பெண் போராளிகளை கண்டு நடுநடுங்கி ஓடும் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஈராக்-சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஷ் பெண் போராளிகளை கண்டு அஞ்சி ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கொபேனி (Kobani) நகரை தங்கள் வசமாக்க கடும்…

தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசிய ஐ.எஸ்.ஐ.எஸ்

ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்-சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ரக்கா (Raqqa) நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தங்களை எதிர்பவர்களையும், இஸ்லாமிய…

படுகொலை செய்வது எப்படி? சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி

எதிரிகளை எவ்வாறு தலை துண்டித்து படுகொலை செய்ய வேண்டுமென, சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளித்து வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கியதுடன், புதிய சட்ட திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம்,…

மருத்துவ உலகின் சாதனை! இறந்த இதயம் மீண்டும் உயிர் பெற்றது

இறந்து போன இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மருத்துவர்களே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இறந்த ஒருவரின் இதயத்தையும் உயிர்ப்பித்து மாற்று…

ஜப்பான் நாடே முழுமையாக அழிந்து விடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பயங்கர எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பான் முழுவதுமே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1,20,000 ஆண்டுகளாக எவ்வளவு கால இடைவெளியில் எந்த அளவில் எரிமலை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை யொஷியுகி டட்சுமி(Prof. Yoshiyuki Tatsumi) தலைமையிலான புவி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில்,…

ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகளில் அமெரிக்கா தாக்குதல்

ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கை ஒட்டிய சிரியாவின் எல்லைப்புற மாகாணமான தீர் எல்-ஸரில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்கள் குறித்து அந்த அமைப்பு கூறுகையில், தீர் எல்-ஸரிலுள்ள ஜாஃப்ரா எண்ணெய்க்…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க உதவுங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு ஆசிய நாடுகள் உதவ வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காகவும், எபோலா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகவும் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு…

5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாகிறது! யூனிசெப் அதிர்ச்சி தகவல்

சர்வதேச அளவில் வன்முறையால் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாவதாக யூனிசெப் அறிவித்துள்ளது. ஐ.நா குழந்தைகள் நல நிறுவனமான யூனிசெப்-பின் அமெரிக்க கிளை சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் வன்முறையால் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக நகர்புறமயமாகுதல், வேலையின்மை…

கடந்த ஆண்டு சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த ஆண்டு சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் மிக அதிக அளவு மரண தண்டனை நிறைவேற்றப்படும் சீனாவில், அது குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்படுகின்றன. எனினும், "துய் ஹுவா அறக்கட்டளை' என்ற அந்த அமைப்பு இது…

தீபாவளிக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசுக்கு இந்துக்கள் கோரிக்கை

தீபாவளி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா, வங்கதேசம், மலேசியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் பாகிஸ்தானில்…

தேர்வு எழுதினால் மரண தண்டனை தான்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஈராக்கில் மாணவர்களை தேர்வு எழுதச் செல்லவிடாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ளனர். ஈராக்கின் மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள், அங்குள்ள மக்களை இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். மீறுபவர்களுக்கு கொடூரமான…

ஸ்பெயினில் தனிநாடு கேட்டு 1 லட்சம் பேர் பேரணி

மாட்ரிட், அக்.20– ஸ்பெயின் நாட்டில் ‘கடாலான்’ பகுதியை ஒருங்கிணைந்து தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி அப்பகுதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன. அதனால் ‘கடாலான்’ என்ற புதியநாடு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.…

உயிர் கொல்லி எபோலாவை கண்டு அஞ்ச வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வரும்  நிலையில்  அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் மூன்று எபோலா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் நோயை ஒபாமா நிர்வாகம், கையாண்டு வரும் விதம்,…

உக்ரைனில் ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றிய மாகாணங்களுக்கு தனி அந்தஸ்து: சிறப்பு…

உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியா, ரஷியாவுடன் இணைந்ததை தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுயாட்சி கோரி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு, டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இரு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அவற்றை உக்ரைன் படையினரால்…

மகளின் திருமணத்துக்கு தங்க கழிவறை

சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும். தன்னுடைய மகள் அணிந்திருந்த…

யுத்தக் குற்றங்களைப் புரிந்த நாடுகளைக் காப்பாற்ற ஐ.நாவில் வீட்டோ அதிகாரம்…

யுத்தக்குற்றம் உள்ளிட்ட பாரிய மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்த நாடுகளை காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இந்தநிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த, பாதுகாப்பு சபையின் நிரந்தரமல்லாத அங்கத்துவத்தைப் பெற்றுள்ள நியுலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தேர்வு எழுதினால் தலை உருளும்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மிரட்டல்

ஈராக்கை சேர்ந்த மாணவர்களை தேர்வு எழுதச் செல்ல அனுமதிக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது மொசூல் (Mosul) நகரை சேர்ந்த மாணவர்களை தேர்வு எழுத வேண்டாம் என ஆணையிட்டுள்ளனர். பள்ளி மாணவர்களும் இஸ்லாமியக் கொள்கைகளை…

குண்டுமழை பொழிந்த அமெரிக்கா: நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். சிரியா-ஈரக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லை பகுதியில் உள்ள கோபன் (Kobane) நகரத்தை தங்கள் வசமாக்க தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.…

சௌதி அரேபிய மதகுருவுக்கு மரணதண்டனை

மதகுருவுக்கு மரண தண்டனை   சௌதி அரேபியாவில் உள்ள ஷியா சிறுபான்மையருக்கு மேலதிக உரிமைகள் தரப்படவேண்டும் என்று கோரிய பிரபல மத குருவான, ஷேக் நிம்ர் அல் நிம்ர், அவர்களுக்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இவர் சௌதி அரேபியாவின் கிழக்கு…

குர்திஷ் பத்திரிகையாளரை கொடூரமாய் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

குர்து இன பத்திரிகையாளர் ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்ததற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குர்து இன பத்திரிகையாளரான முஹனத் அகிடியை(Muhanad Akidi Age-37) மொசூல்(Mosul) நகரில் சுற்றிவளைத்து பிணைக்கைதியாய் பிடித்து வைத்திருந்தனர். கடந்த 13ம் திகதி கஸ்லானி(Ghazlani)…

பிணங்களுடன் செல்ஃபி: 38 நோயாளிகளை தீர்த்துக்கட்டிய கொலைகார நர்ஸ்

இத்தாலியை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர் 38 நோயாளிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் லுகோ (Luco) நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் (Umbrto Hospital) டேனியலா போக்கியலி (Daniela Poggiali Age-42) என்ற பெண்மணி செவிலியராய் பணிபரிந்து வந்துள்ளார். இவர் தினசரி தனது வீட்டில் உள்ள…

7,000 பெண்களை பாலியல் அடிமைகளாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்: தினந்தோறும் அரங்கேறும் கற்பழிப்பு…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர். மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார்…

குர்து கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி விமானத் தாக்குதல்

கிளர்ச்சி அமைப்பான குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினரின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தின. துருக்கி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் இது குறித்து செவ்வாய்க்கிழமை தெரிவித்த விவரம்: இராக்கை ஒட்டியொள்ள துருக்கியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஹக்காரி மாகாணத்தில் தாக்லிகா என்ற இடத்தில் குர்திஸ்தான்…