ஏமனில் கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்: 53 பேர் பலி

ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமன் நகரில் உள்ள ஏடென் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபர் Abedrabbo Mansour Hadi-வின் ஆதரவாளர்களுக்கும் இடையே யுத்தம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஏடென் நகரில்…

இந்தியர்களை மீட்ட பாக்., கடற்படை: 183 பேர் உயிர் தப்பினர்

இஸ்லாமாபாத்: ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த, 11 இந்தியர்கள், 35 வெளிநாட்டினர் உட்பட, 183 பேரை பாக்., கடற்படை கப்பல், பத்திரமாக மீட்டு வந்துள்ளது. போர் மேகம் சூழ்ந்துள்ள, ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் பணியில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் கடற்படையை…

பயங்கரவாத இயக்கங்களில் 100 நாடுகளிலிருந்து 25,000 பேர்

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து சண்டையிட்டு வருவதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களோடு சேர்ந்து சண்டையிட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் செல்கின்றனர்.…

எகிப்து ராணுவ தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சாவு

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வடக்கு சினாய் பகுதியில் தரைவழியாகவும், வான்வழியாகவும் பயங்கரவாதிகள் மீது ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் 20 தலைமையகங்களும்,…

ரத்தம் சிந்தும் கிறிஸ்துவர்கள்: கொந்தளிக்கும் போப்

கென்யா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். புனித வெள்ளியான நேற்று ரோம் நகரில் உள்ள கொல்லோசியத்தில்(Colosseum) நடந்த சிறப்பு வழிபாட்டில் போப் பிரான்சிஸ் கலந்துக்கொண்டார். சிரியா, ஈராக் மற்றும் நைஜீரிய நாட்டு அகதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.…

ஐ.எஸ்.ஸில் சேர முயன்றவர்களில் பிரிட்டன் அரசியல்வாதி மகன்

துருக்கி வழியாக சிரியாவுக்குள் நுழைய முயன்று, புதன்கிழமை பிடிபட்ட 9 பிரிட்டிஷாரில் ஒருவர் பிரிட்டன் உள்ளாட்சி மன்ற உறுப்பினரின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவுக்குச் செல்ல முயன்ற 3 ஆண்கள், 2 பெண்கள், ஒன்று முதல் 11 வயது வரையிலான நான்கு சிறுவர்கள் துருக்கியில் கடந்த புதன்கிழமை…

பயங்கரவாதத்தைக் கண்டு அஞ்சமாட்டோம்: கென்யா அரசு உறுதி

கென்யாவில் 147 மாணவர்கள் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டு அஞ்சப் போவதில்லை என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. கென்யாவின் காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர்.…

மனித வெடிகுண்டுகளாகும் அப்பாவி சிறுவர்கள்.. கொத்து கொத்தாய் கொல்லப்படும் உயிர்கள்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்த தீவிரவாத அமைப்பு குறித்து ஐ.நாவின்…

கென்யா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 147 மாணவர்கள் பலி

கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலையடுத்து, கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே ஓடிவரும் மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட ராணுவத்தினர். கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர்…

அகதிகள் முகாம் மீது தாக்குதல்: பரிதாபமாக பலியான 40 பேர்

ஏமனில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 40 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மேற்கு ஏமனில் தாக்குதலுக்கு அஞ்சி இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் இருக்கும் பகுதிகளில்…

ஒரு வாரத்தில் மடிந்த 62 குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்

ஏமனில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கடந்த வாரம் மட்டும் 62 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெப்(UNICEF) அறிவித்துள்ளது. ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்தது. அந்நாட்டு அதிபர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறும் சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள்…

மியான்மர் அரசு – கிளர்ச்சியாளர்கள் இடையே வரைவு ஒப்பந்தம்

மியான்மர் நாட்டில் அரசுக்கும், 16 கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வரைவு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசுக்கு எதிராக ஆயுதக் குழுவினர் நடத்தி வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மியான்மர் அதிபர்…

யேமனில் 6-வது நாளாக சவூதி அரேபியா தாக்குதல்

சனா விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டடம். யேமனில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இடையிலும், ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவிப் பொருள்கள் அடங்கிய கப்பலை அனுப்பியதாக ஈரான்…

அமெரிக்க வான்வழித் தாக்குதலையும் மீறி ஐ.எஸ். அமைப்பு வளர்ச்சி

அமெரிக்கா நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல்களையும் மீறி, ஐஎஸ் அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வருகிறது என்று சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்தார். இது தொடர்பாக சிபிஎஸ் நியூஸ் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது…

வங்கதேசம்: மேலும் ஒரு வலைதள பதிவாளர் வெட்டிக் கொலை

வங்கதேசத்தில், வலைதளத்தில் கட்டுரைகளைப் பதிவு செய்து வந்த வாஷிகுர் ரஹ்மான் மிஷுவை 3 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொன்றது. தலைநகர் டாக்காவிலுள்ள தேஜ்காவ்ன் தொழிற்சாலைப் பகுதியில், கசாப்புக் கத்திகளைக் கொண்டு பட்டப்பகலில் அந்த மூவரும் ரஹ்மான் மிஷுவை வெட்டிக் கொன்றனர். மதக் கோட்பாடுகள் குறித்த மிஷு…

சீனா தலைமையில் உருவாக்கப்படும் புதிய வங்கியில் சுவிட்சர்லாந்தும் இணைந்தது

சீனா தலைமையில் உருவாக்கப்படும் புதிய ஆசிய வங்கியின் உறுப்பினர் நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கிக்கு போட்டியாக சீனா தலைமையில் Asian Infrastructure Investment Bank (AIIB) என்ற வங்கியை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த வங்கியை உருவாக்கும் உறுப்பினர் நாடுகள் பட்டியலில்…

பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் 80,000 பேர் சாவு

பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போரில், 10 ஆண்டுகளில் 48,000 பொதுமக்கள் உள்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக புதிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற அணு ஆயுத போருக்கு எதிரான…

விடிய விடிய குண்டுமழை: வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

ஏமனில் விடிய விடிய குண்டுமழை பொழிந்ததால், பொதுமக்கள் பயத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஏமன் அரசை எதிர்த்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருவதால் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் 8க்கும் மேற்பட்ட…

அமெரிக்காவுக்கு பச்சை கொடி காட்டிய சிரியா

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் அறிவித்துள்ளார். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதனால் சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.…

சுற்றுலா பயணிகளை சிறைப்பிடித்த தீவிரவாதிகள்: 17 பேர் பலி

சோமாலியாவில் உணவகத்தை சிறைப்பிடித்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியாகினர். சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷூவில்(Mogadishu Hotel) உள்ள உணவகத்தை பயங்கர ஆயுதங்கள் ஏந்திய அல்-ஷபாப் தீவிரவாதிகள் நேற்று சிறைப்பிடித்தனர். அந்த உணவகத்தில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். உணவகத்தை தங்கள் வசம் கொண்டு வந்த…

யேமனில் இரண்டாவது நாளாக சவூதி அரேபியா குண்டு வீச்சு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 39 பேர் உயிரிழந்ததாக யேமனில் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி…

போகோ ஹராம் தீவிரவாதிகளின் தலைமையகத்தை அழித்த ராணுவம்

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தலைமையகத்தை ராணுவம் அழித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள க்வோஸா நகரை கடந்த ஆண்டு கைப்பற்றிய போகோ ஹராம் தீவிரவாதிகள், சிபோக் நகரில் உள்ள ஒரு பெண்கள் உறைவிடப் பள்ளியில் தங்கியிருந்த சுமார் 200 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்நிலையில் அந்நாட்டு…

ஜெர்மனி விமான விபத்துக்கு காரணம் துணை விமானி?

பிரான்ஸ் மலைப் பகுதியில் நொறுங்கி விழுந்த விமானத்தின் துணை விமானிதான் அந்த விபத்துக்குக் காரணம் என்று அது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி கூறினார். "ஜெர்மன்விங்ஸ்' நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம், ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து, ஜெர்மனியின் டுஸல்டாஃர்ப் நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.…