உக்ரைனில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ரஷியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் வியாழக்கிழமையன்று தொலைபேசியில் பேசினார். அப்போது,…

“ஐஸிஸ் பிரிவினர், பிற பிரிவு முஸ்லிம்களை வேட்டையாடுகின்றனர்”

"ஐஸிஸ் தீவிரவாதிகள் பிற பிரிவு முஸ்லிம்களை வேட்டை"   இராக்கில் ஐஸிஸ் ஜிஹாதிக் குழுவினால் கைப்பற்றப்பட்ட நகரங்களிலிருந்து தப்பியோடிய இராக்கியர்கள், ஐஸிஸ் குழுவினர் , சுன்னி பிரிவைச் சாராத முஸ்லிம்களையும், பிற எதிரிகளையும், திட்டமிட்டு வேட்டையாடி வருவதாக , பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றனர். மொசுல் நகரின் முன்னாள் பிராந்தியத் தலைவர்…

அமெரிக்கா, பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த சதி – விமான…

சிரியாவில் இயங்கும் தீவிரவாதிகள் விமான நிலையங்களின் பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லுகிற விமானங்களில் இத்தகைய நவீன வெடிகுண்டுகளை வைத்து தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று தெரிகிறது. இது தொடர்பான உளவு தகவல்களால்…

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: ஈராக் எல்லைப்பகுதியில் குவிக்கப்படும் சவுதி படைவீரர்கள்

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் சண்டை நடத்தி வருகின்றனர்.இதன்போது ஈராக்கின் முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மந்திரலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில்  தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக் அதிகாரப்பூர்வமாக…

ஐசிஸ் தலைவர் அல் பக்தாதியின் அறைகூவல்

உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பழிவாங்குமாறு, இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐசிஸ் அமைப்பின் தலைவர் தனது போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை ஐசிஸ் அமைப்பு கைப்பற்றிய பின்னர் முதல் தடவையாக பேசிய அபு பக்கர் அல் பக்தாதி அவர்கள், ஒரு இஸ்லாமிய…

பர்மாவில் தொடரும் மதவன்முறைகளில் இருவர் பலி

பர்மாவில் மதக்கலவரம் நீடிக்கிறது பர்மாவில் இரண்டாவது நாளாக நீடிக்கும் மதக்கலவர வன்முறையில் நேற்றிரவு இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பர்மாவின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் முஸ்லீம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான வன்முறைகளில் இந்த இரு உயிர்பலிகள் நடந்திருக்கின்றன. நகரில் சுற்றித்திரிந்த புத்த மத குழுக்கள் கடைகள், வாகனங்கள் மற்றும் மசூதிகளை…

உலக முஸ்லீம்கள் புதிய இஸ்லாமிய அரசுக்கு வர ஐஸிஸ் அழைப்பு

இஸ்லாமிய கிலாஃபத்தில் வந்து குடியேற உலக முஸ்லீம்களை அழைக்கிறார் அல் பக்தாதி உலக முஸ்லீம்கள் இராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கோரியிருக்கிறார். இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது…

பர்மாவில் மீண்டும் முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தாக்குதல்

மியன்மாரின் (பர்மா) இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும்…

போர் நிறுத்தத்தை தொடர முடியாது என உக்ரைன் அதிபர் அறிவிப்பு

உக்ரைனில் போர் நிறுத்தத்தை தொடர முடியாது என நேற்று இரவு உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதியான டன்ட்ஸ்க்கை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் அல்லது ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கும்,…

இராக்கில் இஸ்லாமிய தனி நாடு: தீவிரவாதிகள் அறிவிப்பு

சிரியாவின் லடாக்கியா நகரை அடுத்த காரோ கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ஞாயிற்றுக்கிழமை ராணுவம்  பீரங்கி மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.   இராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை கிலாஃபத் கோட்பாட்டைப் பின்பற்றும் தனி இஸ்லாமிய…

ஈராக்கில் கடும் மோதல் – பிரதான நகரை கைப்பற்றியது இராணுவம்

ஈராக்கில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட திக்ரித் நகர் மீது அதிரடி தாக்குதல் நடத்திய அந்நாட்டு ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. கடந்த ஒன்பதாம் திகதி ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.  தொடர்ந்து அடுத்த இரண்டு நாளில் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தையும்…

இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர் சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூச்சுத் திணறலை எதிர்நோக்கியிருந்ததாக இத்தாலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மீன்பிடிப் படகில்…

உக்ரைனை தூண்டி விடுகிறது அமெரிக்கா: ரஷியா குற்றச்சாட்டு

அமெரிக்க அரசு உக்ரைனை தூண்டி விடுவதாக ரஷியா சனிக்கிழமை குற்றம்சாட்டியது. ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மாஸ்கோவில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்., "" உக்ரைன் தலைவர்களை மோதலில் ஈடுபடச் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.…

திக்ரித்தில் தாக்குதலை தொடங்கியது இராக் ராணுவம்: ஹெலிகாப்டர் மூலம் குண்டு…

இராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ராணுவம் சனிக்கிழமையன்று ஹெலிகாப்டர் மூலம் குண்டுகளை வீசி தீவிர தாக்குதலைத் தொடங்கியது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்டு லெவன்ட் (இ.எஸ்.இ.எல்) தீவிரவாதிகளின் பிடியில் இருவாரங்களுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும்…

ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவு – ரஷ்யா எதிர்ப்பு

சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த உக்ரைன், ஜார்ஜியா, மால்டோவா ஆகியவை ஐரோக்கிய யூனியனுடன் கூட்டாண்மை உடன்பாடு செய்து கொண்டுள்ளன. ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த உடன்பாடு, பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் இந்த நாடுகள் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மேற்கத்திய நாடுகளை சார்ந்திருக்கவும்,…

“ஐசிஸ் தீவிரவாதிகளால் பலர் படுகொலை”

இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐசிஸ், திக்ரித் நகரில் 160 முதல் 190 இராக்கிய இராணுவ வீரர்களை கொன்றிருக்கக் கூடும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. திக்ரித் நகரை, இந்த மாதத்தின் முற்பகுதியில் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகே இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று…

பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தும் விமான நிறுவனங்கள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கான சேவைகளை இடைநிறுத்தும் விமானச் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எமிரேட்ஸ், எத்திஹாட் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனமும் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீதான தாக்குதலை அடுத்து, விமானச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. நேற்று முன்தினம்…

அமெரிக்காவை தாக்க போவதாக வடகொரியா எச்சரிக்கை

ஹாலிவுட் நடிகர்கள் ஜேம்ஸ் ரோன்கோ, சேத்ரோஜன் நடிப்பில் கொமடி படம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. அதில் வடகொரியாவை அமெரிக்கா தாக்குவது போலவும், வடகொரியாவின் ஏவுகணைகளையும் ராணுவ தளங்களையும் அமெரிக்கா அழிப்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் வடகொரியா ஜனாதிபதி கிங்ஜாங்வுனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து அவரை அமெரிக்க…

சற்றுமுன்னர் அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் குதித்தார்கள்: 300 பேரை மட்டுமே…

ஈராக்கில் ISIS தீவிரவத அமைப்பினர் தொடர்ந்தும் தாக்குதலை, பலப்படுத்தி வருகிறார்கள். இன் நிலையில் ஈராக் இராணுவத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அமெரிக்கா அவர்கள் மீது வான் தாக்குதல் நடத்தவேண்டும் என்று ஈராக் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். அதனை ஓபாமா அவ்வளவாக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் சுமார் 300…

தீவிரவாதிகளால் சிறுமிகள் கடத்தப்படவில்லை: நைஜீரிய அரசு திட்டவட்டம்

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் சிறுமிகள் யாரும் கடத்தப்படவில்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில், உள்ள மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர். மேலும் அரசுப் படைகளால்…

ரஷ்யாவை கடுமையாக எச்சரிக்கும் ஒபாமா

யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை நிறுத்துமாறும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை தவிர்க்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை ரஷ்யா நிறைவேற்றாவிட்டால், மேலும் பொருளாதார தடைகளை…

மீண்டும் நைஜீரியாவில் பல பெண்கள் கடத்தல்

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் மேலும் பல பெண்களையும் சிறார்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனை நைஜீரிய அரசாங்க தரப்பு உறுதி செய்துள்ளது. கடந்த வாரங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட பொர்னோ பிரதேசத்தில் இருந்து சுமார் 60 பெண்களும் சிறார்களும் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது போராளிகளை விடுதலை…

இராக்: தீவிரவாதிகளின் பிடியில் விமான நிலையம்: பாக்தாதில் அமெரிக்க அமைச்சர்

இராக்கில் தால் அஃபார் விமான நிலையத்தை தீவிரவாதிகள் திங்கள்கிழமை கைப்பற்றி ராணுவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தால் அஃபார் நகர் மற்றும் அங்குள்ள விமான நிலையம் முழுவதும் தீவிரவாதிகளின் கட்டப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியா…