பாகிஸ்தானில் கடும் வெள்ளம்; 218 பேர் பலி!

பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள 23 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர்.  400 பேர் காயம் அடைந்துள்ளனர். 55 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 45இ லட்சம் ஏக்கர்…

பரமக்குடியில் கலவரம்; துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலி

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச் சாலையில் தலித் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இருவரின் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரது உடல்களும் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரச மருத்துவமனைகளுக்கு…

டில்லி தாக்குதல் உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் செயல்: சிதம்பரம்

இந்தியத் தலைநகர் டில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே…

லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை; கர்ணல் கடாபி

லிபிய குடியரசுத் தலைவர் கர்ணல் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் தலைநகரம் திலிபோலியை அண்மையில் கைப்பற்றினார்கள். இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கடாபியின் சொந்த ஊர் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்குதான்…

டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி

இந்தியாவின் டில்லி உயர் நீதிமன்ற வாளாகத்தினுள் இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கம்போல் இன்று காலை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தின் 5-வது நுழைவாயில் அருகே…

தமிழர்களை கொச்சைப்படுத்திய தினமலர் தமிழகத்தில் எரிக்கப்பட்டது

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட  மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி உயிர்த்தியாகம் செய்துக்கொண்ட தோழர். செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தி கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தோழர். செங்கொடி…

இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸ் அம்பலம்

மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது முக்கிய நபராக செயற்பட்டவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் திகதி பயங்கரவாதத்…

இந்திய கடற்படை கப்பலை வழிமறித்த சீனப் போர்க் கப்பல்

வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே…

தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி இளம்பெண் தீக்குளிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி (வயது 19) என்ற இளம் பெண் காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.   இதுபற்றிய காவல்துறை விசாரணையில், ராஜீவ்…

அமெரிக்காவை மிரட்டும் ‘ஐரீன்’ சூறாவளி

'ஐரீன்' சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட அட்லாண்டிக் பெருங்கடல்…

ஹசாரேவின் உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது!

லோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனையடுத்து அண்ணா ஹசாரே இந்திய நேரப்படி இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாநோன்பு போராட்டத்தை முடித்துக்கொண்டார். சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி அண்ணா ஹசாரே உண்ணாநோன்பை…

ராஜீவ் கொலை வழக்கு: மூவருக்கு 9-ம் தேதி தூக்கு

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அதிகாலை தூக்கிலிடப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில்…

வெற்றி அல்லது வீர மரணம்: கடாஃபி ஆவேசம்

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கர்ணல் கடாஃபியின் குடியிருப்பு வளாகம் நேற்று கிளர்ச்சிக்காரர்கள் வசம் வந்தது. இதனிடையே இரகசிய இடம் ஒன்றிலிருந்து நேற்று அறிக்கை விடுத்த கர்ணல் கடாஃபி, "வெற்றி அல்லது வீர மரணம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கிளர்ச்சிக்காரர்கள் மீது…

அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம்!

கடந்த 10 நாட்களாக உண்ணாநோன்பு இருந்து வரும் காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. அவரை எந்நேரத்திலும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராம்லீலா திடலில் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித…

அனல் பறக்கும் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம்

"லோக்பால் என்பது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக எங்களுடன் பேச வேண்டும் என அரசு தரப்பு விரும்பினால் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர்தான் பேச்சு நடத்த வர வேண்டும்" என மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே குழு கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு…

திரிபோலி கிளர்ச்சிக்காரர்கள் வசம்; கடாஃபியின் மகன்கள் கைது!

லிபியாவின் தலைநகர் திரிபோலிக்குள் கிளர்ச்சிப் படைகள் நேற்றிரவு நுழைந்ததை அடுத்து அந்நகரின் பல இடங்களில் தற்போதும் சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது. மோதல் முன்னரங்கு என்பது நகரின் பல பாகங்களிலும் காணப்படுகிறது என்றாலும், தலைநகரின் பெரும்பகுதி தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான கிளர்ச்சிப் படையினர் ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்திகளில்…

போர் நிறுத்தத்திற்கு லிபிய அரசு அழைப்பு

லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்து லிபிய இராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி இராணுவம் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

மகாத்மா காந்தியை மறந்த இந்திய சுதந்திர நாள் உரை

இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில் தேசபிதா மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இடம்பெற்றுள்ள சுதந்திர நாள் விழாக்களில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்ததேயில்லை. இதற்கு…

அண்ணா ஹசாரே உண்ணாநோன்புக்கு காவல்துறை அனுமதி

ஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹசாரே நாளை (19.8.2011) முதல் டெல்லி ராம்லீலா திடலில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தைத் துவக்க இருக்கிறார். கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும்…

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து…

10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா

சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல்…

சிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு

நேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்கினர். ஆனால், சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்துவிட்டார். "எந்த நிபந்தனைகளுமின்றி ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாநோன்பு இருக்க…