நெய்ரோபி தாக்குதல் – 68 பேர் சாவு

கென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் காரணமாக 175 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வளாகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கென்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர்…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியது. கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த கியூரியாசிட்டி தனது பணியை தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை…

மெக்ஸிகோவில் நிலச்சரிவு: நூற்றுக்கும் அதிகமானோர் பலி

மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அகபுல்கோ என்ற இடத்திலிருந்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிகேல் ஒசாரியோ சாங் இச்செய்தியை வெளியிட்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் என்ரிக் பெனா நைட்டோ உடனிருந்தார். அங்குள்ள லா…

எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் புதிய மூலக்கூறு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் கிருமிகள் தங்களை தாங்களாகவே அழித்துக் கொள்ளும் வகையில், புதிய மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் வடிவமைத்துளளனர். இதன் மூலம் எயட்ஸ் கிருமிகளால் ஆரோக்யமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, உயிரிழப்பும் தவிர்க்கப்படும். எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டால் மரணம் நிச்சயம் என உலகமே அச்சப்படும் நிலையில், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும்…

ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர்…

ஏமன் நாட்டில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பினர் நடத்தியத் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் ஷாப்வா மாகாணத்தில் உள்ள மாய்ஃபா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். அதன்மீது அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த அல்-காய்தா தீவிரவாத அமைப்பு…

சிரியாவின் சமாதான மத்தியஸ்தராக உதவி புரிய தயார்: ஈரான் ஜனாதிபதி

சிரியாவின் சமாதான மத்தியஸ்தராக உதவி புரிவதற்கு தமது நாடு தயாராகவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானே தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டு கொள்கையின் ஒர் பகுதியாக ஈரான் இதனை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பேச்சுவார்த்தைகளை முன்நோக்கிக் கொண்டு செல்லதற்கான ஆக்கபூர்வமான பணிகளுக்காக கைகோர்க்க வேண்டுமெனவும்…

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்

பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார். அவரது குழுவைச் சேர்ந்த…

கன்னிப்பெண்களின் ரத்தத்தை கேட்ட மருத்துவமனை: சீனாவில் சர்ச்சை

சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் ரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாலியல் உறவு மூலம் பரவும் எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப்பெண்களின் ரத்தம் கேட்டு இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை…

சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது கிளர்ச்சியாளர்களே: ரஷ்யா

சிரிய கிளர்ச்சியாளர்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமைக்கான புதிய ஆதாரங்களை அந்த நாடு தம்மிடம் சமர்ப்பித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த ஐ.நாவின் அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டதும, பக்கச்சார்பானதும் ஒரு தலைப்பட்சமானது எனவும் ரஷ்ய பிரதி வெளிவிகார அமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம்…

பதினைந்து நாட்கள் கிணற்றில் உயிர்வாழ்ந்த சீனப்பெண்

கிணற்றில் தவறுதலாக விழுந்த சீனப்பெண் ஒருவர் பதினைந்துநாள் வெறும் மழைநீரை குடித்தும் மக்காச்சோளக்கதிர்களை சாப்பிட்டும் உயிர்தப்பியிருக்கிறார். சீனாவின் மத்திய பிராந்தியமான ஹெனான் பிராந்தியத்திலுள்ள ஷோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சு கியூ சூ என்கிற 38 வயதான பெண்மணி. இவர் செப்டம்பர் மாதம் முதல் தேதி வழக்கம் போல மருத்துவ…

வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்த முகாபே சூளுரை

ஜிம்பாப்வேயில் வெளிநாட்டு நிறுவனங்களை தேசியப்படுத்துவது எனும் தனது சர்ச்சைகுரிய திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அதிபர் ராபர்ட் முகாபே உறுதிபூண்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்றத் தேர்தலில், அதிபராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை முகாபே தெரிவித்தார். வெளிநாட்டுக்குச் சொந்தமான…

வெனிசுலா சிறைக்கலவரத்தில் 16 பேர் வெட்டிக்கொலை

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ள மராகாய்போ நகரின் சிறையில் கலவரம் மூண்டது. திங்களன்று இரவு முதல் இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொல்லப்பட்டனர்.…

அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் சாவு

அமெரிக்காவில் கடற்படைத் தளத்தில் 3 நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உயர் பாதுகாப்பு கொண்ட கடற்படைத் தளம் அமைந்துள்ளது. இந்தக் கடற்படைத் தளத்துக்கு ராணுவச் சீருடை அணிந்த 3 நபர்கள் திங்கள்கிழமை வந்தனர்.…

சிரியாவில் அப்பாவிகள் மீது விஷவாயு பிரயோகம்: ஐ.நா. குழு உறுதிப்படுத்தியது

சிரியாவில் அப்பாவி மக்கள் மீது மிகப்பெரிய அளவில் சரின் விஷவாயு பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. ரசாயன நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது அரசுத் தரப்பா அல்லது கிளர்ச்சியாளர்களா என்பது குறித்து ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிரியா தலைநகர் டமாஸ்கஸின்…

அறிவியல் உலகின் மிகப் பெரிய சாதனை

சூரிய மண்டலத்தை கடந்து சென்று முதன் முறையாக சாதனை படைத்துள்ளது வாயேஜர் 1 விண்கலம். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி வாயேஜர் 1 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இதற்கு துணை…

கடைசி அணு ஆலையை பராமரிப்புக்காக மூடும் ஜப்பான்

ஜப்பான் தன்வசம் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி அணு ஆலையை பராமரிப்புக்காக நிறுத்த ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், 2011 இல் சுனாமியால் ஃபுக்குசிமா அணு உலை நிர்மூலமாக்கப்பட்டதற்குப் பிறகு, தற்போது இரண்டாவது தடவையாக அந்த நாடு அணு சக்தி இல்லாமல் இருக்கப்போகிறது. ஃபுக்குசிமா விபத்துக்குப் பிறகு அங்கு இன்னமும் தொடர்ச்சியாக…

மிகவும் செலவு குறைந்த ராக்கெட்டை விண்ணில் ஏவியது ஜப்பான்

ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது. 37 மில்லியன் டாலர் மதிப்பிலான…

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா ரஷ்யா இடையே உடன்பாடு

சிரியவில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை அடுத்த ஆண்டு மத்திவாக்கில் முழுமையாக அழிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆறு அம்சத் செயற்திட்டம் ஒன்றை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வெளிப்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், தம்மிடம் இருக்கும் அனைத்து இரசாயன ஆயுதங்கள் குறித்த…

பூமியில் வெப்ப நிலை உயர்வால் பாதிப்பில்லை: விஞ்ஞானிகள்

சுற்றுச் சூழல் மாசுபாட்டால், பூமியின் வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்க்டிக் கடல் பகுதிகளில், கடல் நீர் உறைந்து, அங்குள்ள பனிப்பாறைகளின் அளவு கடந்த ஓராண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்…

ஆப்கானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலுக்கு மேற்கே அமைந்துள்ள ஹெராத் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதைத்தொடர்ந்து…

சிரியா மீதான தாக்குதல், மேலும் பயங்கரவாதத்தைத் தூண்டும்: புடின்

சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிரியாவின்…

உலக அளவில் இடம்பெயர்வோர் எண்ணிக்கை உயர்கிறது

முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும்…

சிரியாவில் இருதரப்பும் போர்க்குற்றம் புரிந்துள்ளன!

சிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை…