1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 1000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ம்…

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் அனைத்து வாகன நடமாட்டங்களுக்கும் தடை

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் அனைத்து வாகன நடமாட்டங்களுக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். போக்கோ ஹராம் தீவிரவாதிகள்   போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் நடத்தப்படக் கூடியத் தாக்குதல்களை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாகனத் தடை இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருக்கும்…

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: பிரதமர்

பிரெஞ்சு காவல்துறையினர்   பிரான்ஸில் கடந்த மூன்று நாட்களில் நடந்த மூன்று வெவ்வேறு வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதாக பிரஞ்சு அரசு அறிவித்திருக்கிறது. பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் அச்சம் வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸின் தெருக்களில்…

தாலிபான்களை ஒடுக்க பாக் – ஆப்கன் ஒப்பந்தம்

ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதி நெடுக எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்ய பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன. பெஷாவர் தாக்குதல் தாலிபான்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது   இஸ்லாமாபாத்தில் இது தொடர்பாக ஆப்கானிய இராணுவத் தளபதி முகமது கரீமியும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஷீல்…

பர்மிய எல்லை நகரில் புலிகளின் உடற்பாக விற்பனை அதிகரித்துவருவதாக புதிய…

புலிகள், சிறுத்தைகள் போன்றவற்றின் உடற்பாகங்கள் பர்மா வழியாக சீனாவில் விற்கப்படுகின்ற வர்த்தகம் அண்மைய ஆண்டுகளில் மிகவும் அதிகமாகியுள்ளதாக இருபது ஆண்டுகால கணக்கெடுப்பு தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. அழிவின் விளிம்பில் புலிகள் உள்ளன.   சீனாவுடனான எல்லையை ஒட்டியிருக்கும் பர்மாவின் மொங் லா என்ற…

“பாலியல் அடிமைகளாக யாசிடிக்கள்”- அதிர்ச்சியளிக்கும் புதுத் தகவல்கள்

இராக்கில் யாசிடி மதப்பிரிவுப் பெண்களை கைப்பற்றிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்றது குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பித்து வந்த யாசிடிப் பெண் ஒருவர்   அவர்கள் பிடியிலிருந்து தப்பித்த யாசிடிக்கள் அந்தத் தீவிரவாதிகளின் பிடியில் தாங்கள் அனுபவித்த கொடூரங்கள் குறித்து பிபிசியிடம்…

சிஞ்ஞார் மலையை மீட்ட குர்து போராளிகள்

இராக்கின் வடபகுதியில், சிஞ்ஞார் மலையில் ஒரு மாதகாலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த முற்றுகையை தகர்த்ததற்காக தனது போராளிகளுக்கு வாழ்த்துக் கூற இராக்கிய குர்து இனத் தலைவர் மசூத் பர்ஷானி அங்கு சென்றிருக்கிறார். குர்து பெஷ்மேர்கா போராளிகள் அந்த மலையில் தஞ்சம் அடைந்திருந்த ஆயிரக்கணக்கான யஸ்டி சிறுபான்மையினரை மீட்பதற்கான அந்த…

பயங்கரவாத ஊக்குவிப்பு நாடாக வடகொரியாவை அறிவிப்பது பற்றி அமெரிக்கா பரிசீலனை

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்ப்பது பற்றி தனது நிர்வாகம் மறுபரிசீலனை செய்துவருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா   அமெரிக்காவின் சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் வடகொரிய அரசு உள்ளது என…

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பல இடங்களில் மோதல்

பாகிஸ்தானின் பல இடங்களில் தமது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், டசின் கணக்கான தீவிரவாதிகளை கொன்றுள்ளதாகவும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பல இடங்களில் மோதல்   கைபர் பகுதியில் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக முன்னணி பத்திரிகையான டாண்…

ஜேர்மனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம்

ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ஜேர்மனியின் ஜூதர்களுக்கான மத்திய கவுன்ஸிலின் தலைவர் பேசியுள்ளார். ஜேர்மனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம்   முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தையே இழிவுபடுத்த பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் முக்கிய தலைவர்கள் பலி

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் முகாம்களின் மீது கடந்த சில…

‘செக்ஸ்டார்ஷன்’ மோசடியில் ஈடுபடும் பிலிப்பைன்ஸ் கும்பல்கள்

உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆசை அழைப்புகள் பல வழிகளில் இணையம் மூலம் உலவுகின்றன   ஆங்கிலத்தில் "செக்ஸ்டார்ஷன்" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோசடி அடிப்படையில் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பது. இதன் முதற்கட்டம் என்பது சமூக…

ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 230 பிணங்கள்! ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் வெறிச்செயல்

ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 230 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை, அங்குள்ள கண்காணிப்புக்குழு கண்டறிந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ஷியா பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் சிரியாவில் போர் சூழல் குறித்து கண்காணித்து…

நைஜீரியாவில் 33 பேரை போக்கோ ஹராம் கொன்றுள்ளது

வட-கிழக்கு நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய போராளிகள் குறைந்தது 33 பொதுமக்களை கொன்றுள்ளதாகவும் பலரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சக கிராமவாசிகள் கூறுகின்றனர். போர்னோ மாநிலத்தில் உள்ள கும்சூரி கிராமத்திலிருந்து இளைஞர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் போக்கோ ஹராம் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த ஞாயிறன்றே இந்த…

தலாய் லாமா பதவி முடிவுக்கு வரலாம்

தலாய் லாமா எனும் மதத் தலைவர் பதவியை வகிக்கும் கடைசி நபர் தானாவே இருக்கக் கூடும் என்று தற்போதையத் தலைவர் கூறுகிறார். அடுத்த தலாய் லாமா குறித்து கேள்வகள் எழுந்துள்ளன   திபேத்திய ஆன்மீகத் தலைவரான அவர் இப்போது நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வருகிறார். பல நூற்றாண்டுகளாக…

மீண்டும் மலருகிறது அமெரிக்க-க்யூப உறவு

அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. பராக் ஒபாமா மற்றும் ரவுல் காஸ்ட்ரோ   கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில்…

அழிவில் விளிம்பில் அரிய காண்டாமிருகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சன்டியாகோ மிருகக்காட்சிசாலையில் இருந்த ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் இறந்திருப்பது, அந்த இனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அபூர்வ வகை காண்டாமிருகத்தின் குட்டி ஒன்று   இப்போது உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. ஆங்கலீஃபூ எனும் பெயருடன் இருந்த அந்தக்…

பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது. தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவர்   தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக…

பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. கெடு விதித்தால் ஏற்கமாட்டோம்: இஸ்ரேல்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு கெடு விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டால், அதை ஏற்கமாட்டோம் என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து ராணுவ வானொலியில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச்…

சிட்னி நிலவரம்: தீவிரவாதி உட்பட மூவர் பலி! மூவர் படுகாயம்!…

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹொட்டலொன்றில், தடுத்து வைக்கப்பட்டிருந்த  பணயக் கைதிகளை மீட்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீவிரவாதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் ஆபத்ததான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல்…

அவுஸ்திரேலியாவில் பதற்றம்! பயங்கரவாதிகளால் 20 பொதுமக்கள் சிறைபிடிப்பு!

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20…

சுற்றுச்சூழல் ஒப்பந்தம் – நம்பிக்கையும், விமர்சனமும்

பெருவின் தலைநகர் லிமாவில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு காலநிலை மாற்றம் குறித்து எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக வளரும் நாடுகள் வெளியிடும் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது   காலநிலை மாற்றம் குறித்து உலக அளவிலான ஒரு ஒப்பந்தத்தை அடுத்த…

கண்ணிவெடிகளை அகற்றிய 12 பேர் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள வாஷிர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இது தொடர்பாக மாவட்ட காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் பரீத் அகமது உபைத் கூறியது: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் நெடுஞ்சாலைகளில்…