பட்டுப் பாதையை தொட்டுப்பார்… இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

பீஜிங்: தங்களது கடல்சார் பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா தடை ஏற்படுத்த முயன்றால் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதிக்கம்: இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் பட்டுப்பாதை என்ற பெயரில், சீனா மெகா திட்டம் ஒன்றை…

யேமனில் வான்வழித் தாக்குதல் வெற்றிகரம்: சவூதி

சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் யேமன் மீது நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் தெரிவித்தார். யேமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி தீவிரவாதிகள் அரசுப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் சனா அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதையடுத்து,…

தீவிரமடையும் உள்நாட்டு போர்: மரண பயத்தால் விலகும் ஐ.நா தூதர்

ஏமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டின் ஐ.நா சபை விசேஷ தூதரான ஜமால் பெனோமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொரோக்கா நாட்டை சேர்ந்த Jamal Benomar என்பவரை ஐ.நா சபை ஏமன் நாட்டின் விசேஷ தூதராக கடந்த 2012 ம் ஆண்டு அனுப்பி வைத்தது…

அல்கொய்தா தலைவரை பலிவாங்கிய ஆளில்லா விமானம்

அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ருபைஷ் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமனில் அல்கொய்தாவின் பலம் அதிகரித்து வருவதால், அவர்களை அழிக்க அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹ்ட்ரமாவ்த்(Hatmath) மாகாணத்தில் ஆரேபிய…

2000 பெண்களை பாலியல் அடிமைகளாக்கிய அவலம்: தீவிரவாதிகளின் அட்டூழியம் அம்பலம்…

நைஜீரியாவில் 2000க்கும் மேற்பட்ட பெண்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக்கியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி நைஜீரியாவின் சிபோக்(chebuk) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த போகோ ஹராம் தீவிரவாதிகள், தேர்வு எழுதிக் கொண்டிருந்த 276 மாணவிகளை…

உக்ரைன் போர் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது

கிழக்கு உக்ரைனில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படாததைத் தொடர்ந்து, புதிய அமைதிப் பேச்சுவார்த்தை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் திங்கள்கிழமை தொடங்கியது. உக்ரைன், ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். கிழக்கு உக்ரைனில்…

இராக்கில் ஐ.எஸ்.ஸூக்கு பின்னடைவு

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பினருக்கு இராக்கில் பின்னடைவு ஏற்பட்டு வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் வாரன் கூறியதாவது: இராக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசமிருந்த பகுதிகளின் எல்லைகள், தற்போது தெற்கு மற்றும் மேற்கு நோக்கி சுருங்கிவிட்டது.…

போகோ ஹாரம் தீவிரவாதிகளால் 8 லட்சம் குழந்தைகள் அகதிகளாக மாறிய…

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்து வருகின்றனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அடிமைகளாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு 250 பள்ளி மாணவிகளை கடத்தினர். நேற்றுடன் ஓராண்டு முடிந்ததும் அவர்களை இன்னும்…

18 ஆப்கன் வீரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பதாக்ஷனில், ராணுவ நிலைகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நிகழ்த்தி 18 வீரர்களைப் படுகொலை செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். அந்த நாட்டில், ஆண்டுதோறும் கோடைக் காலத்தின்போது அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடக்கம் இது எனக் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட 18 வீரர்களில், 8…

எகிப்தில் பயங்கரவாத தாக்குதல்: 14 பேர் சாவு

எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில், பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அன்ஸார் பெய்ட்…

“அமெரிக்கா, கியூபா உறவுகளில் புதிய சகாப்தம்’

அமெரிக்க நாடுகள் மாநாட்டின்போது நேரடிப் பேச்சு நடத்தும் முன்னர் கைகுலுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ. அமெரிக்கா, கியூபா நாடுகளிடையேயான உறவுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். வட, தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் 2…

பரிசாக கிடைத்த 9 வயது சிறுமி: சித்ரவதை செய்து கர்ப்பமாக்கிய…

ஈராக் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்தி 10 ஐ.எஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்து கர்ப்பமாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டில் வசிக்கும் யாஸிதி பிரிவை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் மற்றும் குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் எட்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றனர்.…

சிரியாவில் ராணுவம்- பயங்கரவாதிகள் மோதல்: 35 பேர் சாவு

சிரியாவின் அலெப்போ நகரில் கிறிஸ்தவர்களும் ஆர்மீனியர்களும் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை நிகழ்த்திய  தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள். சிரியாவில் ராணுவ விமான தளத்தைக் கைப்பற்ற முயன்ற இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ராணுவ வீரர்கள் உள்பட…

சோவியத் சின்னங்களுக்குத் தடை: உக்ரைனுக்கு ரஷியா கண்டனம்

சோவியத் காலச் சின்னங்களுக்குத் தடை விதித்ததன் மூலம் உக்ரைன் சர்வாதிகாரப் போக்கைக் கையாள்வதாக ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வாதிகாரப் போக்குடன் ரஷிய சின்னங்களுக்குத் தடை விதித்து, மக்களின் எழுத்து சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் உக்ரைன் அரசு…

வரலாற்றில் முக்கியமான சந்திப்பு: 50 ஆண்டு கால பகை முடிவுக்கு…

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசியதன் மூலம் 50 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவை நீண்ட காலமாகவே எதிரி நாடாக கருதி வந்தது  லத்தீன் அமெரிக்க நாடான கியூபா. இந்நிலையில் பனாமாவில் நடந்து வரும் லத்தீன்  அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில்…

5 வருடங்களில் 209 நபர்களை சுட்ட பொலிசார்: அம்பலமான அதிர்ச்சி…

கடந்த 5 வருடங்களில் தெற்கு கரோலினாவை சேர்ந்த பொலிசார் சுமார் 209 நபர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை(South Carolina) சேர்ந்த பொலிசார் ஒருவர் கருப்பின நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றதை தொடர்ந்து அமெரிக்க பொலிசார் மீது தொடர்…

ஐ.எஸ் அமைப்பிற்கு முடிவு நெருங்குகிறதா? யுத்தத்தில் களமிறங்கிய சுவீடன்

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தற்போது சுவீடன் நாடும் முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதல் கமாண்டராக இருந்து தற்போது ஐ.எஸ் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வழி நடத்தி செல்கிறார். அமெரிக்க ராணுவத்தை தலைமையாக கொண்டு சில ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய…

பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்படுகிறது: ஒபாமா தகவல்

வாஷிங்டன்: பயங்கரவாத நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா விரைவில் நீக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பனாமாவில் ஆண்டு தோறும் நடைபெறும் பிராந்திய மாநாட்டில் கியூபா கலந்து கொள்ளும். ஆனால் கியூபா அதிபர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 1994ஆம் ஆண்டு முதல் இம்மாநாட்டை…

மரணத்தை விட மோசமான தலைமாற்று அறுவை சிகிச்சையை பெறும் முதல்…

ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதை கண்டித்து மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷ்யா தலைநகர் மோஸ்கோவில்(Moscow) வசிக்கும் ஸ்பிரிடோனோவ்(Spiridonov Age-30) என்ற நபர் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன்(Werdnig-Hoffman) எனும் நோயால் பாதிக்கப்பட்டார்.…

எகிப்து ராணுவம் தாக்குதல்: 15 பயங்கரவாதிகள் சாவு

எகிப்து நாட்டின் சினாய்ப் பகுதியில் ராணுவத்தினர் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: சினாய் மாகாணத்தின் ஷேக் ஜோவேத், ரஃபா ஆகிய நகரங்களில் ராணுவத்தினர் தரை வழியாகவும், வான்வழியாகவும் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.…

சீனாவில் மயக்க மருந்து கொடுக்காமல் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் அகற்றப்படும்…

பீஜிங், சீன நாட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் உடலுறுப்புகள் மயக்க மருந்து செலுத்தாமலேயே துடிக்க, துடிக்க அறுவடை செய்யப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. ஆண்டுதோறும் இவ்வகையில் சுமார் 11 ஆயிரம் கைதிகளின் உடல்களில் இருந்து ஈரல், சிறுநீரகம், கண்…

ஒரே நிமிடத்தில் “சார்ஜ்’ ஆகும் பேட்டரி!

செல்லிடப்பேசிகளில் (செல்போன்கள்) ஒரே நிமிடத்தில் முழுமையாக மின்னூட்டம் செய்துகொள்ளும் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். அந்த நாட்டின் ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அலுமினியம் பேட்டரியை வடிவமைத்துள்ளனர். தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகளைப் போலன்றி, இவை பாதுகாப்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோங்ஜீ…

யேமன் மீது சவூதி அரேபியா கடல்வழித் தாக்குதல்: சண்டையில் 18…

சவுதி தலைமையிலான கூட்டுப் படைப் போர்க் கப்பல்கள், யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிகழ்த்தின. ஏடன் நகரிலுள்ள முவல்லா என்ற துறைமுகத்தைக் கைப்பற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சியை, இந்தத் தாக்குதல் உதவியுடன் அதிபர் அபெத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு ஆதரவுப் படையினர் முறியடித்தனர். இந்தச்…