இலஞ்சம் வாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி நேபாளத்தில் சுட்டு கொலை

நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராணா பகதூர் பாம், (வயது 64). இவர்  மூன்று குற்றவாளிகளை விடுவிக்க இலஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, இவர் மீது, அந்நாட்டு…

லைபீரியாவின் முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு சிறை!

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவதற்குக் காரணமான உள்நாட்டுப் போருக்கு உதவிய மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஐ.நா. நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. அண்டை நாடான சியாரா லியோனில் செயல்பட்ட புரட்சிகர ஐக்கிய முன்னணி என்கிற…

சியாச்சினில் புதையுண்ட பாகிஸ்தான் வீரர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சியாச்சின் மலையில், பனிப் பாறையில் சிக்கி பலியான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலையில், ஜியாரி என்ற இடத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, ஆயிரம் மீட்டர் நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட பனிப் பாறை சரிந்து,…

இளம் பெண்களுடனான கேளிக்கைக்கு பல கோடியை செலவிட்ட மாஜி பிரதமர்

இளம் பெண்களுடனான கேளிக்கை விருந்துக்கு இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, 7 கோடி வெள்ளிக்கு மேல் செலவிட்டுள்ளார். இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர். அவர், செக்ஸ் தொழிலாளர்கள் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காகப் பல கோடி வெள்ளி செலவிட்டதாகப் புகார் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது,…

நியூட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்து இந்திய மாணவன் சாதனை

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளான். மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உலகுக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுகளுக்கான புதிர், 350 ஆண்டுகள்…

பேரணியில் சரமாரி துப்பாக்கிச் சூடு 12 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் நடந்த பேரணியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 பேர் பரிதாபமாக இறந்தனர். முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்திய  பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு உருது பேசும் மக்கள் பலர் பாகிஸ்தானில் குடியேறினர். இவர்களை உள்ளடக்கிய தனி மாநிலம் வேண்டும் என்று…

இந்து திருமண பதிவு சட்டத்திற்கு பங்களாதேஷ் அமைச்சரவை அங்கீகாரம்

இந்து முறைப்படி நடக்கும் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் குறிப்பாக பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்து திருமண பதிவு சட்டம் 2012 என்ற பெயரில் பங்களாதேஷ் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டதிற்குப் பின் அமைச்சரவை செயலாளர் முஷரப் ஹுசைன்…

பாதுகாவலருக்கு சீட் கேட்டு நடுவானில் விமானத்தில் கிலானி மகன் கலாட்டா

பாகிஸ்தான் தலைமையமைச்சர் யூசுப் ரசா கிலானியின் மகன், நடுவானில் விமானத்தில் தகராறு செய் Read More

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர்

அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிச்செல்லியை திருமணம் செய்தபிறகு கடின உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு ஒபாமா தீவிர அரசியலில் குதித்தார். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு மிச்செல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்…

ஆப்கானிஸ்தானில் சமாதான தூதுவர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை அரசுடன் ஒத்துழைக்க செய்ய சமாதான கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தூதுவராக இருந்த  அர்சலா ரஹ்மானி நேற்று தலைநகர் காபூலில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்பு தலிபான் தீவிரவாதியாக இருந்த இவர் பின்னர் மனம் திருந்தி ஆப்கான் அரசின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு…

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

ரஷியாவின் புதிய அதிபராக விளாடிமிர் புதின் 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் நேற்று தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் குதித்தனர். மக்களின் உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி…

பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த பிரிட்டிஷ் இளவரசர்!

பிரிட்டிஷ் ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்நிகழ்வை கொண்டாடும் வகையில் அங்கு பல்வேறு விழாக்கள் அமர்க்களமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஸ்காட்லாந்தில் நடந்த அரசு விழாவில் பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸ் (வயது 63) அவரது மனைவி கமீலா ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர்.…

சிரியாவில் தொடர் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஐ.நா. சபை தலையிட்டு கடந்த மாதம் 12-ந்தேதி முதல்…

ரஷ்ய விமானம் இந்தோனேஷியாவில் மாயம்

இந்தோனேசியாவில், 44 பேருடன் பறந்த ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் மாயமாகியது. ரஷ்யாவின் சுகோய் விமான நிறுவனம், இதுவரை போர் விமானங்களை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்த நிறுவனம் பயணிகள் விமானங்களை தயாரித்து வருகிறது. இப்படி தயாரிக்கப்பட்ட சுகோய் சூப்பர் ஜெட் விமானங்கள் இந்தோனேசியாவில் சோதனை ரீதியாக…

மூன்றாவது முறை அதிபரானார் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் (வயது 59) நேற்று மீண்டும் பொறுப்பேற்றார். ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்சினுக்கு பிறகு கடந்த, 2000-ம் ஆண்டில் அதிபரானார் விளாடிமிர் புடின். 2008ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். ரஷ்ய சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியை வகிக்க முடியாது…

பிரான்சின் புதிய அதிபரானார் ஹோலன்டா

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட்…

வங்கதேசம் : 309 ராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை

வங்கதேசத்தில் இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட கலவர வழக்கில் 309 இராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்க தேசத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25,26-ம் தேதிகளில் இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் இராணுவ மேஜர் ஜெனரல்…

ஒசாமா உடலைத் தேடி ஒரு பயணம்: கிளம்பினார் அமெரிக்கர் பில்…

அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் (54) கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவின் சீல் கடற்படை…

ரஷ்யாவில் இரட்டை குண்டுவெடிப்பு:15 பேர் பலி

ரஷ்யாவில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 15 பலியானார்கள். ரஷ்யாவின் காகசஸ் மாகாணத்தில் நடந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது. ரஷ்யாவின் முக்கிய பகுதியான காகசஸ் மாகாணப்பகுதியில் தான் உள்துறை…

எம்.பியாக பதவியேற்றார் ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டின் ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூசி (66) நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று கொண்டார். ராணுவ ஆட்சியை எதிர்த்ததால் கடந்த 25  ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூசி அரசு பதவியில் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. மியான்மர் நாட்டில் ஜனாதிபதி…

ஆப்கானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: ஒபாமா உயிர் தப்பினார்!

அல்குவைதா இ‌யக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவ் வியக்கத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வேளையில் ஆப்கானில் பல குண்டு வெடிப்பு நிகழ்‌ந்ததுள்ளது. இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா ரகசியப் பயணமாக ஆப்கான் சென்றிருந்தார். அங்கு தலைநகர் காபூலில்…

மியான்மர் செல்லும் ஐ.நா. செயலாளர், ஆங் சான் சூசி-ஐ சந்திக்கிறார்!

இந்திய பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. சபை பொது செயலாளர் பான்கி மூன், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மியான்மர் தலைநகர் யங்கூன் சென்றடைந்தார். ஐ.நா. உட்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக மியான்மரில் அண்மையில் ஜனநாயக ரீதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடந்தது. அதில்,…