பேருந்தில் சென்ற 13 பயணிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் பேருந்துப் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர். தலைநகர் காபூலுக்கு அருகே உள்ள வர்தக் மாகாணத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஆப்கன் பாதுகாப்பு நிலையைக் குறித்து கேள்விக் குறியை எழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வர்தக் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அடாவுல்லா கோக்யானி கூறியதாவது:…

2050-ஆம் ஆண்டில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறை

உலகில் தண்ணீரின் பயன்பாடு தற்போதைய அளவிலேயே தொடருமானால், 2050-ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக தண்ணீரின் பயன்பாடு, மக்கள்தொகைப் பெருக்கம் ஆகியவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது குறித்து தெரிய வந்துள்ளது.…

ஐ.எஸ்-யை எப்படி ஒழிக்கலாம்? விவாதிக்க சந்திக்கும் நேட்டோ-கனடிய பிரதமர்

ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பது குறித்து கனடிய பிரதமருடன் விவாதிக்க கனடாவிற்கு நேட்டோ செயலாளர் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐ.எஸ்-யின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த அமைப்பை ஒழித்துக்கட்டுவதை குறித்து விவாதிக்க நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்ரொல்ரென்பேர்க்(Jens Stoltenberg), கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்(Stephen Harper)…

என் மகள் அடித்துக்கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த பொலிஸ்: தந்தை கதறல்

ஆப்கானிஸ்தானில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை உருக்கத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று, கல் மற்றும் கம்பால் அடித்து தாக்கியுள்ளது. அப்பெண் குரானை எரித்ததாக அவர்…

ஐ.எஸ். தாக்குதல்: சிரியாவில் 115 பேர் பலி

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய தாக்குதல்களில் 70 அரசுப் படையினரும், 45 குர்துகளும் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ரமி அப்தெல் ரகுமான் கூறியதாவது: சிரியாவின் ஹஸாகே நகரில் குர்துகளின் புத்தாண்டான "நெளருஸ்'…

அமெரிக்க இராணுவத்தின் 100 பேரைக் குறிவைத்து பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள…

தம்மால் கொல்லப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டு 100 அமெரிக்கர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை, ஐ.எஸ்.ஐ அமைப்பினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் தமது சகோதர்கள் இவர்களை குறிவைக்க வேண்டும் என அத்தகவல்கள் கூறுகின்றன. இத்தகவல்களின் உண்மைத் தன்மைக் குறித்து தெரியாத போதும், விசாரணையை முடக்கி விட்டிருப்பதாக பெண்டகன் பாதுகாப்பு…

இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவு மறுபரிசீலனை: அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்யப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இஸ்ரேலில் தீவிர தேசியவாதிகளின் ஆதரவைப்…

ஏமன் மசூதிகளில் தற்கொலைப் படை தாக்குதல்: 137 பேர் பலி!

சானா: ஏமன் நாட்டின் தலைநகர் சாமானில் 2 மசூதிகளில் தீவிரவாதிகள் நேற்று பகலில் நடத்திய தாக்குதல்களில் 137 பேர் பலியாகி உள்ளனர். ஏமனில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு தலைநகர் சனாவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த…

மகளுக்காக 43 வருடம் “தந்தை”யாக வாழ்ந்த தாய்….எகிப்தில் ஒரு உருக்கம்!

கெய்ரோ: மகளை காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் ஒருவருக்கு லட்சியத் தாய் விருது கொடுத்து எகிப்து அரசு கவுரவித்துள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்தவர் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு, சிசா கர்ப்பிணியாக இருந்த போது, அவரது…

குரானை எரித்தாயா! இளம்பெண்ணை கல்லால் அடித்து கொடூரமாய் கொன்ற கும்பல்

ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று, கல் மற்றும் கம்பால் அடித்து தாக்கியுள்ளது. இதனைதொடர்ந்து அவரை ஆற்றின் ஓரத்தில் தூக்கி எரிந்து,…

கடத்தப்பட்ட 219 மாணவிகளின் நிலை என்ன?

போகோஹரம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவியர் குறித்த தகவல் தெரியவில்லை என நைஜீரிய நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார். நைஜீரியாவில் வசிக்கும் பிற மதத்தவர்கள், முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் என்றும் மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் போகோஹரம் பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மேலும்,…

பெண்கள் ஆபாச செல்பி எடுத்தால் 5 ஆண்டு சிறை: தாய்லாந்து…

தாய்லாந்தில் பெண்கள் ஆபாச செல்பி எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. செல்போனில் எடுக்கப்படும் ‘செல்பி’ புகைப்படங்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, தாய்லாந்து அரசு ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக…

துனிஷியா நாடாளுமன்றம் மீது தீவிரவாத தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உட்பட…

துனிஷியா நாடாளுமன்றதிற்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகள் 8 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துனிஷியா நாட்டின் தலைநகரான துனிஷில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் இன்று(புதன்கிழமை) உள்ளூர் நேரடிப்படி மாலை 4.30 மணியளவில் ராணுவ உடையில் 3 தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். மேலும் நாடாளுமன்றம் வழியாக சென்ற தீவிரவாதிகள், அங்குள்ள பார்டோ(Bardo)…

சவுதியில் பெண் ஒருவருக்கு 70 சவுக்கடிகள்! காரணம் என்ன?

சவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறு செய்தி பரப்பிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின்…

யார் இந்த ஐ.எஸ்? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் நினைத்துப் பார்க்க முடியாத வன்முறை வெறியாட்டத்தை தினந்தோறும் நடத்தி வருகின்றது ஐ.எஸ் என்னும் தீவிரவாத அமைப்பு. தொடங்கப்பட்டது எப்போது? ஈராக்கில் கடந்த 1999ம் ஆண்டில் ஜோர்டானைச் சேர்ந்த அபு முஸப் அல் ஜர்காவி என்பவரால் Jama'at al-Tawhid wal-Jihad என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2004ம்…

பாகிஸ்தான் தேவாலயத் தாக்குதல்: நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாகிஸ்தானின் கராச்சி நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கண்டித்து,  நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் கலாசாரத் தலைநகரம் என்றறியப்படும் லாகூரில், கிறிஸ்தவர்கள் பெரும்…

கொதிக்கும் எண்ணெய்யில் தியானம் செய்த புத்த துறவி

தாய்லாந்தில் கொதிக்கும் எண்ணெய்யில் தியானம் செய்த புத்த துறவியை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தாய்லாந்தின் லம்பு(Lamphu) மாகாணத்தை சேர்ந்த நாங் புவா(Nong Bua)என்ற புத்த துறவி மிகவும் சக்தி வாய்ந்த துறவியாக அப்பகுதியில் கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன…

பாகிஸ்தான் தேவாலயத் தாக்குதல்: 15 பேர் பலி; இருவர் உயிருடன்…

பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான கிறிஸ்தவ தேவாலயத்தின் முகப்பில் திரண்ட மக்கள்.(உள்படம்) தாக்குதலில் பாதிப்புக்குள்ளான தேவாலயத்தின் முகப்புப் பகுதி. பாகிஸ்தானில் இரு தேவாலயங்களில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு அந்நாட்டின் பிரதமர்…

கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞன்: போட்டோ பிடித்து…

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இளைஞனை காப்பாற்றாமல் மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கவெண்ட்ரி(Coventry) என்ற நகரில் அன்னையர் தின ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வந்துள்ளன. கவெண்ட்ரி நகரில் உள்ள ஒரு பிரபல இரவு விடுதி…

சவாலாகத் திகழும் பாகிஸ்தான்: சி.ஐ.ஏ.

இராக், சிரியா, வட கொரியாவைப் போலவே பாகிஸ்தானும் தங்களுக்கு சவாலாகத் திகழும் நாடாக அமைந்துள்ளதாக அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜான் பிரென்னன் கூறியதாவது: இராக், சிரியா, யேமன், லிபியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், கொள்கை வகுப்போருக்கும்,…

வெள்ளை நிற குழந்தைகளை கொடூரமாய் கொல்லும் மருத்துவர்கள்

தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் 200 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றன. கடந்த 2000ம் ஆண்டு தொடக்கத்தில் குறைந்தபட்சமாக வெள்ளை நிற தோலுடைய 76 பேர், தான்சானியாவில் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.…

மாலைத்தீவின் ஜனாதிபதிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை (வீடியோ இணைப்பு)

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நஷீட்டுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நஷீட்டின் ஆட்சி காலத்தில் 2012-ம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர்…

வீடு வாங்கினால் மனைவி இலவசம்!

வீடு விற்பனை செய்வதற்கான விளம்பரம் ஒன்று இணையதளங்களில் திடீர் பிரபலம் அடைந்துள்ளது. அந்த வீட்டை வாங்கினால், கூடவே வீட்டின் தற்போதைய உரிமையாளர் வினா லியாவை (படம்) திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம். 40 வயதாகும் வினா லியா, ஜாவா தீவிலுள்ள…