

முடங்கியது ஐ.எஸ் அமைப்பின் டுவிட்டர் கணக்குகள்!

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோரின் கணக்குகளை கண்காணிக்க டுவிட்டர் நிறுவனம் பல குழுக்களை அமைத்திருந்தது. இந்தக் குழுக்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்துவோரை கண்காணித்து வந்தது. இதையடுத்து…

வெளிஉலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் பூர்வக்குடி மக்கள்

இந்தோனேசிய தீவுகளில் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளன. மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சாலே பின் டோலாஹ். புகைப்படத்துறை ஆர்வமுடைய இவர். பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், சூழல் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவின்…

தைவானில் பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி தவிப்பு

தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின தைவான் நாட்டில் ரிக்டர் 6.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கின. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில்…

சிரியாவில் இயல்பு நிலை திரும்ப 10 பில்லியன் டொலர் நன்கொடை:…

உள்நாட்டு யுத்தத்தால் சீர்குழைந்துள்ள சிரியாவில் இயல்பு நிலை திரும்புவதற்காக உலக நாடுகள் சுமார் 10 பில்லியன் டொலர் நன்கொடை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானிய தலைநகரமான லண்டனில் நேற்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமரான கமெரூன் பேசியபோது, ‘ஒரு நாளில்…

கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ். சிறுவன்

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது குழந்தைகள் மூலம் கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களின் இச்செயலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தாலும் தொடர்ந்து இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன்…

வான்வழித் தாக்குதலால் தரைமட்டமான ஐ.எஸ் வானொலி நிலையம்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் இயக்கி வந்த வானொலி நிலையம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் "கலீபாவின் குரல்' (Voice of the Caliphate) என்ற…

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரஷ்ய…

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்தை விட ரஷ்யாவின் ராணுவம் பலம் பொருந்தியதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் ராணுவப்படைகள் தொடர்பாக RAND கார்ப்ரேசன் நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.…

எத்தியோப்பியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்; தலைமுறை காணாத வறட்சி

எத்தியோப்பியாவில் பல தசாப்தங்களில் இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடுகின்றனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐநா தலைமைச் செயலர் அங்கு சென்றுள்ளார். -BBC

மியன்மாரில் சிறுபான்மை மக்களை இலக்கு வைக்கும் இராணுவம்

மியன்மாரில் கடந்த ஐம்பது வருடங்களில் முதல் தடவையாக சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தேர்வான நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானது. ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி, போட்டியிட்டவற்றில் எண்பது வீதமான இடங்களை பெற்றது. கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றார்கள். மொத்த இடங்களில்…

20 ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ள இடங்களை ஈராக் படைகள் ஒவ்வொன்றாக மீட்டு வருகின்றனர். சமீபத்தில் ரமாதி நகர் மீட்கப்பட்டது. தற்போது ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை மீட்பதற்கு ஈராக் படைகள்…

சீகா வைரஸ் தாக்கம் – உலகின் அவசர நிலையாகப் பிரகடனம்

உலக சுகாதார நிறுவனம் இன்று சீகா வைரஸ் தாக்கத்தை முழு உலகிற்குமான சுகாதார அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. WHO என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளவையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று விடுத்துள்ளதுடன் சேர்த்து நான்கு அவசர அழைப்புக்களையே விடுத்துள்ளது. லத்தீன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில்…

ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும்: துருக்கி எச்சரிக்கை!

துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறும் பட்சத்தில், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி எச்சரித்துள்ளது. ரஷ்ய நாட்டின் போர் விமானம் ஒன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது வான்…